`5 லட்சம் ஓட்டு பெருசா... 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ - பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்

0

சேலம், ஏற்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி பள்ளி மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் விழா பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவுக்கு தலைமை தாங்க ஏற்காடு அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சித்ரா, ஏற்காடு ஊராட்சி மன்ற தலைவர் சிவசக்தி, திமுகவை சேர்ந்த மாவட்ட கவுன்சிலர் புஸ்பராணி மற்றும் திமுக கவுன்சிலர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது . இலவச சைக்கிளுக்காக 43 மாணவ-மாணவிகள் காத்திருந்தனர்.

இந்த நிலையில் திமுக மற்றும் அதிமுக இரு தரப்பினரும் விழாவிற்கு வந்ததால் யாருக்கு முன்னுரிமை கொடுப்பது, யார் சைக்கிள் வழங்குவது என வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் மேடையில் சிறப்பு விருந்தினர்களை வரவேற்ற பள்ளி ஆசிரியர் ஒருவர், சட்டமன்ற உறுப்பினர் பெயரை குறிப்பிடும் முன், மாவட்ட கவுன்சிலர் பெயரை கூறியதால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக சைக்கிள் நிகழ்ச்சி தாமதமாக, மாணவ-மாணவிகள் வெகு நேரம் வெயிலில் காத்திருந்தனர். ‌ இதை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினர் தரப்பினர், `எம்.எல்.ஏ-வை அவமானப்படுத்தும் வகையில் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக’ கூறி பள்ளி தலைமை ஆசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது எம்.எல்.ஏ-வின் ஆதரவாளரான மாயவன் என்பவர் தலைமையாசிரியரிடம், `5 லட்சம் ஓட்டு வாங்கி எம்.எல்.ஏவானவங்க பெருசா, வெறும் 5 ஆயிரம் ஓட்டு வாங்குனவங்க பெருசா?’ என்று பேசியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் முற்றியது.

அதன் பின்னர் பள்ளி தலைமை ஆசிரியை, பள்ளி குழந்தைகளை வெகு நேரம் காக்க வைக்க வேண்டாம் என்று கூறி உடனடியாக அங்கு காத்திருந்த மாணவர்களை அழைத்து சைக்கிளை கொடுத்து விட்டு அங்கிருந்து கலந்து போக செய்தார்.

இதுகுறித்து ஏற்காடு அதிமுக எம்.எல்.ஏ., சித்ராவிடம் பேசியபோது, ``சைக்கிள் வழங்கும் விழாவுக்கு உரிய நேரத்தில் வராமல் காலம் தாழ்த்தியது தி.மு.க-வினர் தான். அதுவும், வந்தவுடனே ஏன், அதிமுகவினரை இந்நிகழ்ச்சிக்கு கூப்பிட்டிங்கனு தலைமையாசிரியரிடம் சண்டைக்கு போறாங்க. அதுமட்டுமல்லாம சைக்கிள் நாங்க தான் கொடுப்போம்னு சர்ச்சைக்கராமாக பேசினர்”என்றார்.

மேலும் தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜாவிடம் பேசியபோது, “பள்ளி நிகழ்ச்சியானது 3 மணிக்கு ஆரம்பிப்பதாக கூறிதான் தலைமையாசிரியர் எங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் இவர்கள் முன்னதாக வந்துவிட்டு பிரச்னை செய்யும் நோக்கில் பேசினர். மாணவர்கள் நீண்ட நேரமாக வெயிலில் நின்றதாக கூறப்படுவது முற்றிலும் உண்மைக்கு புறம்பானது” என்றார்.

தி.மு.க ஒன்றியச் செயலாளர் ராஜா

மேலும் இதுதொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் மாலதி பேசியபோது, ``பள்ளி நிகழ்ச்சிக்கு இருதரப்பினரையும் அழைத்ததே மற்ற பள்ளிகளுக்கு முன்உதாரணமாக இருகட்சியினரும் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்க வந்துள்ளனர் என்ற நல்ல எண்ணத்தில் தான். ஆனால் சிலர் தேவையில்லாமல் பேசி இந்நிகழ்ச்சியை திசைதிருப்பிவிட்டனர். மாணவர்களுக்கு தேர்வு நடந்து வருவதால் மதியவேளையில் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி வைத்துக்கொள்ளலாம் என்றுதான் சிறப்பு விருந்தினர்களை 3 மணியளவில் வருமாறு அழைப்பு விடுத்திருந்தோம். ஆனால் முன்னதாகவே எம்.எல்.ஏ வந்துவிட்டார். அதன்பின் வந்த தி.மு.கவைச் சேர்ந்த கவுன்சிலர்கள் வந்தனர். இதற்கிடையில் அவர்களுக்குள் யார் இவங்களெல்லாம் கூப்பிட்டது என்று வார்த்தைகள் விட பிரச்னையாக மாறியது” என்றார்.


மேலும் படிக்க `5 லட்சம் ஓட்டு பெருசா... 5 ஆயிரம் ஓட்டு பெருசா?’ - பள்ளி விழாவில் திமுக, அதிமுக-வினர் வாக்குவாதம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top