``370-வது பிரிவை மீட்டெடுப்பேன் என பொய்யான வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை" - குலாம் நபி ஆசாத்

0

ஆகஸ்ட் 5, 2019 அன்று ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தான 370-வது சட்டப்பிரிவை மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து பல்வேறு கண்டனங்களை மத்திய பாஜக அரசு எதிர்கொண்டது. இந்த நிலையில், நேற்று வடக்கு காஷ்மீரின் பாரமுல்லா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத் பேசுகையில், ``உள்துறை அமைச்சர் கொண்டு வந்த சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததாகச் சிலர் என்மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீர்

நான் ரத்து செய்வதற்கு எதிராக வாக்களித்துள்ளேன், நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் பற்றி எதுவும் தெரியாத இவர்கள், நான் 370வது சட்டப்பிரிவுக்கு எதிராக வாக்களித்ததாகக் கூறுகிறார்கள். பிரிவு 370-ஐ மீட்டெடுக்க மக்களவையில் சுமார் 350 வாக்குகளும், மாநிலங்களவையில் 175 வாக்குகளும் தேவைப்படும். இது எந்த அரசியல் கட்சியாலும் எட்டமுடியாத எண்ணிக்கை. ஆனால் காங்கிரஸ் 50 இடங்களுக்குள் சுருங்கி விட்டது, சட்டப்பிரிவு 370 ஐ மீட்டெடுப்பதாக அவர்கள் பேசினால், அவர்கள் பொய்யான வாக்குறுதிகளை வழங்குகிறார்கள்.

குலாம் நபி ஆசாத்

எனக்குப் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில் நம்பிக்கை இல்லாததால், எனது புதிய அரசியல் செயல்திட்டத்தில் 370-வது பிரிவை மீட்டெடுப்பதாக உறுதியளிக்கவில்லை. மாறாக, மாநில அந்தஸ்து, நிலம் மற்றும் உள்ளூர் மக்களுக்கு வேலைகள் ஆகியவற்றை மீட்டெடுப்பது ஆகியவற்றைத் தீவிரமாகச் செயல்படுத்துவேன். ஏனெனில் இவை நிறைவேற்றப்படும் வாக்குறுதிகளாகும். என்னுடன் நின்று எனது புதிய கட்சியின் அடித்தளமாக இருக்கும் எனது சகாக்களுக்கு நன்றி கூறுகிறேன், கடவுள் விரும்பினால், அடுத்த 10 நாட்களுக்குள் எனது புதிய கட்சி குறித்தான அறிவிப்பு வெளியிடப்படும்" எனத் தெரிவித்திருக்கிறார்.


மேலும் படிக்க ``370-வது பிரிவை மீட்டெடுப்பேன் என பொய்யான வாக்குறுதிகளை வழங்க விரும்பவில்லை" - குலாம் நபி ஆசாத்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top