அதி தீவிர `வீகன்' உணவு, இறந்துபோன குழந்தை, தாய்க்கு ஆயுள்தண்டனை: நடந்தது என்ன?

0

அசைவ உணவுகளை தவிர்த்து, விலங்குகளிடமிருந்து பெறப்படும் முட்டை, எண்ணெய் போன்ற உணவுகளையும் தவிர்த்து, மேலும் பால் மற்றும் `டயரி' பொருள்கள் என்று அழைக்கப்படும் பனீர், தயிர், சீஸ், நெய் போன்ற பால் சம்பந்தப்பட்ட பொருள்களையும் தவிர்க்கும் சைவ உணவுமுறையே 'வீகன்' உணவுமுறை. `வீகனிசம்' என்ற உணவு முறையைக் கடைப்பிடிப்பவர்கள் `வீகன்ஸ்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

ஷீலா ஓ லியரி

இதை அதி தீவிர சைவம் என்றும் அழைக்கலாம். இதை பின்பற்றுபவர்களை தமிழில், `நனி சைவத்தினர்' என்று குறிப்பிடுகிறார்கள். வீகன் உணவு முறையை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கையானது, கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் அதிகரித்துள்ளது.

இவர்கள் சந்தையில் உள்ள பெரும்பாலான உணவு உற்பத்தி பொருள்களை புறக்கணிக்கின்றனர். அதற்கு முக்கியக் காரணங்கள் உடல் நலன், விலங்குகளின் நலன் ஆகியவை எனக் குறிப்பிடுகின்றனர். வணிக நோக்கால் இயற்கைக்கு மாறான முறையில் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை தவிர்க்க வேண்டும் என்பதே இவர்கள் நோக்கம். பெரும் வர்த்தக நோக்கத்துடன் செயல்பட்டுவரும் பால் பொருள்கள் உற்பத்தி செய்யும் கூடங்களில் லாப நோக்கத்துக்காகக் கால்நடைகள் துன்புறுத்தப்படுகின்றன எனக் கருதும் இவர்கள் அந்த உணவுப்பொருள்களை தவிர்க்கின்றனர்.

இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி ஷீலா ஓ லியரி, ரைய் ’வீகன்’ உணவு முறையை அதி தீவிரமாக பின்பற்றிவந்தனர். ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள கேப் கோரலில் வசித்த இந்த தம்பதிக்கு நான்கு குழந்தைகள் இருந்தனர்.

ஷீலா ஓ லியரி

இந்த தம்பதி கடந்த சில ஆண்டுகளாகவே வீகன் உணவுப் பழக்கத்தை தீவிரமாகக் கடைப்பிடித்து வந்தனர். அத்துடன் தங்கள் நான்கு குழந்தைகளுக்கும் வீகன் உணவுமுறைப்படி உணவுகளைக் கொடுத்து வந்தனர். குழந்தைகள் மெலிந்த நிலைக்கு வந்தனர். கடைசியாக பிறந்து, 18 மாதங்களான ஆண் குழந்தை எஸ்ரா-வுக்கும் தாய்ப்பாலை ஊட்டியதோடு மாம்பழம், ஆப்பிள் போன்ற பழங்கள், பச்சை காய்கறிகளை மட்டுமே கூடுதல் உணவாகப் பெற்றோர் அளித்துள்ளனர்.

ஊட்டச்சத்து குறைப்பாட்டால் மெலிந்த அந்தக் குழந்தை 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மூச்சுத் திணறி இறந்தது.

குழந்தையின் மரணத்தை தொடர்ந்து மருத்துவர்களும், போலீசார் விசாரணையிலும் வெளிவந்த தகவல்கள் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

குழந்தையின் மரணத்தை விசாரணை செய்த போலீசார், ``பெற்றோர் தங்கள் குழந்தைகளை கடுமையான வீகன் உணவு முறைக்கு பழக்கப்படுத்தியுள்ளனர். 18 மாதங்கள் நிறைவடைந்த அந்தக் குழந்தை இறந்தபோது, ஏழு மாத குழந்தையின் அளவில் இருந்தது.

ஷீலா ஓ லியரி

இறந்த குழந்தை உட்பட மற்ற மூன்று குழந்தைகளும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறியுள்ளனர். அத்துடன் தம்பதி இருவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், தற்போது தீர்ப்பு வெளிவந்தது. குழந்தையின் தாய் ஷீலாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

3’8 வயதான ஷீலா ஓ லியரி, மகனுக்குப் பழங்கள் மற்றும் காய்கறிகளை மட்டுமே உணவாக அளித்ததில் பட்டினியால் அந்தக் குழந்தை இறந்துள்ளது. கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது’ என நீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது.


மேலும் படிக்க அதி தீவிர `வீகன்' உணவு, இறந்துபோன குழந்தை, தாய்க்கு ஆயுள்தண்டனை: நடந்தது என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top