வாசகர் மேடை: நிழல் அரசாங்கத்தில் நீங்கதான் முதல்வர்!

0

தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக்கினால் யார் நடிக்கலாம்?

எம்.எஸ்.பாஸ்கர். அமைதி, சாந்தம், மெச்சூரிட்டி, தலைமைப்பண்பு போன்ற நல்லகண்ணுவின் அனைத்து குணங்களையும் அட்டகாசமாக வெளிப்படுத்துவார்.

பர்வீன் யூனுஸ்

யார் நடிச்சாலும் அந்தப் படம் மூலம் தனக்குக் கிடைக்கும் பங்குத் தொகையையும் யாருக்கேனும் நன்கொடையாகத் தந்துவிடுவார் நல்லகண்ணு.

பெ.பாலசுப்ரமணி

வடிவேலு நடிக்கலாம், நிச்சயமாக விருதே கிடைக்கும்.

ஆசிக் ஜாரிஃப்

தகைசால் தமிழர் நல்லகண்ணு ரோலில் நடிக்க நடிகர் இளவரசு பொருத்தமானவர்.

பா.சக்திவேல்

டெல்லி கணேஷ் நடித்தால் நல்லகண்ணுவைக் கண் முன்னே கொண்டு வந்துவிடுவார்!

எம்.சேவியர் பால்

நாசர். அந்த எளிமையும் அப்பாவித்தனமும் கரெக்டாக இருக்கும்.

ராஜாசிங்

சாலமன் பாப்பையா நடித்தால் பொருத்தமாக இருக்கும்.

தனசேகரன்

ஆடுகளம் நரேன் பொருத்தமாக இருப்பார்.

பெரியகுளம் தேவா

விஜய்சேதுபதி நடித்தால் மிக இயல்பாக இருக்கும்.

எம்.வசந்தா

மலையாள நடிகர் இந்தரன்ஸ், ஐயா நல்லகண்ணுவாக நடித்தால் சிறப்பாக இருக்கும்.

IamJeevagan

தம்பி ராமையா

 த.சிவாஜிமூக்கையா, சென்னை.

‘கடன்பட்டார் நெஞ்சம்போல் கலங்கினான் இலங்கை வேந்தன்' என்ற வரி இலங்கையில் நிஜமானதுபோல் எந்த இலக்கிய வரி இப்போதுள்ள சூழலில் மிகப்பொருத்தம்?

குறுந்தொகை 40-வது பாடல். ‘செம்புலப் பெயல் நீர் போல' என்ற இலக்கிய வரியைப் போல ஒவ்வொரு பொருளின் விலையிலும் ஜி.எஸ்.டி கலந்துள்ளது.

கு.வைரச்சந்திரன்

‘தன் வினை தன்னைச் சுடும்.' பட்டினத்தாரின் இந்த இலக்கிய வரிகளுக்குப் பொருத்தமானவர் நாடு நாடாக அகதியாகச் சென்று கொண்டிருக்கும் கோத்தபய ராஜபக்சே.

வி.பஞ்சாபகேசன்

‘கிட்டாதாயின் வெட்டென மற...' ஹெச்.ராஜா - கவர்னர் பதவி.

அ.பச்சைப்பெருமாள்

‘யானைக்கு ஒரு காலம்னா, பூனைக்கு (புலிக்கு) ஒரு காலம்.' ஈழத் தமிழர்களை புலம் பெயர வைத்த இலங்கை அரசே, வெளிநாட்டில் வாழும் அவர்களிடம் பணம் கொடுத்து உதவும்படி இப்போது கேட்கிறது.

ச.பிரபு

‘எப்பொருள் யார்யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு.' சீமான் கதைகளுக்கும் அண்ணாமலை இருபதாயிரம் புத்தகங்களுக்கும் பொருந்தும்.

kayathaisathya

‘இன்று போய் நாளை வா' என்ற கம்பராமாயண வரிகள். தினம் தினம் அரசு அலுவலகங்களிலும், வங்கிகளிலும் இதைத்தானே கேட்கிறோம்.

balebalu

‘குடி உயர கோன் உயர்வான்' என்ற வரிகளைக் கொஞ்சம் மாற்றிப் பொருள் கொண்டால், டாஸ்மாக் சரக்குகளை டார்கெட் வைத்து விற்பது மிகச்சரியாகப் பொருந்தும்.

amuduarattai

‘இந்தக் கேள்வியை ஏன்தான் கேட்கிறாங்களோ' என்று உங்களுக்குத் தோன்றும் கேள்வி எது?

நடிகர் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற கேள்விதான்.

 ஜெ.ஜாஸ்லின் ஜோசஃப்,

கன்னியாகுமரி.

