`பிரதமர் ஆசை இருக்கா? ஜெயலலிதாவுக்கு அழைப்பு ஏன்?' - 2003-ல் மோடி அளித்த பேட்டி #AppExclusive

0

குஜராத் சட்டசபை தேர்தலுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சியின்‌ அகில இந்தியத்‌ தலைவர்கள்‌ வரிசையில்‌ முன்னணிக்கு வந்திருப்பவர்‌ குஜராத்‌ முதல்வர்‌ நரேந்திரமோடி...

'வாஜ்பாய்‌, அத்வானிக்குப்‌ பிறகு மிகப்பெரிய கூட்டத்தைக்‌ கூட்டிக்‌ காட்டிய மோடி, பிரதமர்‌பதவிக்கும்‌ தகுதியானவர்‌' என்று ஆர்‌.எஸ்‌.எஸ்‌. - விஷ்வஹிந்து பரிஷத்‌ தலைவர்கள்‌ நினைக்கிறார்கள்‌.

புதுடெல்லியில்‌ நடந்த அனைத்துலக புலம்பெயர்‌ இந்தியர்கள்‌ (என்‌.ஆர்‌.ஐ.) மாநாட்டுக்கு வந்த மோடியை நாம்‌ ஸ்பெஷலாகச்‌ சந்தித்தோம்‌. தங்குதடையில்லாமல்‌ நம்மிடம்‌ மனம்‌ விட்டுப்‌ பேசினார்‌.

நரேந்திரமோடி

“குஜராத்‌ தேர்தல்‌ முடிவுகளை எதிர்பார்த்தீர்களா?இந்த வெற்றி மதரீதியாக மக்களைத்‌ துண்டாடியதால்‌தான்‌ கிடைத்தது என்ற குற்றச்சாட்டுக்கு உங்கள்‌ பதில்‌என்ன?”

“இது எதிர்பார்த்த வெற்றிதான்‌. காங்கிரஸ்‌ கட்சியின்‌ போலித்தனம்‌, இரட்டை வேடம்தான்‌ எங்கள்‌ வெற்றியைமேலும்‌ சுலபமாக்கி விட்டது. என்னை ஒழிக்க பதினான்கு காங்கிரஸ்‌ முதல்வர்கள்‌ குஜராத்‌ வந்து எதிராகப்‌ பிரசாரம்‌ செய்தார்கள்‌. தேர்தல்‌ கமிஷன்‌, மிகப்‌ பெரிய பத்திரிகைகள்‌, டி.வி. மற்றும்‌ சில வெளிநாட்டுச்‌ சக்திகளையெல்லாம்‌ எதிர்த்துப்‌ போராட வேண்டிய நிலைமை எனக்கு உண்டானது.

ஆனால்‌, மக்கள்‌ என்‌ பக்கம்தான்‌ என்று உறுதியாக நம்பினேன்‌. மதச்சார்பின்மை என்பது, இந்துமத விரோதக்‌ கொள்கையல்ல. அது புரியாத காங்கிரஸுக்கு இனி இந்தியாவில்‌ விலாசம்‌ கிடையாது. இத்தாலிதான்‌ இனி அவர்கள்‌ விலாசம்‌. இனிவரும்‌ தேர்தல்களிலும்‌ காங்கிரஸ்‌ பூண்டோடு அழிக்கப்படும்‌. காந்தியின்‌ கனவை நாங்கள்‌ நிறைவேற்றுவோம்‌...”

“இருந்தாலும்‌, இஸ்லாமியர்களுக்கு எதிராகக்‌ கடுமையான பிரசாரம்‌ தேவைதானா? குஜராத்‌ இன்று நிம்மதி இழந்து போயிருக்கிறதே?”

“பாரதிய ஜனதா கட்சி, அனைத்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கட்சி என்று சர்வதேச அளவிலான பொய்ப்‌ பிரசாரத்தின்‌ எதிரொலிதான்‌ இதுபோன்ற கேள்வி! நாங்கள்‌ தேசபக்தியுள்ள இஸ்லாமியர்களுக்கு என்றுமே எதிரிகள்‌ அல்ல. எங்கள்‌ கட்சியில்‌ தினமும்‌ ஆயிரக்கணக்கில்‌ இஸ்லாமியர்கள்‌ சேருகிறார்கள்‌. பலபதவிகளையும்‌ வகிக்கிறார்கள்‌. அதேசமயம்‌, தீவிரவாதத்தையும்‌ ஜிகாத்தையும்‌ பாகிஸ்தானையும்‌ ஆதரித்து நாட்டைச்‌ சிதறடிக்கும்‌ சக்திகளை எப்படிச்‌ சகித்துக்‌ கொள்ள முடியும்‌?

