புதுச்சேரி: ``மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் முறைகேடு” - சிபிஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ்

0

புதுச்சேரி காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ``புதுச்சேரி மாநிலத்தில் மதுபான தொழிற்சாலைகளுக்கு அரசு பூர்வாங்க அனுமதி அளித்துள்ளதாக தெரிகிறது. பெரிய மதுபான தொழிற்சாலைகள் கொண்டுவருவதற்கு முகாந்திரம் இல்லை. அதனால் புதுச்சேரி இளைஞர்கள் எத்தனை பேருக்கு வேலை கிடைக்கும் என தெரியவில்லை. சட்டசபையில் அதற்கான பதில் கிடைக்கும் என எதிர்பார்த்தோம், ஆனால் கிடைக்கவில்லை. புதுச்சேரியில் போதிய அளவு மதுபான ஆலைகள் இயங்கி வருகிறது. இதில் உற்பத்தியாகும் மதுவை குடித்து ஏற்கனவே மக்கள் மயக்கநிலையில்தான் வாழ்கின்றனர். நாட்டிலேயே அதிக விதவைகள் உள்ள மாநிலமாக புதுச்சேரி காட்டப்படுகிறது. அப்படியிருக்க புதிய மதுபான தொழிற்சாலைகள் அமைக்க வேண்டிய அவசியம் என்ன? அதிக குடிநீரை எடுத்து பயன்படுத்தக்கூடிய ஆலைக்கு எப்படி அனுமதி தருகின்றனர்?

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 10,000 லிட்டர் நிலத்தடி நீரைத்தான் எடுக்க வேண்டும் என்ற மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவையும் முடக்கம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது. புதுச்சேரியில் ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறை உள்ளது. இதுபோன்ற நிலையில் அதிக நிலத்தடி நீரை எடுக்கும் தொழிற்சாலைக்கு அனுமதி தருவது மக்களை வஞ்சிக்கும் செயல். அதோடு மட்டுமின்றி மதுபான தொழிற்சாலைக்கு அனுமதி தருவதில் முறைகேடுகளும் நடைபெற்றுள்ளது. மதுபான ஆலை அனுமதியில் முறைகேடு நடந்திருப்பதாக பா.ஜ.க எம்எல்ஏக்களே புகார் கூறியுள்ளனர். அதற்கும் இந்த அரசு பதிலளிக்கவில்லை.

டெல்லி ஆம் ஆத்மி அரசின் மது கொள்கையில் ஊழல் நடந்திருப்பதாக கூறி சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. ஆனால் புதுச்சேரியில் பா.ஜ.க குற்றம் சுமத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பா.ஜ.கவின் இரட்டை நிலைப்பாட்டை காண்பிக்கிறது. டெல்லிக்கு ஒரு நீதி, புதுவைக்கு ஒரு நீதியா? இதில் கவர்னரின் நடவடிக்கை என்ன? புதுச்சேரியில் இயங்கி வந்த ஒரு மதுபான தொழிற்சாலையில் முறைகேடு நடைப்பெற்றதாக முந்தைய ஆட்சியில் ஆளுநர் நடவடிக்கை எடுத்து மூடினார்.

அங்கு குற்றங்கள் நடைபெற்றாதாக நீதிமன்றமோ, அரசோ உறுதிப்படுத்தவில்லை. தற்போது அந்த தொழிற்சாலைகளை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. எந்தவித விசாரணையும் இல்லாமல் அனுமதி வழங்கப்பட்டது எப்படி? ஏற்கனவே கூறிய முறைகேடுகள் சரிசெய்யப்பட்டு விட்டதா? 100 வயதை கடந்தவர்களுக்கு ரூ.7,000/- உதவித்தொகை வழங்குவதாக அரசு அறிவித்துள்ளது. மதுவை அதிகப்படியாக உற்பத்தியும், விற்பனையும் செய்ய அனுமதித்துவிட்டு 100 வயதை தாண்டியவர்களுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்குவது எப்படி சரியாக இருக்கும்? மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதுச்சேரியில் பெண்களே அதிகம் உள்ளனர். ஆண்களில் பலர் குறைந்த வயதில் உயிரை விடுவதற்கு மதுபழக்கமே காரணமாக உள்ளது. புதுச்சேரியில் போதை தடுப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளதற்கான நோக்கம் என்ன? ஒரு பக்கம் மது உற்பத்தி, விற்பனை. மறுபக்கம் போதை தடுப்பு அமைப்பா? கடந்த 2001-ம் ஆண்டு ரங்கசாமி முதல்வராக பதவியேற்றபோது புதுச்சேரியில் இருந்த மதுபான கடைகளின் எண்ணிக்கை 140 தான். ஆனால் தற்போது 500-க்கும் மேற்பட்ட மதுபான கடைகள் உள்ளன.

காங்கிரஸ் எம்.பி வைத்திலிங்கம்

இடைப்பட்ட காலங்களில் மற்றவர்கள் முதல்வர்களாக இருந்தபோது எந்த மதுபானக்கடைக்கும் அனுமதி தரவில்லை. உயர்த்தப்பட்ட அனைத்து மதுபான கடைகளும் முதல்வர் ரங்கசாமியால் அனுமதி அளிக்கப்பட்டதுதான். அதிக மதுபான கடைகளை திறப்பதும், மக்களை குடி மயக்கத்திற்கு தள்ளுவதுமே இந்த ஆட்சியின் நோக்கம். புதிய மதுபான ஆலைக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். காங்கிரஸ் சார்பில் சி.பி.ஐக்கு நேரடியாக மனு அளிப்போம். பதவியை தேடி காங்கிரஸை விட்டு அகில இந்தியளவில் வெளியேறுகின்றனர். அதேபோல குலாம்நபி ஆசாத், கபில் சிபல் ஆகியோர் வெளியேறியுள்ளனர். நாடு முழுவதும் பிரதமர் மோடியையும், பா.ஜ.கவை எதிர்க்கும் சக்தியாக காங்கிரஸும், ராகுல்காந்தியும் திகழ்கின்றனர். தேர்தலோ, போட்டியோ இன்றி ராகுல்காந்தியை தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்பதுதான் காங்கிஸாரின் விருப்பம்” என்றார்.


மேலும் படிக்க புதுச்சேரி: ``மதுபான தொழிற்சாலை விவகாரத்தில் முறைகேடு” - சிபிஐ விசாரணை கேட்கும் காங்கிரஸ்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top