மூளைக்கு வேலை என்றால் கூடுதல் உற்சாகத்தோடு கலக்கும் வாசகிகளே, விதவிதமான புதிர்ப் போட்டிகள் உங்களுக்காக இங்கே வரிசைகட்டி வருகின்றன. அந்த வரிசையில் இதோ இன்னொரு புதிர்ப் போட்டி. விடையையும் உங்களைப் பற்றிய விவரங்களையும் பூர்த்தி செய்து, தபால் மூலமாக அனுப்பலாம். பூர்த்தி செய்த படிவத்தைப் புகைப்படமாக எடுத்து avalvikatan@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவும் அனுப்பலாம். அத்துடன், ‘செய்தி / சினிமா / சீரியல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளைப் பார்க்க நாம் பயன்படுத்தும் தளங்கள் (டிவி சேனல், ஓடிடி, யூடியூப், மொபைல் ஆப்) இப்போது மாறிக்கொண்டே இருக்கின்றன. நீங்கள் பார்ப்பது எந்தத் தளத்தில்... ஏன்?’ - ‘நச்’ சென்று சில வரிகளில் பகிருங்கள். சரியான விடையுடன்
`நச்’ வரிகளை சிறப்பாக எழுதும் 10 பேருக்கு தலா ரூ.500 பரிசுத் தொகை காத்திருக்கிறது.
புதிர்ப்போட்டி
கீழே 8 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான விடைகள் கட்டங்களில் இடமிருந்து வலமாக, மேலிருந்து கீழாக, கீழிருந்து மேலாக ஒளிந்திருக்கின்றன. கேள்விகளுக்குச் சரியான விடைகளைக் கண்டுபிடித்து எழுதுங்கள்.
1. இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர், ஐந்து முறை உலக சாம்பியன் பட்டங்களை வென்றவர் (10)
2. அடுத்த செஸ் ஒலிம்பியாட் நடைபெற இருக்கும் நாடு (4)
3. உலகின் முதல் இடத்தில் இருக்கும் செஸ் விளையாட்டு வீரர். நார்வே நாட்டைச் சேர்ந்தவர். பின் பாதி பெயர் மட்டும். (5)
4. 2019-ம் ஆண்டு பெண்கள் ரேபிட் சாம்பியன் பட்டத்தை வென்ற இந்திய வீராங்கனை. விஜயவாடாவைச் சேர்ந்தவர் (6)
5. தற்போதைய செஸ் ஒலிம்பியாட் (2022) போட்டியின் சின்னமாக இருக்கும் குதிரை யின் பெயர் (3)
6. செஸ் ஒலிம்பியாடில் ........ க்குதான் பதக்கம் (2)
7. உலக அளவில் இதுவரையில் நடந்திருக்கும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் அதிகப் பதக்கங்களைப் பெற்றாலும் குறைவான தங்கம் பெற்றதால் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு (5)
8. 18 தங்கப்பதக்கங்களை வென்று முதல் இடத்தில் இருக்கும் நாடு (9)


சரியான விடையுடன், இப்போது மக்கள் ஆடைகளை தேவைக்கும் அதிகமாக வாங்கிக் குவிக்கிறார்களா? உங்கள் வீட்டு அனுபவம் பகிருங்கள்... `நச்’ வரிகள் எழுதி ரூ.500 பரிசு பெறும் 10 பேர்...
1. திண்டுக்கல் ஜெயா, புதுடெல்லி
இப்போது மக்கள் தேவைக்கு அதிகமாக ஆடைகளை வாங்கிக் குவிப்பது மட்டுமல்ல; தேவையே இல்லாத போதும் வாங்கிக் குவிக்கிறார்கள் என்பதுதான் உண்மை. என் வீட்டில் என் இரண்டு பிள்ளைகளும் DP-யில் போட்டோ போடுவதற்காகவும், கல்லூரிக்கு விதவிதமாக உடை அணியவும் மாலுக்குச் சென்று உடைகளை வாங்கிக் குவிப்பது வாடிக்கையாகிவிட்டது. சில மாதங்களில் அவற்றை மூட்டையாகக் கட்டி வேண்டாம் என்று கூறி வயிற்றெரிச்சலைக் கொட்டிக்கொள்வதும் தொடர்கதையாகி விட்டது.
2. ஆர்.விசாலி, மன்னார்குடி
பொங்கல், தீபாவளிக்கு மட்டும் தள்ளுபடி தந்துகொண்டிருந்த ஜவுளி நிறுவனங்கள் அமாவாசைக்குக்கூட தள்ளுபடி தரத் தொடங்கிவிட்டார்கள். மலிவு விலை என்ற மாய விளக்கை நோக்கிப் பாயும் விட்டில் பூச்சிகளாக இருக்கும் மக்கள், தேவை இருக்கிறதோ, இல்லையோ... ஆடைகளை வாங்கி பீரோக்களை நிரப்புகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டியது அவசியம்.
