"திராவிட கட்சியின் துணையோடுதான் ஜெயிக்க முடியும் என்பது மூடநம்பிக்கை!" -ப.சிதம்பரம் @2003

0

"தமிழகத்தில் திராவிட கட்சிகளின் ஆட்சிக்கு மாற்றாக மூன்றாவது அணி அமைப்போம்" என்ற கோஷம் நீண்ட காலமாக தமிழகத்தில் ஒலித்தபடிதான் இருக்கிறது தேர்தலுக்குப் பல மாதங்களுக்கு முன்பே, இதோ வந்துவிட்டது மூன்றாவது அணி என்று பலமான சத்தம் கேட்கும்.

இப்படி குரல் கொடுக்கும் தலைவர்கள், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியே. கோபாலபுரத்திலோ அல்லது போயஸ் கார்டனிலோ கால் கடுக்க காத்திருக்க ஆரம்பித்து பத்து, இருபது ஸீட்களை வாங்கிக்கொண்டு திருப்தி அடைந்துவிடுவார்கள். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம் இருக்கின்ற நிலையில், இப்போதே மூன்றாவது அணிக்கான கோஷங்கள் கேட்க ஆரம்பித்துள்ளன. இதற்கான தீவிர முயற்சியில் இறங்கியிருக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் ஜனநாயகப் பேரவையின் தலைவருமான ப. சிதம்பரம். "இந்த முறையாவது இது சாத்தியமாகுமா?" என்பது உள்ளிட்ட கேள்விகளுடன் அவரைச் சந்தித்தோம். அவரிடம் பேசியதிலிருந்து.

Chidrambaram

"இங்கே மூன்றாவது அணி என்பது நீண்ட காலமாகவே கானல் நீராகத்தான் இருக்கிறது. இதை எப்படி சாதிக்க முடியும் என்று கருதுகிறீர்கள்?" 

"கடந்த காலத்தில் மூன்றாவது அணிக்காக முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. அந்த அணியில் யாருக்கெல்லாம் இடமுண்டு என்பதுகூடத் தெளிவாக எடுத்துச் சொல்லப்படவில்லை. மாற்று அணி என்பது தி.மு.க. அ.தி.மு.க - இந்த இரண்டு கட்சிகள் தவிர்த்த அணி எனச் சொல்லி வருகிறோம். இந்த இரண்டு திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தில் கடந்த முப்பத்தாறு ஆண்டுகளாக  மாறி மாறி ஆட்சி செய்து வருகின்றன. இந்தக் கட்சிகளைத் தவிர்த்து, மாற்று அணியை உருவாக்கும் இந்தக் கொள்கைக்கு மனதளவில் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கின்றன. போகப்போக பாருங்கள்."

“உங்களையே எடுத்துக் கொண்டால் 1998-ல் தி.மு.க. கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள். அடுத்து 1999-ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திராவிடக் கட்சிகளை தவிர்த்துவிட்டு போட்டியிட்டபோது மூன்றாவது இடத்தைத்தானே பிடித்தீர்கள்?"

"1999-ல் நான் சார்ந்திருந்த தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, இரண்டு தலித் கட்சிகள் துணையுடன் போட்டியிட்டதே தவிர, தி.மு.க - அ.தி.மு.க. அணிக்கு எதிராக மூன்றாவது அணி அமைத்து தேர்தலை சந்திக்கவில்லை. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், பாமக, ம.தி.மு.க, முஸ்லிம் அமைப்புகள், தலித் அமைப்புகளை உள்ளடக்கிய ஓர் முழுமையான அணி, இதுவரை திமுக - அதி.மு.க. இரண்டுக்கும் மாற்றாக எந்தத் தேர்தலிலும் போட்டியிட்டதில்லை. எனவே, கடந்த கால வெற்றி - தோல்விகளை வைத்துக்கொண்டு, எதிர்காலத்தில் மூன்றாவது அணியின் வெற்றிவாய்ப்புகளைத் தீர்மானிக்க முடியாது.