நிச்சயமாக குஜராத்தில்‌ இனி மதக்கலவரம்‌ வராது.அங்கு அமைதி திரும்பிவிட்டது. பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும்‌ அரசு நிவாரணம்‌ அளித்து வருகிறது...”

“இந்திரா, ராஜீவ்‌ ஆகிய தலைவர்கள்‌ தீவிரவாதத்‌தால்‌ தங்கள்‌ உயிரையே இழந்தவர்கள்‌. அப்படியிருக்க காங்கிரஸ்‌ கட்சியை நீங்கள்‌ 'தீவிரவாதத்தை ஆதரிக்கும்‌ கட்சி' என்றும்‌ 'பாகிஸ்தான்‌ ஆதரவாளர்கள்‌' என்றும்‌ சொல்வது எவ்வகையில்‌ நியாயம்‌?''

“இந்திரா, ராஜீவ்‌ ஆகியோர்‌ அரசாங்கத்தின்‌ தவறான கொள்கைகளுக்குப்‌ பலியானார்கள்‌. எனவே, இந்த வாதம்‌ எடுபடாது. வோட்டுக்காகவும் பதவிக்காகவும்‌ தங்களையே விற்கும்‌ கும்பல்தான்‌ காங்கிரஸ்காரர்கள்‌, சுதந்திரத்துக்கு முன்பிருந்த காங்கிரஸ்‌ இப்போது இல்லை. பதவிக்காகப்‌ பாரதத்தை அயல்நாட்டுச்‌ சக்திகளிடம்‌பேரம்‌ பேசும்‌ காலம்‌ இது.”

நரேந்திரமோடி

“பிரதமரும்‌ அத்வானியும்‌ திரும்பத்‌ திரும்ப குஜராத்‌ சம்பவங்களுக்கு வருத்தம்‌ தெரிவித்துள்ளார்களே... இது உங்களுக்குக்‌ காட்டப்படும்‌ மறைமுக எதிர்ப்பா?”

“கட்சியில்‌ என்மீது நம்பிக்கை இல்லையென்றால்‌, மீண்டும்‌ என்னை ஏன்‌ முதல்வராக ஆக்கியிருக்கிறார்கள்‌? குஜராத்தில்‌ ஏற்பட்ட சம்பவங்கள்‌ மிகவும்‌ துரதிர்ஷ்டவசமானவை என்பதில்‌ எங்களுக்கு எவ்வித  மாற்றுக்‌ கருத்தும்‌ இல்லை. அரசியல்‌ ஆதாயங்களுக்காக மதக்கலவரங்களைத்‌ தூண்டியது யார்‌? தேர்தலில்‌ ஜெயிக்க வேண்டும்‌ என்பதற்காக, அமைதியான. குஜராத்தைச்‌ - சிதைக்கப்‌ பார்த்தது யார்‌ என்ற கேள்விக்கு மக்கள்‌ அளித்திருக்கும்‌ விடைதான்‌ குஜராத்தில்‌ எங்கள்‌ வெற்றி...”

“குஜராத்‌ சம்பவங்கள்‌ உலகளவில்‌ இந்தியாவுக்குத்‌ தலைக்குனிவை ஏற்படுத்தவில்லையா? இதனால்‌ இமேஜ்‌ பாதிக்காதா?"

“குஜராத்‌ கலவரங்களைப்‌ பற்றிப்‌ பேசுகிறவர்கள்‌, சாதுர்யமாக கோத்ராவைப்‌ பற்றி தவிர்ப்பது ஏன்‌? அங்குதான்‌ விஷயமே இருக்கிறது. இந்தியாவின்‌ புகழைச்‌ சர்வதேச அளவில்‌ மட்டம்‌தட்ட, ஒரு குழு முழு வேகமாகச்‌ செயல்பட்டு வருகிறது. இதில்‌ பாகிஸ்தானியர்கள்‌, சில இந்திய பத்திரிகை முதலாளிகள்‌, கம்யூனிஸ்ட்டுகள்‌, அரசியல்வாதிகள்‌, காங்கிரஸார்‌ அடங்குவர்‌. இவர்கள்தான்‌ இந்தியாவைப்‌ பற்றி உலகம்‌ முழுவதும்‌ பொய்ப்‌ பிரசாரம்‌ செய்து, தலைக்குனிவை ஏற்படுத்துகிறார்கள்‌...”

“வருங்காலப்‌ பிரதமராகும்‌ வாய்ப்பு உங்களுக்கு இருப்பதாகக்‌ கூறுகிறார்களே?"

