லட்சுமி கடாட்சம்!

0

யாரும் எதிர்பார்க்காத கணத்தில் அது நிகழ்ந்தது. பேரிரைச் சலுடன் ஒரு ராட்சத அலை எழுந்தது மட்டும்தான் தெரியும். அதன்பின்னர் என்ன நடந்தது என்று எனக்கு ஒன்றுமே தெரியாது. நான் எங்கே இருக்கிறேன்... என்ன ஆனேன்... எதுவுமே தெரியவில்லை.

ஆனால், ஏதோ ஒரு பெரிய நீர்க்குமிழிக்குள் இருப்பது போன்றதோர் உணர்வு. வாயில் தொடர்ந்து ‘ராகவேந்திரா... ராகவேந்திரா...’ என்ற நாம ஜபம். கண்மூடிக் கண் திறப்பதற்குள் நாங்கள் இருந்த கடல்கரையிலிருந்து உள்ளே 200 அடி தூரத்தில் ஒரு பாறையின் மேல் நான் உட்கார்ந்திருந்தேன்.

என்ன ஆச்சு? எப்படி ஆச்சு?

ஒன்றுமே புரியவில்லை எனக்கு. முன்புறம் எல்லாம் கடல்... எனக்கு நீச்சல் என்பது சுத்தமாகத் தெரியாது. பாத்டப்பில்கூட நீச்சல் அடித்ததில்லை. அந்த அளவுக்குப் பயம். அதனால் நீச்சல் கற்றுக் கொள்ளவே இல்லை. ஆனால், நீச்சலே தெரியாத நான், கடலுக்குள் இவ்வளவு தூரத் துக்கு எப்படி வந்தேன்? இந்தப் பாறை மேல் எப்படி உட்கார்ந்தேன்? எதுவுமே நினைவில் இல்லை. ஆனால், நன்கு ஜம்மென்று அழகாக உட்கார்ந்திருக்கிறேன்.

திரும்பிப் பார்த்தால், எனக்குச் சிறிது தூரம் தள்ளியிருந்த பாறையின் மேல் எங்களுடைய செட் அசிஸ்டன்ட் ரெட்டி உட்கார்ந்திருந்தான். அவனும் ‘திருதிரு’வென விழித்துக்கொண்டிருந்தான். எங்கள் இருவரை யும் சுமார் 200 அடி தூரத்துக்குக் கொண்டு வந்து உட்காரவைத்தது யார்?

எங்கள் குழுவினர் எல்லாம் ரொம்ப தூரத்தில் இருப்பது தெரிந்தது. அதற்குள் உள்ளூர்வாசிகள் எல்லாம் டயரால் கட்டப் பட்ட ஒரு மிதவையை எடுத்தார்கள். நேரே என்னிடம் வந்தார்கள். என்னைத் தூக்கி அந்த டயர் மிதவையில் அமரவைத்தார்கள். இழுத்துக்கொண்டுபோய் கரையில் விட்டார் கள். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது.

“என்ன சார் நடந்துச்சு?” - என்று என் குழுவினரைக் கேட்டேன்.

“கடலலை பெரிசா எழும்பியதும் அப்படியேநாங்கள்லாம் கோயில் சுவத்தோடு ஒட்டி நின்றுவிட்டோம். கேமராவைக் காப்பாத்தணு மேன்னு அதைத் தூக்கிட்டு சில பேர் ஓடிட் டாங்க. அவங்களுக்குப் பெரிசா பாதிப்பில்லை. திடீர்ன்னு பார்த்தால் உங்களையும் இந்தப் பையனையும் காணோம். ரொம்ப மிரண்டுட்டோம் மேடம்.

ஆனால் ஒரு நிமிஷம்தான் எல்லாமே... அலை நார்மல் ஆனதும் பார்த்தால், நீங்க கடலுக்குள்ளே பாறை மேல உட்கார்ந்திருக்கீங்க. ஏன் மேடம் அங்கே போய் உட்கார்ந்தீங்க?” என்றார் குழுவில் ஒருவர்.

“அட லூஸே... நான் என்ன மெனக்கெட்டுப் போயா அந்தக் கல்லு மேல உட்கார்ந்தேன். நான் எங்கே போனேன்... என்ன ஆனேன்னு எதுவுமே தெரியாது. பந்து மாதிரி ஒரு பெரிய தண்ணீர் குமிழிக்குள் நான் இருந்தது மட்டும் தான் எனக்குத் தெரியும். அதுக்கப்புறம் என்ன நடந்ததுன்னு புரியல. இதோ நீங்க என்னைக் காப்பாத்திக் கூட்டிட்டு வந்துட்டீங்க..!” என்று சொல்லும்போதே எனக்குத் தொண்டை கமறி, குரல் கரகரத்தது.

யார் செய்திருக்க முடியும்?

ந்தச் சம்பவம் நடப்பதற்கு முதல் நாள். உடுப்பியில் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு சிறிய ராகவேந்திர சுவாமி கோயிலுக்குப் போய் வந்தேன். அப்படியே பாபா கோயிலுக்கும் போய்விட்டு, ‘நாளைக்கு ஷூட்டிங் நல்லா நடக்கணும்; வெயில் நல்லா அடிக்கணும். யாருக்கும் எந்தப் பிரச்னையும் வராமல்... எல்லாம் ஒழுங்கா நடக்கணும் சாமி’ என்று வேண்டிக்கொண்டு வந்தேன்.