‘நடிக்க வராமலிருந்தால், நீங்கள் என்னவாகி இருப்பீர்கள்' என நடிகைகளிடம் கேட்பது.

மு.மதனகோபால்

தியேட்டர் கவுன்ட்டரில் ‘என்ன, சினிமாவிற்கு வந்தீங்களா?' என்ற கேள்வியும் ஹாஸ்பிடலில், ‘என்ன, டாக்டரைப் பார்க்க வந்தீங்களா?' என்ற கேள்வியும்.

மணிவண்ணன்.ச

ஸ்கூல் படிக்கும்போது கொஸ்டின் பேப்பர்ல இருந்த ஒவ்வொரு கேள்வியும்தான்.

ஆர்.பிரசன்னா

இந்த வயசுலேயே இவ்வளவு பெரிய தொப்பையா?

ரிஷிவந்தியா

...அதான் உங்க பையனுக்கு வேலை கிடைக்கலை. அதுக்குப் பதிலா இந்தப் படிப்புப் படிக்க வச்சிருக்கலாமே...?

எஸ்.செல்வம்

நீங்க என்ன ஆளுங்க?

 இரா.கமலக்கண்ணன், சித்தோடு

என் மனைவி தினமும், ‘இன்னைக்கு என்ன குழம்பு வைக்கட்டும்'னு கேட்குறதுதான். (நான் என்ன சொல்றேனோ அதற்கு நேர்மாறா ஒரு குழம்பு வைப்பாங்க... பழகிப்போச்சு!)

ராம்ஆதிநாராயணன்

‘தம்பிக்கு எந்த ஊரு? யார் வீட்டுப் பிள்ளை நீங்க?' என ஜாதியைத் தெரிந்துகொள்ள மறைமுகமாகக் கேட்கும் கேள்விகள்.

பெ.பாண்டியன்

‘ஏன் முடி கொட்டிடுச்சு?' அதான் கொட்டிடுச்சில்ல, அதை ஏன் கேக்கணும்?

twitter.com/vrsuba

‘என்னங்க... இந்தப் புடவை எப்ப வாங்கினதுன்னு ஞாபகம் இருக்கா?' என்று மனைவி கேட்பது. (நமக்குத்தான் ஒரு மண்ணாங்கட்டியும் நினைவில் நிற்காதே!)

RPRASANNA303030

கோபத்தில் இருக்கும் எடப்பாடி பழனிசாமியை கூல் செய்து ஒன்றுசேர ஓ.பன்னீர்செல்வம் என்ன செய்யலாம்?

அன்பு நண்பரைத் தூக்கிக் கடாசிட்டு, ‘கழகப் பொதுச்செயலாளர் எடப்பாடி அவர்களுக்கு'ன்னு ஒரு கடிதம். கண்கள் பனிப்பதும் இதயம் நனைவதும் இங்கும் நடக்கும்.

.மல்லிகா குரு

சசிகலாவின் போட்டோவை அனுப்பி ‘இரட்டைத் தலைமைக்கு ஒத்துக்குறீங்களா, இல்லைன்னா இனி மூன்று தலைமைதான்' என்று கடிதம் போட்டு இ.பி.எஸ்ஸுடன் ஒன்று சேரலாம்.

மு.ராம்

ஓ.பி.எஸ். தனது சட்டைப் பையில் இ.பி.எஸ் படத்தை பளிச்செனத் தெரியும்படி வைத்து ‘ஒற்றைத் தலைமையை ஏற்றுக்கொள்கிறேன்' என்றால் மட்டுமே பழனிசாமி கூல் ஆவார்.

ஆ.மாடக்கண்ணு

பா.ம.க நிழல் பட்ஜெட் தயாரிப்பதுபோல ஓ.பி.எஸ் நிழல் அரசாங்கம் ஒன்றை அமைத்து ‘அதிலும் நீங்கதான் முதல்வர்'னு சொல்லலாம்.

மன்னார்குடி இராஜகோபால்

இ.பி.எஸ்ஸின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தைத் தன் சொந்தச் செலவில் அச்சடித்துத் தமிழக மக்களுக்கு இலவசமாகக் கொடுக்கலாம்.

PG911_twitz

‘இரட்டைக் குழல் துப்பாக்கியில் முதல் குழல் நீங்கதான் அண்ணே' என அறிக்கை விடலாம்.

IamUzhavan

பி.ஜே.பி-க்குச் சென்றுவிட்டால் போதும், கூட்டணிக்கட்சிகூட பேசித்தானே ஆகணும்!

San8416

சமைத்துப் பழகுகிறேன் பேர்வழி என நீங்கள் செய்த காமெடிகள் என்ன?