Chidrambaram

"திராவிடக் கட்சியின் துணையுடன் போட்டியிட்டால்தான் வெற்றி பெறமுடியும் என்கிற எண்ணமே நீங்கள் சொல்கிற எல்லா கட்சிகளிடத்திலும் இருக்கிறது. இந்த நிலையில் நீங்கள் சொல்வதெல்லாம் நடக்கிற காரியமா?”

"திரும்பவும் சொல்கிறேன். எந்தக் கட்சிகள் கூட்டணியில் இருக்க வேண்டும், எந்தக் கட்சிகள் தவிர்க்க வேண்டும் என்கிற தெளிவான பார்வை இதுவரை இல்லை. ஏதாவது ஒரு திராவிடக் கட்சியின் துணையுடன்தான் வெற்றி பெற முடியும் என்பது ஒரு மூடநம்பிக்கை, தமிழ்நாட்டில் வளர்ந்துவிட்ட பல மூடநம்பிக்கைகளை உடைக்கும்போது, இந்த மூடநம்பிக்கையும் தானாகவே உடைபட்டுப் போகும்"

“உங்கள் கட்சி சார்பில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் 'இன்டோர் மீட்டிங்'குகளை விடாமல் நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். இதன் மூலம் மட்டும் மாற்று அணிக்கான வெற்றியைச் சாதித்துவிட முடியுமா? மக்கள் பிரச்னைகளுக்காக போராட்டங்களில் இறங்க வேண்டாமா?"

"தமிழகத்தில் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் மூன்றாண்டுகள் இருக்கின்றன. நான் ஒரு திட்டம் வகுத்து, அந்தத் திட்டத்தின்படி செயல்பட்டு வருகிறேன். நீங்கள் சொல்வதுபோல் நான் பல கல்லூரிகளுக்கும் சென்று, மாணவ-மாணவிகள் மத்தியில் உரையாற்றுகிறேன் என்பது உண்மை. அதேபோல், பொதுக்கூட்டங்களிலும் பங்கு கொண்டு பிரச்னைகளைத் தெளிவாக மக்கள் மன்றத்துக்குக் கொண்டு போகிறேன். கல்லூரி மாணவ-மாணவிகளும் பொதுமக்களும் 2006-ல் நடைபெறப் போகும் தேர்தல் களத்துக்கு என்னோடு கரம் கோத்துக்கொண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்குத் திடமாக இருக்கிறது. அதில் எந்தச் சந்தேகமும் என்னிடம் இல்லை."

"முப்பத்தாறு ஆண்டுகால திராவிட ஆட்சிகளுக்கு முடிவு கட்ட வேண்டும் எனப் பொது மேடைகளில் முழங்கி வருகிறீர்கள். அதேநேரம், வழக்கறிஞர் தொழிலும் படுபிஸியாக இருக்கிறீர்கள். இப்படி மாறி மாறி இரண்டு குதிரைகளில் சவாரி செய்யும் உங்களால் மக்கள் பிரச்னைக்கு முழுமையாகக் குரல் கொடுக்க முடியுமா?"

"வக்கீல் தொழில்தான் என்னுடைய நம்பகத் தன்மையை அதிகரிக்கச் செய்திருக்கிறது. முழுநேர அரசியல்வாதிகளை - அதிலும் லட்சக்கணக்கில் செலவழிக்கும் அரசியல்வாதிகளை மக்கள் சந்தேகக் கண் கொண்டு பார்க்கிறார்கள் என்பதுதான் உண்மை. நான் அமைச்சராக ஒன்பது ஆண்டுகள் பணியாற்றி இருக்கிறேன். அந்தக் காலகட்டங்களில் என்னுடைய தொழிலுக்கு நான் விடுமுறை கொடுத்தேன் என்பதை மறந்துவிடக்கூடாது. வழக்கறிஞர் தொழிலில் உள்ள வசதி என்னவென்றால், எப்போது வேண்டுமானாலும் விடுப்பு எடுக்கலாம். எப்போது வேண்டுமானாலும் உள்ளே வந்து தொழிலைத் தொடர்ந்து நடத்தலாம். ஒரு சராசரி முழுநேர அரசியல்வாதி சுமார் எட்டு மணி நேரம் வெறும் பேச்சிலேயே செலவழிக்கிறார் என்பது என் கணிப்பு. அப்படி எட்டு மணி நேரத்தையும் வெறும் பேச்சுக்காகச் செலவழிப்பது என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. விருப்பமும் இல்லை."