அந்த வேண்டுதலால் அவர் என்னைக் காப்பாற்றினாரா? தெரியவில்லையே!

ஆனால் அந்த நீர்க்குமிழிக்குள் இருந்த நேரம், நிச்சயமாக ‘ராகவேந்திரா... ராகவேந்திரா...சுவாமி... ராயரே ராயரே...’ என்று நான் சொல் லிக்கொண்டே இருந்தது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். இதை ஏன் சொல்கிறேன் என்றால், சில நல்ல வாக்குகளைத் திருப்பித் திருப்பிச் சொல்வதால் நம்மைச் சுற்றி ஒரு நேர்மறையான அதிர்வலை இருந்துகொண்டே இருக்கும். வாயைத் திறந்து வார்த்தையாகச் சொல்லாவிட்டாலும் கூட, மனதளவில் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அது மிக நல்ல விஷயங்களைக் கொண்டுவந்து விடும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, என்னை அந்த இறைவன் எதற்காகவோ பூமியில் இருக்க வைத்திருக்கிறான் என்றும் நினைத்தேன். அதை உறுதிப்படுத்தும் விதமாக நடந்த சம்பவம் ஒன்று உண்டு; இன்று நினைத்தாலும் சிலிர்க்கவைப்பது!

1975-ம் ஆண்டு. மும்பையில் ஒரு இந்திப் பட ஷூட்டிங். திரு ஜிதேந்திரா, திரு வினோத் மெஹ்ரா ஆகியோருடன் ஷூட்டிங் முடித்துவிட்டு, தங்கியிருந்த ஹோட்டல் ரூமுக்கு வந்துவிட்டேன்.

அன்றிரவே நான் சென்னை திரும்பியாக வேண்டும். ஏனெனில் மறுநாள் எனக்குச் சென்னையில் ஷூட்டிங். இப்போது இருப்பது போல மணிக்கொரு விமானம் எல்லாம் அப்போது கிடையாது. ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டும்தான். திரு ஜிதேந்திராவும் சென்னை வந்துவிட்டு, அங்கிருந்து காரில் நெல்லூர் போகவேண்டும். திரு வினோத் மெஹ்ராவுக்கும் சென்னையில் வேறோரு படப்பிடிப்பு. எங்களுடன் நடித்த மூத்த நகைச்சுவை நடிகர் ஒருவர், “எல்லோரும் இன்னிக்கு மெட்ராஸ் போயிடுவோமா?” என்று சந்தேகமாகக் கேட்டார்.

“ஏன் அங்கிள் அப்படிச் சொல்றீங்க?” என்றேன்.

“தெரியலம்மா... என்னமோ தோணுது. இன்னிக்கு விட்டு நாளைக்கு ஃப்ளைட்டில் போகலாமா?” என்றார் மீண்டும்.

``ஐயய்யோ... என் புரொட்யூசர் என்னை உண்டு இல்லைன்னு ஒரு வழி பண்ணிடுவார். நான் போயே ஆகணும்” என்று நான் பதறினேன்.

ஜிதேந்திரா சாரோ, “ராமா நாயுடு சார் அவ்வளவுதான்... நாம எங்கே இருக்கோமோ அங்கேயே வண்டி எடுத்துட்டு வந்து அடிப்பார்” என்றார்.

எல்லோருமே பயந்துகொண்டு ஓடுவோம். அந்தக் காலகட்டம் அப்படி. தயாரிப்பாளர்கள்தான் எங்கள் தெய்வம். பயந்து வேலை செய்வோம். ஆக, “என்ன ஆனாலும் சரி.. ஃப்ளைட் பிடிச்சே ஆகணும்” என்று ஏர்போர்ட்டுக்குக் கிளம்பி வந்துவிட்டோம். அங்கே நடிகை ராணி சந்திரா, நடிகர் சோமன் இருவரையும் சந்தித்தேன். ராணி சந்திராவை எனக்கு மிகவும் பிடிக்கும். இருவரும் இணைந்து பல மலையாளப் படங்களில் நடித்துள்ளோம்.

சோமன் என்னைப் பார்த்துவிட்டு, “ஹேய் லக்ஷ்மி... எங்கே இப்படி?” என்றார்.

“மெட்ராஸுக்குத்தான்... நாளைக்கு ஒரு ஷூட்'' என்று அவர்களுடன் பேச ஆரம்பித்தேன். அந்த நொடியில்தான் விதி விளையாட ஆரம்பித்தது.

- கடாட்சம் பெருகும்...

கந்தனும் கண்ணனும்!

ந்தனுக்கும் கண்ணனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள். அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்.

குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்ககாலத் தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் `குழலன், கோட்டன்’ என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.

பகவத் கீதையை அருளிய பரந்தாமனை 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்கின்றன புராணங்கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.

வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் 'வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’ எனப் பாடி மகிழ்கிறாள்.

-என்.கணேசன், சென்னை-5


மேலும் படிக்க லட்சுமி கடாட்சம்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top