உலக அளவில் பிரபலமானவர்கள், ஆட்சியதிகாரத்தில் பலநாடுகளுக்கு நெருக்கமானவர்கள் என உலகம் முழுவதும் அறியப்படும் நபர்களின் சாதாரண பொருள்கள்கூட பெரும்பாலான நேரங்களில் ஏலம் விடப்பட்டு அதிக தொகைக்கு விலைபோவதைப் பார்த்திருப்போம். சில சமயங்களில் பிரபலமானவர்களின் இறப்புக்குப் பின்னர்கூட இதுபோன்ற ஏலங்கள் நடைபெறும். ஒரு சில நேரங்களில், அத்தகைய பொருள்களை மியூசியங்களில் வைத்துப் பாதுகாக்கப்படுவதுமுண்டு.

அந்த வகையில், மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி, தன்னுடைய தேநீர் கோப்பையில் நனைத்த டீ பேக்-ஐ, eBay எனும் ஆன்லைன் வர்த்தக நிறுவனம், தன்னுடைய வலைதளப் பக்கத்தில் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. அதுவும், 12,000 டாலருக்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்திய மதிப்பில் அந்த டீ பேக்-கின் விலை கிட்டத்தட்ட ரூ.9.5 லட்சம் எனக் கூறப்படுகிறது.

மேலும், அந்த டீ பேக் பற்றிய சிறிய குறிப்பாக, `இது ராணி எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரியால் பயன்படுத்தப்பட்டது. 1990-களில் அவருக்காக, விண்ட்சர் கோட்டையிலிருந்து கொண்டுவரப்பட்டது' எனக் கூறப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், `வரலாற்றின் ஒரு பகுதியைச் சொந்தமாக்குங்கள்! விலைமதிப்பற்றது!' என்று இதில் குறிப்பிடப்பட்டிருக்கும் வாசகமே நுகர்வோரை ஈர்க்கும் விதமாக உள்ளது. அதோடு, பொருள்களின் நம்பகத்தன்மை குறித்து அளிக்கப்படும் சான்றிதழாக, இன்ஸ்டிடியூட் ஆஃப் எக்ஸலன்ஸ்(IECA) வழங்கிய சான்றிதழும் இணைக்கப்பட்டிருக்கிறது.
மேலும் படிக்க `வரலாற்றைச் சொந்தமாக்குங்கள்'- ஆன்லைனில் விற்கப்படும் ராணி எலிசபெத் பயன்படுத்திய டீ பேக் -விலை என்ன?