“அகில இந்திய பாரதிய ஜனதா கட்சியின்‌ பொதுச்செயலாளராக நான்‌ இருந்த போதுகூட, ஒரு எம்‌.பி-யின்‌, கார்ஷெட்டுக்‌காக ஒதுக்கப்பட்ட இடத்தில்தான்‌ டெல்லியில்‌ தங்கியிருந்தேன்‌. எனக்குப்‌ பெரிய ஆசைகள் கிடையாது. பதவியைத்‌ தேடிப்‌ போனதில்லை. காரணம்‌ நான்‌ என்றும்‌ ஒரு சக ஊழியன்‌. என்‌ முதல்‌ குறிக்கோள்‌ - குஜராத்தை இந்தியாவின்‌ முதல்‌ மாநிலமாக மாற்ற வேண்டும்‌ என்பதுதான்‌. நான்‌ ஒரு பிரம்மசாரி. என்‌ குடும்பமே என்‌ கட்சிதான்‌..."

நரேந்திரமோடி

“அமெரிக்காவில்‌ நீங்கள்‌ 'கெளரவயாத்திரை' நடத்தப்‌ போவதாக உங்கள்‌ கட்சியினர்‌ கூறுகிறார்களே?"

“கட்சியில்‌ பொறுப்பு வகிக்கும்போது அடிக்கடி நான்‌ அமெரிக்கா சென்று, அங்கு பி.ஜே.பி-யின்‌ கிளையைப்‌ பலப்படுத்தியிருக்‌கிறேன். அமெரிக்கவாழ்‌ இந்தியர்களுக்குப்‌ பாரதம்‌ மீது, நம்‌ கலை, கலாசாரம்‌, பாரம்பரியம்‌ மீது மிகுந்த பக்தியும்‌. மரியாதையும்‌ உண்டு. ஆகவே, அமெரிக்க பி.ஜே.பி. தலைவர்களான டாக்டர்‌ முகுந்த்‌ மோடி, டாக்டர்‌ சுதிர்‌ பாரேக்‌ போன்‌றோர்‌ என்னை நியூயார்க்கில்‌ கெளரவ யாத்திரை நடத்துமாறு கேட்டுக்‌ கொண்டனர்‌. அது பற்றி யோசித்து வருகிறேன்‌. குஜராத்‌ மாநிலத்துக்கு, அமெரிக்காவில்‌ வாழும்‌ இந்தியர்களின்‌ உதவியைப்‌ பெற இந்த யாத்திரை உதவக்கூடும்‌. லட்சக்கணக்கான குஜராத்திகள்‌ அமெரிக்காவில்‌ இருக்கிறார்கள்‌...”

“பி.ஜே.பி.யுடன்‌ மத்தியில்‌ கூட்டணியாக உள்ள கட்சிகளையெல்லாம்‌ விட்டுவிட்டு, உங்கள்‌ பதவியேற்பு விழாவுக்கு தமிழக முதல்வர்‌ ஜெயலலிதாவை அழைத்தீர்களே..அவர்‌ பா.ஜ.க-வுடன்‌ நெருங்கி வருகிறாரா?"

“ஜெயலலிதா ஒரு திறமையான, தைரியமான அரசியல்வாதி. பல சவால்களைச்‌ சந்தித்து, மீண்டும்‌ பதவிக்கு வந்திருக்கிறார்‌. அவரின்‌ கருத்துகள்‌, கட்டாய மதமாற்ற தடைச்‌ சட்டம்‌ போன்றவை எங்கள்‌ கருத்துகளுடன்‌ இணைந்துள்ளன. அந்த வகையில்தான்‌ அவரை பதவியேற்பு விழாவுக்கு அழைத்தேன்‌. தென்னிந்தியாவில்‌ காங்கிரஸை முறியடிக்க, ஜெயலலிதா மிகப்‌ பெரிய சக்தியாகக்‌ கைகொடுப்பார்‌. மிக வேகமாக அகில இந்திய அரசியலுக்கு வந்து கொண்டிருக்கிறார்‌. அவரை எதிர்ப்பவர்களின்‌ இரட்டை வேடத்தை மக்கள்‌ அறிந்திருக்கிறார்கள்‌!"

- புதுடெல்லியிலிருந்து பிரகாஷ்‌ எம்‌. ஸ்வாமி

(நாங்கள்‌ தேசபக்தியுள்ள இஸ்லாமியர்களுக்கு என்றுமே எதிரிகள்‌ அல்ல என்ற தலைப்பில் 22.01.2003 தேதியில் ஜூனியர் விகடன் இதழில் இருந்து...)

மேலும் படிக்க `பிரதமர் ஆசை இருக்கா? ஜெயலலிதாவுக்கு அழைப்பு ஏன்?' - 2003-ல் மோடி அளித்த பேட்டி #AppExclusive
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top