உடல்நல பாதிப்பு... இலங்கையில் அடைக்கலம் நாடும் நித்தியானந்தா... என்னதான் ஆச்சு?!

0

தக்வல் பாலியல் வழக்கு உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளில் சிக்கித்தவித்த நித்தியானந்தா, பின்னர் தலைமறைவானார். பின்னர், 'கைலாசா' என்ற தனித்தீவு வாங்கி அங்கு குடியேறிவிட்டதாகவும், அதற்கு தான் அதிபர் என்றும், பலதுறைக்கும் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவரே அறிவித்தார். அவர் உண்மையில் தனித்தீவு வாங்கியிருக்கிறாரா அல்லது ஏதேனும் ஒரு இடத்தில் பதுங்கி இருக்கிறாரா என்ற பல்வேறு கேள்விகளுக்கு இன்னும் விடைக்கிடைக்காமலேயே இருக்கிறது. இருந்தபோதிலும், இணையவழியில் லைவ் மூலம் அவ்வப்போது பேசிவருகிறார் நித்தியானந்தா.

நித்தியானந்தா

இந்நிலையில், கடந்த மே மாதம் நித்தியானந்தா உடல்நலக்குறைவுக் காரணமாக இறந்துவிட்டார் என்று தகவல் காட்டுத்தீபோல பரவியது. ஆனால், சிறிது நாள்களிலேயே “எனக்கு உடல்நிலை சரியில்லை என்பது உண்மை. எனக்கு 27 டாக்டர்கள் மருத்துவம் செய்தும், என்ன பிரச்னை என்பதைக் கண்டறிய முடியவில்லை. எனக்கு ஞாபகமறதியும் ஏற்பட்டுள்ளது.

ஆனால், இவற்றிலிருந்து எல்லாம் விரைவில் மீண்டும் வருவேன்” என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார் நித்தியானந்தா, “திரும்பி வந்துட்டேன்னு சொல்லு” என்று தன் கைப்பட காகிதத்தில் எழுதும் வீடியோவையும் அதோடு சேர்த்து வெளியிட்டு தனது இருப்பை உறுதி செய்திருந்தார். அவருக்கு உடலநலக்குறைவு ஏற்பட்டதுபோல், சோர்வாக இருக்கும் சில போட்டோக்களும் வெளியானது.

நித்தியானந்தா விளக்கம்

இதுஒருபுறமிருக்க, நித்தியானந்தா சமாதி நிலைக்கு சென்றிருகிறார் என்றும் அதிலிருந்து வந்தபின்னர் 21 நாள்கள் ஆன்மிக பயிற்சி வகுப்பை நடத்துவார் என்றும் தகவல் பரப்பினர் அவரின் சீடர்கள்... "அடுத்த 200 ஆண்டுகளுக்கு நான் வாழப்போகிறேன்டா. அந்த அளவுக்கு உடம்பைத் தயார் பண்ணியிருக்கேன். நீ உட்கார்ந்து ட்ரோல் பண்ணிக்கிட்டே இரு" என்று சில மாதங்களுக்கு முன்பாக வீடியோ ஒன்றில் உரையாற்றியிருந்தார் நித்தியானந்தா.

இந்நிலையில்தான், கைலாசா தீவின் வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கும் ஆனந்த சுவாமி என்பவர், ஆகஸ்ட் மாதம், இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் எழுதியதாகக் கூறப்படுகிறது. அந்தக் கடிதத்தில், ``ஸ்ரீ நித்தியானந்தா பரமசிவம் சுவாமிகளின் உடல்நிலை மிகவும் மோசமான இருக்கிறது. தற்போது கைலாசாவில் உள்ள மருத்துவ வசதிகளைக்கொண்டு அவரின் உடலுக்கு என்ன என்பதைக் கண்டுபிடிக்க மருத்துவர்களால் முடியவில்லை. தற்போதைய நிலையில், நித்தியானந்தாவுக்கு அவசர மருத்துவச் சிகிச்சை தேவை. இலங்கை அரசு அவருக்கு அடைக்கலம் கொடுக்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்க

அவரின் மருத்துவத்துக்கு உதவி செய்வதுடன், அவரின் பாதுகாப்பையும் உறுதிசெய்ய வேண்டும். நித்தியானந்தாவின் மருத்துவச் சிகிச்சைக்குத் தேவையான அனைத்துச் செலவுகளையும் கைலாசா அரசே ஏற்றுக்கொள்ளும். அவருக்குத் தேவையான லட்சக்கணக்கான டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை கைலாசா அரசு வாங்கிக்கொடுக்கும். அந்த அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உங்கள் நாட்டு மக்களுக்குக் கொடுத்துவிடுகிறோம். நித்தியானந்தாவுக்கு அடைக்கலம் கொடுக்கும் பட்சத்தில் நித்யானந்தா இலங்கையில் முதலீடு செய்வார்" என்று தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

உடல்நிலை மோசமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளநிலையில், 4-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆவணித்திருவிழாவை முன்னிட்டு லைவ் வீடியோவில் வந்து அதிர்ச்சியையும் குழப்பத்தையும் ஏற்படுத்திருக்கிறார் நித்தியானந்தா.

இதுதொடர்பாக நித்தியானந்தாவின் நகர்வுகளை உன்னிப்பாக கவனித்துவருபவர்களிடம் பேசினோம். ``நித்தியானந்தா வனாடூ எனும் தீவில் மிகவும் குறைவான நபர்களுடன் வசித்து வருகிறார் என்பது தகவல். அவருக்கு தற்போது மிக கடுமையாக உடல்நலக்குறைவு ஏற்பட்டியிருக்கிறது. அதன்படி, சிகிச்சைக்காக இலங்கைக்கு செல்ல அனுமதி கேட்டு கடிதம் எழுதியது உண்மைதான்.

நித்தியானந்தா

தற்போது இலங்கையும் கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருப்பதால், முதலீடு, பல லட்சம் டாலர் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் என்று ஆசையை தூண்டியிருக்கிறார். ஆனால், இலங்கைத் தரப்பில் இன்னும் பதில் எதுவும் கொடுக்கப்படவில்லை. இந்த விவகாரம் வெளியானதால், செப்.4-ம் தேதி மாலையில் லைவ் வீடியோ ஒன்றை கிளப்பிவிட்டியிருக்கிறது நித்தி தரப்பு. அதாவது, ஆவணி திருவிழாவுவை முன்னிட்டு காட்சியளிப்பதுபோல நித்தியானந்தா லைவ் வந்திருக்கிறார். ஆனால், இது ஒரிஜினல் இல்லை. தலைபாகை அணிந்தும், கிரீடம் அணிந்தும் இரு பழைய வீடியோக்களை ஒன்றிணைந்து வெளியிட்டு இருக்கிறார்கள். இதன்மூலம், நித்தி ஆக்டிவ்-வாக இல்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை இலங்கை அரசு நித்திக்கு அனுமதி கொடுத்தால், அவரின் நிலைமை வெட்டவெளிச்சமாகலாம்" என்றனர்..


மேலும் படிக்க உடல்நல பாதிப்பு... இலங்கையில் அடைக்கலம் நாடும் நித்தியானந்தா... என்னதான் ஆச்சு?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top