3. சங்கரி வெங்கட், சென்னை-63
ஒண்ணு வாங்கும் விலைக்கு நாலு வாங்கலாமே என்று தள்ளுபடி சீஸனில் வாங்கி வந்தது போக, ரெண்டு வருஷமா கொரோனா பயத்தில் கடைக்கே போகாமல், ஆன்லைனில் ஆர்டர் பண்ணி வாங்கி, பிறகு ஃபிட்டிங் சரியில்லை, கலர் சரியில்லை என்று பீரோவில் அடுக்கி வைப்பது நடந்து வருகிறது.
4. எம்.ஆர்.மோஹன்ராம், மதுரை-14
என் அனுபவப்படி ஆடைகளைத் தேவைக்கு அதிகமாக வாங்கிக் குவிப்பது வீண் செலவுதான். பணம் படைத்தவர்கள் இச்செலவை கவனிக்க மாட்டார்கள். நடுத்தர மக்களுக்கு இதனால் பெரிதும் பண நெருக்கடி ஏற்படும். வருமானத்தைக் கருத்தில்கொண்டு செலவைக் குறைக்க வேண்டும் என்பதே என் ஆசை.
5. ஆர்.சாயிலக்ஷ்மி, சின்னாளப்பட்டி
கண்ணைக் கவரும் தள்ளுபடி, விலைக் குறைவு போன்றவற்றால் தேவைக்கு அதிகமாக ஆடைகள் வாங்கிக் குவித்தவர்களில் நானும் ஒருத்தி. தள்ளுபடி என்றதும் ‘சும்மா பார்த்துட்டு வரலாம்’ என்று போய், கணக்கில்லாமல் அள்ளி வந்திருக்கிறேன். ஒருமுறை உடுத்திய பிறகு, அதைக் கண்ணால்கூட பார்ப்பதில்லை என்பதால் தேவைக்கு அதிகமாகச் சேர்ந்து விட்டது.
6. ஆர்.பாரதி, சென்னை-19
அளவுக்கு அதிகமாக ஆடைகளை வாங்கிக் குவித்து, பின் சிறியதாகிவிட்டது என்று பாத்திரக்காரனுக்குப் போட்டு பிளாஸ்டிக் கூடை வாங்கும் அபாக்கியசாலி நான்.
7. பெ.செளந்தரவல்லி, சேலம்-3
முப்பது, நாற்பது வருடங்களுக்கு முன் ஒரு குடும்பத்தில் நான்கைந்து குழந்தைகள் இருந்த நிலையில் தீபாவளிக்கு ஓர் ஆடை, பள்ளிக்கு இரண்டு சீருடைகள் மட்டுமே சாத்தியம். ஆனால் இன்றோ, குடும்பத்துக்கு ஒன்று அல்லது இரண்டு குழந்தைகள். பிறந்தது முதலே போட்டோ ஷூட்... அளவுக்கு மீறிய செல்லம். பெண்கள் பெருவாரியாக வேலைக்குச் செல்வதால் ஃப்ளிப் கார்ட், மீஷோ, அமேசான், மின்ட்ரா என்று எக்கச்சக்க ஆப்ஸ். ஆன்லைன் மூலம் பணம் கொடுக்க முடிவதால் ஆடைகளை வாங்கிக் குவிக்கிறார்கள்.
8. எஸ்.பானுமதி, உடுமலைப்பேட்டை
அடுக்கி வைக்கப்பட்ட ஆடைகள் வருடக்கணக்கில் பிரித்துப் பார்க்காததால் மடிப்பு கலையாமல் கிழிகின்ற நிலைதான் இன்று. ஒருநாள் பரோலில் வெளியே வந்து மறுநாள் சிறைக்குள் செல்லும் கைதியின் நிலைதான் வாங்கிக் குவிக்கும் ஆடைகளுக்கு.
9. ஆர்.அம்மணி ரெங்கசாமி, வடுகபட்டி, தேனி
எனக்கு எளிதில் உபயோகப்படுத்தக்கூடிய சாதா சேலைகள்தான் பிடிக்கும். ஆனால், ஆசிரியராக இருக்கும் என் மகளோ, தனக்குப் பிடித்தது, டிவி விளம்பரங்களில் பார்ப்பது, தோழிகள் மற்றும் சக ஆசிரியர்கள் உடுத்தி வருவது, விசேஷங்களுக்கு அணிவது என்று வாங்கிய சேலைகள் பீரோவுக்குள் தூங்கிக் கொண்டிருக்கின்றன.
10. கே.ஸ்ரீலதா, திருநின்றவூர், சென்னை
திருமணமான புதிதில் ஆன்லைனில் ஏகப்பட்ட ஆடைகளை வாங்கிக் குவித்து அவற்றை சரியாக அணியாமல் வீணடித்து, பிறகு வருந்திய அவசரக்காரி நான். இப்போது திருந்திவிட்டேன். தீபாவளி, பொங்கல், பிறந்த நாள்... இவற்றுக்கு மட்டும் ஆடைகள் வாங்குகிறேன். நிறைவாகப் பயன்படுத்துகிறேன்.
மேலும் படிக்க புதிர்ப் போட்டி கொண்டாட்டம் - 44 - பரிசு ரூ.5,000