இட்லிப் பாத்திரத்தில் தண்ணீரே ஊற்றாமல், இட்லிமாவைத் தட்டுகளில் ஊற்றி அடுப்பில் வைத்து, அந்த இட்லிப் பாத்திரம் செக்கச் சிவந்து, நெளிந்து வளைந்து, இன்றும் வரலாற்றைப் பறைசாற்றிக்கொண்டிருக்கிறது.

கி.சரஸ்வதி

கிறிஸ்துமஸ் கேக் செய்ய முயன்று, சரியான நேரத்தில் ஓவனை அணைக்க மறந்து, கரிக்கட்டையாகிவிட்ட கேக்கைக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு, அவசரமாக ஓடி பேக்கரியில் கேக் வாங்கி வந்தது. வீட்டாரின் கேலிக்குச் சொல்லவா வேண்டும்?

ஷாலினி ஜெரால்டு

‘சூப்பர் இஞ்சி டீ போட்டுத் தாரேன் பார்...' என்று சவால் தொனியில் சொல்லிவிட்டு, ‘அதீத இஞ்சி'யால் பால் திரிந்துபோய், என் மனைவியிடம் அசடு வழிந்து சிரித்ததை மறக்கவே முடியாது சாமீ!

நெல்லை குரலோன்

‘பிய்ந்துபோகாமல் ஒரு தோசையை எடுத்துக் காட்டுகிறேன்’ என்ற சபதமே பதினைந்து வருடங்களாக நிலுவையில் இருக்கிறது. இதில் எங்கே போய் சமைத்துப் பழக?!

கே.முருகன்

தேங்காய் சாதம் செய்ய முயன்றபோது, தேங்காய்த் துருவல், கடலைப்பருப்பு, முந்திரிப்பருப்பு வறுவல் எனப் பார்த்துப் பார்த்துச் செய்த நான் சோற்றைக் குழைய விட்டு விட்டேன். அப்புறம் என்ன... தேங்காய் சாதம் `தேங்காய்ப்புட்டு' ஆகிவிட்டது!

டி.சிவகுமார்

மனைவி, குழந்தைகள் ஊருக்குச் சென்றிருந்த சமயத்தில், குக்கரில் சோறு வைத்து லெமன் சாதம் செய்து சாப்பிட்டுப் பார்த்தால், வாயில் வைக்கமுடியாத அளவு புளிப்பு. பின்னர்தான் தெரிந்துகொண்டேன், ஒரு ஆள் சாப்பிடும் அளவு சாதத்துக்கு ஒரு முழு எலுமிச்சையும் பிழியக்கூடாதென!

IamUzhavan

இட்லி வெந்திருச்சான்னு வெறும் கையில் தொட்டுப் பார்த்தேன். கடைசியில் கை வெந்திருச்சு!

manipmp

உங்கள் சுவாரஸ்யமான எழுத்துக்குக் களம் அமைக்கும் மேடை இது. இங்கே உள்ள ஐந்து கேள்விகளுக்கு சுவாரஸ்யமான பதில்களை எழுதி அனுப்புங்கள். சிறந்த பதில்கள் பிரசுரிக்கப்படும். பரிசுத்தொகையும் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் வாசகர்கள் என்றால், பரிசுத்தொகையை அனுப்ப இந்தியாவில் உள்ள வங்கிக்கணக்கு விவரங்களைத் தெரிவிக்கவேண்டியது அவசியம். கேள்விகளை நல்லா படிங்க, அட்டகாசமான பதில்களை எழுதி அனுப்புங்க!

1. அருள்நிதியும் உதயநிதியும் இணைந்து ஒரு படத்தில் நடித்தால் அதன் கதை என்னவாக இருக்கலாம்?

2. சினிமாக்களில் குறியீடுகளைக் கண்டுபிடிப்பதில் ‘இது ரொம்ப அநியாயமால்ல இருக்கு' என்று உங்களுக்குத் தோன்றிய கண்டுபிடிப்பு?

3.காளான் பிரியாணி போல் ராகுல்காந்தி பாத யாத்திரையில் என்னென்ன புதிய யுக்திகளைக் கடைப்பிடிக்கலாம்?

4. ஹெட்போன், ஹெட்செட்களை நம் ஆட்கள் எப்படியெல்லாம் பாடாய்ப்படுத்து கிறார்கள்?

5. டீக்கடைகளில் நீங்கள் ரசிக்கும் விஷயம் எது?

உங்கள் பதில்களை அனுப்ப வேண்டிய முகவரி :

வாசகர் மேடை, ஆனந்த விகடன்,

757, அண்ணா சாலை, சென்னை 600 002. இ-மெயிலில் அனுப்ப: vasagarmedai@vikatan.com


மேலும் படிக்க வாசகர் மேடை: நிழல் அரசாங்கத்தில் நீங்கதான் முதல்வர்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top