``பெரியார் மண்ணைப் பிரிந்து நாராயணகுருவின் மண்ணுக்குச் செல்கிறேன்!" - கேரள எல்லையில் உருகிய ராகுல்

0

பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் கன்னியாகுமரியில் கடந்த 7-ம் தேதி மாலை நடைப்பயணத்தை தொடங்கினார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த நான்கு நாள்களாக நடைப்பயணம் மேற்கொண்டார். இன்று காலை முளகுமூட்டிலிருந்து நடைப்பயணத்தை தொடங்கிய ராகுல் காந்தி, மாலையில் கேரளா எல்லையான தளச்சன்விளை பகுதியில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார். தளச்சன்விளை பகுதியில் தற்காலிக மேடையில் நின்றபடி மக்களிடம் பேசிய ராகுல் காந்தி, "தமிழ்நாட்டில் பாத யாத்திரை மிகவும் சுகமான அனுபவமான இருந்தது. யாத்திரையின் கொள்கைக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இந்தியாவை தற்போது பல நிறுவனங்களும், சிலரும் இணைந்து சாதி, மதரீதியில் பிரித்து ஒற்றுமை இல்லாமல் உருவாக்க துடிக்கிறார்கள். குறிப்பிட்ட சிலருக்கு நன்மை செய்வதற்காகவும், அவர்களுக்கு வேண்டியவர்களுக்கு நன்மை செய்வதற்காகவும் மக்களைப் பிரிக்கிறார்கள். அதற்காக மக்களிடத்தில் மோதலை உருவாக்குகிறார்கள்.

மேடையில் ராகுல் காந்தி

இந்தியாவில் அமைதியின்மையை உருவாக்குவதே ஆட்சியாளர்களின் லட்சியமாக உள்ளது. இத்தகைய சூழலில் மக்கள் ஒற்றுமையாக ஒருமைப்பாடாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய ஒற்றுமைப் பயணம் மேற்கொண்டு வருகிறேன். இந்தியா என்பது ஓரிரு முதலாளிகளுக்கு உரிய நாடல்ல. கோடான கோடி மக்களுக்கு உரிமையானது இந்த நாடு. இந்திய மக்கள் கடும் உழைப்புக்கு உரிய ஊதியம் கிடைக்கவில்லை. இதை மாற்றத்தான் இந்தப் பயணம்.

தமிழ்நாட்டு மக்களிடம் எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு உண்டு. எனவே மிகுந்த வருத்தத்தோடு உங்களிடமிருந்து விடைபெறுகிறேன். பெரியார் மண்ணை வருத்தத்தோடு பிரிந்து செல்கிறேன். ஆனால் நாராயண குருவின் மண்ணில் கால் பதிக்கிறேன் என்கிற மகிழ்ச்சியில் செல்கிறேன். நாராயண குருவும் பெரியாரும் ஒரே கருத்தைத்தான் வலியுறுத்தியுள்ளார்கள். ஏழை மக்களின் நலனுக்காக வாழ்ந்த பெரியவர்கள் அவர்கள். உங்கள் அனைவருக்கும் நன்றி" என்றார்.

ராகுல் காந்தி நடை பயணம்

நேற்று இரவு கேரள மாநிலத்தின் செறுவறகோணத்தில் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, இன்று காலை பாறசாலை பகுதியில் நடைப்பயணத்தை தொடங்கினார். கேரள மாநிலத்தில் 18 நாள்கள் நடைப்பயணம் மேற்கொள்ளும் ராகுல் காந்தி பின்னர் கர்நாடகா மாநிலம் செல்கிறார்.


மேலும் படிக்க ``பெரியார் மண்ணைப் பிரிந்து நாராயணகுருவின் மண்ணுக்குச் செல்கிறேன்!" - கேரள எல்லையில் உருகிய ராகுல்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top