நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு - பொதுக்குழு வழக்கில் நடந்தது என்ன?

0

அ.தி.மு.க மூன்றாவது முறையாகப் பிளவுபட்டு, எடப்பாடி தலைமையில் ஒரு அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஒரு அணியாகவும், அ.தி.மு.க பெயரை வைத்துக்கொண்டே செயல்பட்டுவருகிறார்கள். ஜூலை 11-ம் தேதி இரண்டாவது முறையாகப் பொதுக்குழு நடைபெற்றபோது அதனை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது. ஜூலை 11-ம் தேதி காலை 9 மணிக்குத் தீர்ப்பளித்த நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழுவுக்குத் தடைவிதிக்க மறுத்துவிட்டார்.

எடப்பாடி, பன்னீர்

அதோடு, `கட்சி நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசாமல் ஏன் ஒவ்வொரு விஷயத்துக்கும் நீதிமன்றத்தை நாடுகிறீர்கள்?’ என்று பன்னீர்செல்வத்துக்குக் கண்டனமும் தெரிவித்தார்.

அந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றார் பன்னீர்செல்வம். அதனை விசாரித்த உச்ச நீதிமன்றம், ``எங்களது உத்தரவை, தவறாகப் புரிந்துகொண்டு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. மீண்டும் வழக்கை இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து நீதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டது. அந்த வழக்கு ஆகஸ்ட் 4-ம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ‘வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்றக்கோரி தலைமை நீதிபதியிடம் கடிதம் மூலம் முறையிட்டிருக்கிறோம். அதனால், வழக்கைத் தள்ளிவைக்க வேண்டும்’ என்று பன்னீர் தரப்பில் கோரப்பட்டது.

உச்சநீதிமன்றம்

உடனடியாக நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, `என் தீர்ப்பு மீது அதிருப்தியிருந்தால், தாராளமாக மேல்முறையீடு செய்துகொள்ளலாம். அதைவிடுத்து, நீதிபதியையே மாற்ற வேண்டும் என்று நீங்கள் எப்படிக் கேட்கலாம்? இது நீதிமன்றத்தையே களங்கப்படுத்தும் செயல். இதற்காக, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு கூடப் பதியலாம்’ என்று பதிலளித்தார்.

அதன்பிறகும், ஓ.பி.எஸ் தரப்பில் தலைமை நீதிபதியை அணுகியவர்கள், ‘மீண்டும் பன்னீர்செல்வம் குறித்து தனிப்பட்ட முறையில் பேசியிருக்கிறார். ஏற்கெனவே, வழக்கை வேறு நீதிபதிக்கு மாற்றக்கோரிய மனு நிலுவையில் இருக்கும்போது, அதே நீதிபதி வழக்கை விசாரிக்கக்கூடாது’ என்று கோரிக்கை வைத்தது.

சென்னை உயர்நீதிமன்றம்

அதனை பரிசீலிப்பதாக சொல்லி தலைமை நீதிபதியும் அனுப்பிவிட்டார். இந்நிலையில், ஆகஸ்ட் 5-ம் தேதி வழக்கு மீண்டும் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடமே விசாரணைக்கு வந்தது. அப்போது, `வேறு நீதிபதிக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறோம். தங்களிடமே விசாரணையைத் தொடர்கிறோம்’ என்றவாறு பல்டி அடித்திருக்கிறது பன்னீர் தரப்பு.

ஓ.பி.எஸ் தாப்பில் இதுபற்றிப் பேசியபோது, `எடப்பாடி தரப்புக்குத் தொடர் வெற்றிகள் குவிந்தாலும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பு என்பது எங்களுக்கு முக்கியமான வெற்றி. ஓ.பி.எஸ்-ஸைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தது மட்டுமல்ல, உச்ச நீதிமன்ற உத்தரவினைத் தவறாகப் புரிந்துகொண்டு தீர்ப்பளித்ததும் அதே நீதிபதி கிருஷ்ணன் ராமசாமிதான். அதனால்தான், அவருக்குப் பதிலாக வேறொருவருக்கு வழக்கை மாற்றக்கோரினோம்.

இரண்டாவது முறையும் நீதிபதி விமர்சனம் செய்ததால்தான் நாங்களும் மீண்டும் தலைமை நீதிபதியிடம் முறையிட்டோம். ஆனால், இதில் தலைமை நீதிபதி எந்தவித முடிவையும் எடுக்கவில்லை. அதனால், இதற்கு மேலும் தாமதித்தால் உச்ச நீதிமன்றத்தில் குட்டுவாங்க நேரிடும் என்பதால், நீதிபதி கிருஷ்ணன் ராமசாமியிடம் மன்னிப்புக் கோரும் நிலை ஏற்பட்டது.

ஓ.பி.எஸ், வைத்திலிங்கம்

அப்போது நீதிபதி, ‘இரண்டு நாள்களுக்கு முன்பு என்னிடம் சொல்லியிருந்தால் நானே வழக்கில் இருந்து விலகியிருப்பேன்’ என்று சொன்னார். அதோடு, மன்னிப்புக் கேட்டதை மனுவாகத் தாக்கல் செய்வதற்கு நாங்கள் ஒப்புக்கொள்ளவில்லை. தற்போது உச்ச நீதிமன்றத்தில் இருந்து உத்தரவு வாங்கி வழக்கை நடத்துவதால், அதனை கருத்தில்கொண்டே நீதிபதி விசாரிணை நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது” என்றனர்.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தாக்கல் செய்த மனுவை பதிவு செய்து கொண்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஏற்கெனவே இரண்டு முறை இந்த வழக்கு விசாரித்து கருத்தை வெளிப்படுத்தி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளதாக மனுதாரர் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதத்தின்படி, இந்த வழக்கை தலைமை நீதிபதியின் பரிசீலனைக்கு வைப்பதே பொருத்தமானது என கருதுவதால், இந்த வழக்குகளை புதிதாக விசாரிக்க நீதிபதியை நியமிக்கும் வகையில், தலைமை நீதிபதி முன் சமர்ப்பிக்கும்படி பதிவுத்துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த பரிந்துரையை ஏற்ற தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, அதிமுக பொதுக்கூட்டம் தொடர்பான வழக்குகளை விசாரிக்க நீதிபதி ஜெயச்சந்திரனை நியமித்துள்ளார். விரைவில் இந்த வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க நீதிபதியிடம் மன்னிப்புக் கேட்ட ஓ.பி.எஸ் தரப்பு - பொதுக்குழு வழக்கில் நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top