அறிவிப்பின்றி நகைகளை ஏலம் விட்ட நிதி நிறுவனம்... `சேவை குறைபாடு’ என குட்டுவைத்த நுகர்வோர் நீதிமன்றம்

0

அரியலூர் மாவட்டம், அரசு நகரைச் சேர்ந்தவர் செல்வராஜ். அரசு சிமெண்ட் ஆலையில் வேலைப்பார்த்து ஓய்வு பெற்ற இவர், அரியலூரில் இந்தியா இன்ஃபோ லைன் என்ற நிதி நிறுவனத்தில் தனக்குச் சொந்தமான 240 கிராம் தங்க நகைகளை நான்கு தவணைகளாக அடகு வைத்து ரூ.4,76,000 கடன் வாங்கியிருக்கிறார். இந்நிலையில், அந்த நிதி நிறுவனம் வழங்கிய கடனையும் வட்டியையும் திருப்பி செலுத்துமாறும் இல்லாவிட்டால் நகை ஏலம் விடப்படும் என்றும் செல்வராஜுக்குக் கடிதம் அனுப்பி இருந்தது.

அரியலூர் எஸ்.பி ஆபீஸ்

பின்னர் ஏலம் நடைபெறும் இடம் நாள் நேரம் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முறையான அறிவிப்பை அனுப்பாமல், அவரின் நகைகள் ஏலத்தில் விடப்பட்டன. தனது நகைகள் ஏலம் விடப்பட்டது என்பதை அறிந்த செல்வராஜ் நிதி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, ``எந்த தேதியில் எவ்வளவு தொகைக்கு நகைகள் ஏலம் விடப்பட்டது? யார் யார் ஏலத்தில் கலந்துகொண்டார்கள்?

நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையம்

ஏலத்தில் நகைகள் எவ்வளவு விலை போனது?” போன்ற விவரங்களை நிதி நிறுவனத்திடம் கேட்டிருக்கிறார். ஆனால் அவர்கள் முழுமையான எந்தவித தகவலையும் கொடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த செல்வராஜ் தனது நகைகளைத் திரும்பப் பெற்றுத் தருமாறும், சேவை குறைபாட்டிற்கு இழப்பீடு வழங்குமாறும் அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பிலும் சாட்சியங்களும் ஆவணங்களும் பரிசீலிக்கப்பட்டு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணைய நீதிபதி ராமராஜ், உறுப்பினர்கள் பாலு, லாவண்யா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில் நகைகளை அடமானம் வைத்து கடன் பெற்றவருக்கு முறையாக அறிவிப்பு அனுப்பாமல் ஏலம் விட்டது சேவை குறைபாடு.

தங்க நகைகள்

எனவே அவர் அடமானம் வைத்த 240 கிராம் தங்க நகைகளுக்கு இன்றைய சந்தை மதிப்பு தொகையை நிதி நிறுவனம் திருப்பி வழங்க வேண்டும். அந்த பணத்திலிருந்து நிறுவனத்துக்கு வர வேண்டிய கடன் மற்றும் சாதாரண வட்டியைக் கழித்துக் கொள்ள வேண்டும். சேவை குறைபாட்டிற்கு இழப்பீடாக ரூ.1 லட்சம் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.


மேலும் படிக்க அறிவிப்பின்றி நகைகளை ஏலம் விட்ட நிதி நிறுவனம்... `சேவை குறைபாடு’ என குட்டுவைத்த நுகர்வோர் நீதிமன்றம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top