Chidambaram

"மூன்றாவது அணி பற்றி செய்தியாளர் கூட்டத்தில் கலைஞரிடம் கேள்வி கேட்டபோது, தி.மு.க. இல்லாத ஒரு அணியை ப. சிதம்பரம் நினைத்துவிட்டார் என்றுதான் பொருள். அதனால், இனி தி.மு.க. அணியில் அவர் இருக்க வாய்ப்பில்லை என முரசொலி பத்திரிகையில் வந்திருக்கிறத?"

"சன் தொலைக்காட்சியிலும் மாலை நாளிதழிலும் வெளியான செய்திகளைப் பார்த்தேன். 'நண்பர் சிதம்பரம் கூறியுள்ளது போல, தி.மு.க. - அ.தி.மு.க. அல்லாத மூன்றாவது அணிகூட அவரது முயற்சியால் அமையக் கூடும்' என்றுதான் இருந்தது. எனவே, மூன்றாவது அணியை அவர் வாழ்த்தியிருக்கிறார் என்று எடுத்துக் கொண்டு, அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்."

"இன்னும் காங்கிரஸ்மீது உங்களுக்கு ஒருவிதக் காதல் இருக்கத்தான் செய்கிறது. தனியாகக் களத்தில் நின்று போராடுவதை விட்டுவிட்டு, பழையபடி தாய்க் கட்சிக்கே திரும்பும் எண்ணம் இருக்கிறதா?”

"காங்கிரஸிலிருந்து ஏன் வெளியே வந்தோம்? அதை யார் மறந்தாலும், நான் மறக்கத் தயாராக இல்லை! இன்றைய காங்கிரஸ் நிலை என்ன? மாநிலத்தில் ஏதாவது ஒரு தெளிவான முடிவை இங்குள்ளவர்களால் எடுக்க முடிகிறதா? தமிழகத்தில், எதிர்காலத்தில் தன்னுடைய அரசியல் நிலைப்பாடு என்ன என்பதை காங்கிரஸ் தலைமையால் இன்னும் தெளிவாக அறிவிக்க முடியவில்லை. மேலும், காங்கிரஸ் கட்சியிலுள்ள ஒரு பிரிவினர் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள் என்பது நிதர்சனம் சூழல் இப்படி இருக்கிறது. ஆகவே, மீண்டும் மீண்டும் எங்கள் விரல்களைச் சுட்டுக்கொள்ள விரும்பவில்லை. தவிர, மூன்றாவது அணியை காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து உருவாக்க முடியுமா, வெளியே இருந்து உருவாக்க முடியுமா எனத் தீவிரமாக யோசித்துப் பார்த்தபோது, வெளியே இருந்து உருவாக்குவதுதான் சாத்தியம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறோம். மூன்றாவது அணியை காங்கிரஸ் ஏற்றுக்கொண்டால், எங்களுடைய முயற்சி நிச்சயம் வெற்றி பெறும்."

- மை.பா. நாராயணன்

(04.05.2003 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் இருந்து...)

மேலும் படிக்க "திராவிட கட்சியின் துணையோடுதான் ஜெயிக்க முடியும் என்பது மூடநம்பிக்கை!" -ப.சிதம்பரம் @2003
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top