கதவு மூடப்படாமல் இயங்கிய லிஃப்ட்... இடையில் சிக்கி பலியான ஆசிரியை! - மும்பையில் சோகம்

0

மும்பை மலாடு சிஞ்சோலி பந்தர் பகுதியில் இருக்கும் செயின்ட் மேரி ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை செய்தவர் ஜெனல் பெர்னாண்டஸ்(26). வசாயில் வசித்துவந்த ஜெனல் பள்ளியின் 6-வது மாடியில் மாணவர்களுக்கு பாடம் நடத்திவிட்டு 2-வது மாடியிலிருக்கும் ஆசிரியர்கள் ஓய்வு அறைக்குச் செல்வதற்காக லிஃப்டில் ஏறினார். அப்படி லிப்டில் ஏறும்போது லிஃப்டின் முன் கதவு மூடப்படாத நிலையில் லிஃப்ட் திடீரென 7-வது மாடியை நோக்கிச் செல்ல ஆரம்பித்தது. ஆசிரியை லிஃப்ட் கதவுகளுக்கு இடையில் சிக்கிக்கொண்டார். இதில் ஆசிரியையின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆசிரியையின் அலரல் சத்தத்தைக் கேட்டு மாணவர்களும் ஆசிரியர்களும் ஓடிவந்து அவரை லிஃப்டிலிருந்து மீட்டனர். அவரை பள்ளி ஊழியர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

விபத்துக்குள்ளான லிப்ட்

டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்தனர். ஆனால், அவர் தலையில் பலத்த அடி ஏற்பட்டிருந்ததால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். ஆசிரியை ஜெனல் கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் பணியில் சேர்ந்திருந்தார். இது குறித்து அதே பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர் கூறுகையில், ``லிஃப்ட் கம்பெனி ஊழியர்கள் அடிக்கடி வந்து சோதனை செய்து பராமரித்துக்கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு முன்பு இது போன்ற ஒரு சம்பவம் நடந்ததே கிடையாது. ஆனால் இப்போது நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்ககூடியதாக இருக்கிறது" என்று தெரிவித்தார்.

மரணம்

இந்தச் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் சம்பவ இடத்திற்கு போலீஸாரும் விரைந்து வந்தனர். போலீஸார் இது குறித்து விபத்து மரணம் என வழக்கு பதிவுசெய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டுதான் ஆசிரியை ஜெனலுக்கு திருமணமாகி இருந்தது. அவர் கணவர் கப்பலில் வேலை செய்கிறார். அவர் கணவர் விடுமுறைக்காக இந்தியா வந்திருந்தார். ஜெனல் லிஃப்ட் விபத்தில் இறந்தது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.


மேலும் படிக்க கதவு மூடப்படாமல் இயங்கிய லிஃப்ட்... இடையில் சிக்கி பலியான ஆசிரியை! - மும்பையில் சோகம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top