உத்தரப்பிரதேச மாநிலம் பரேலி பகுதியில் முகமது யாசீன் என்பவர் தன் மனைவி ஃபர்ஹா மற்றும் 4 வயது மகளுடன் வசித்துவந்துள்ளார். யாசீன் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர் எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த இரண்டு தினங்களுக்கு முன் கடுமையாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த யாசீன், மனைவி ஃபர்ஹானாவை அடித்து கொடுமைபடுத்தி, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் கடுமையான மன உளைச்சலால் பாதிக்கப்பட்ட ஃபர்ஹா ஆசிட்டில் மிளகாய் பொடியைக் கலந்து, யாசீன் தூங்கும் போது அவர் மீது ஊற்றிவிட்டு, மகளைத் தூக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளார்.

இதைத் தொடர்ந்து யாசீனின் அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அவரை மருத்துவமனையில் அனுமதித்திருக்கின்றனர். 40 சதவிகித தீக்காயம் ஏற்பட்டுள்ள அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதைத் தொடர்ந்து யாசீனின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் ஃபர்ஹா மீது ஐபிசி பிரிவு 326-ன் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், யாசீனின் சிகிச்சை முடித்த பின்பு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு மேலும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. காவல்துறை மனைவி ஃபர்ஹாவை தேடி வருகின்றனர்.
மேலும் படிக்க உ.பி: `ஆசிட்டில் மிளகாய் பொடி கலந்து...’ - கணவனின் கொடுமையால் மனைவி எடுத்த முடிவு