காலை உணவுத் திட்டம்: ``இது செலவு அல்ல; நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன்" - முதல்வர் ஸ்டாலின்

0

முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் பிறந்த தினமான இன்று, அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

மதுரை நெல்பேட்டையில் நடந்த விழாவில் அமைச்சர்கள் எ.வ.வேலு, பி.மூர்த்தி, பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன், அன்பில் மகேஸ், கீதா ஜீவன் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். முதலில் சமையல் கூடத்தை பார்வையிட்டு உணவு வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.

விழாவில்

பின்பு காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய மு.க.ஸ்டாலின், "பள்ளிக்கு பசியோடு வருகிற குழந்தைகளுக்கு உணவு வழங்கிவிட்டு அடுத்ததாக வகுப்பறைக்கு அனுப்பும் திடத்தை தொடங்கியுள்ளோம்.

உணவு சாப்பிட்ட முதலமைச்சர்

தானிய உற்பத்தியில் தமிழகம் இன்று முதலிடத்தில் உள்ள நிலையில், யாரும் பசியோடு இருக்கக்கூடாது என்ற அடிப்படையில் மதுரை நெல்பேட்டையில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

102 ஆண்டுகளுக்கு முன்னால் நீதிக்கட்சி ஆட்சியில் ஆயிரம் விளக்குப் பகுதியில் மதிய உணவுத் திட்டம் தொடங்கப்பட்டது. அன்று ஆயிரம் விளக்கில் தொடங்கப்பட்ட திட்டம், இன்று தூங்கா நகரில் காலை உணவுத் திட்டமாக விரிவடைந்துள்ளது.

அமெரிக்காவில், ஐரோப்பாவில் காலை உணவு திட்டம் தொடங்கப்படுள்ளது. இதன் மூலம் மாணவர்கள் உடல் நலம் சிறப்பாக இருப்பதாகவும், பள்ளிக்கு வருகை அதிகரித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

விழாவில் உரையாற்றிய முதலமைச்சர்

பசித்த வாய்க்கு உணவாக, தவித்த வாய்க்கு தண்ணீராக கருணை வடிவமாக இத்திட்டம் உள்ளது. வரலாற்றில் இத்திட்டம் நிலைத்து நிற்கும். ஏழை எளிய ஒடுக்கப்பட்ட சமூக குழந்தைகள் சாப்பிடும்போது பார்க்க மகிழ்சியாக உள்ளது.

பண்டிதர் அயோத்தி தாசர் கேட்டுக்கொண்டதற்கிணங்க நீதிக்கட்சி ஆட்சியில் தியாகராயர் அவர்கள் மதிய உணவுத் திட்டத்தை தொடங்கினார். அதன் பின்பு காமராஜர் விரிவுபடுத்தினார். அதை அப்போது சிறப்பாக செயல்படுத்தியவர் கல்வித்துறையில் பணியாற்றிய பெரியாரின் பெருந்தொண்டர் நெ.து.சுந்தரவடிவேலு.

அண்ணா சிலைக்கு மரியாதை

அதன் பின்பு கலைஞர் ஆட்சியில் 1971-ல் ஊட்டச்சத்து திட்டத்தை கொண்டு வந்தார். பேபி ரொட்டி என்ற தொட்டத்தை கலைஞர் குழந்தைகளுக்காக கொண்டு வந்தார். அடுத்து, எம்.ஜி.ஆர் ஆட்சியில் மதிய உணவுத்திட்டம் சத்துணவு திட்டமாக விரிவுபடுத்தப்பட்டது. அதன் பின்பு 1989-ல் கலைஞர் அதை விரிவுபடுத்தி முட்டையுடன் உண்மையான சத்துணவு வழங்க உத்தரவிட்டார். அதை அப்படியே விரிவுபடுத்தி வாரம் 5 நாட்களும் முட்டை வழங்க உத்தரவிட்டார். ஜெயலலிதா ஆட்சியில் கலவை சாதம் அளிக்க உத்தரவிட்டார்.

மதிய உணவுத்திட்ட வரிசையில் காலை உணவுத்திட்டம் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. 1,14,000 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. விரைவில் இது இன்னும் விரிவுபடுத்தப்படும். ஒரு குழந்தைக்கு 12.75 பைசா செலவாகிறது. ஆனால், அது செலவு அல்ல. நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன். இலவசம், தர்மம், தானம், சலுகையில் கொடுக்கும் உணவு அல்ல. அரசுக்கு செலவும் அல்ல. அரசின் கடமை.

உணவு ஊட்டி விட்ட முதலமைச்சர்

பசிப்பிணி நீங்கிவிட்டால் மன நிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள். மனதில் பாடங்கள் பதியும். கல்வி ஒன்றுதான் நம்மிடமிருந்து யாராலும் பிரிக்க முடியாது."என்று பேசினார். பின்பு நெல்பேட்டையிலுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.


மேலும் படிக்க காலை உணவுத் திட்டம்: ``இது செலவு அல்ல; நிர்வாக மொழியில் அப்படி சொன்னேன்" - முதல்வர் ஸ்டாலின்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top