மிரட்டி பணம் பறித்த வழக்கு... டெல்லி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நோரா ஃபதேஹி!

0

டெல்லியை சேர்ந்த மருந்து கம்பெனி உரிமையாளரின் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி வாங்கியது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோர் பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் வாங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமலாக்கப்பிரிவு ஏற்கனவே இருவரிடமும் பல முறை விசாரணை நடத்தியுள்ள நிலையில், டெல்லி போலீஸாரும் இது குறித்து இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தியுள்ளது.

இவ்விசாரணையில், நோராவுக்கு இந்த குற்றத்தில் தொடர்பு இல்லை என்று போலீஸார் தெரிவித்துவிட்டதாக நோராவிற்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். இது தொடர்பாக டெல்லி போலீஸார் கூறியதாக நோராவுக்கு நெருக்கமானவர்கள் கூறுகையில், ``சுகேஷ் சந்திரசேகருடன் சேர்ந்து நோரா எந்த வித சதியிலும் ஈடுபடவில்லை. சுகேஷ் குற்றங்கள் குறித்து நோராவிற்கு தெரிந்திருக்கவில்லை. சுகேஷ் என்ன செய்கிறான் என்பதை நோரா தெரிந்திருக்கவில்லை. அதோடு விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து வருகிறார். சுகேஷ் சந்திரசேகரின் செயல்பாட்டில் சந்தேகம் வந்தவுடன் எங்களை தொடர்பு கொண்டு தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் விசாரித்து வருகிறோம். இன்னும் விசாரணை முடியவில்லை. அனைத்து வாக்குமூலங்கள், சாட்சிங்கள் மற்றும் சந்தர்ப்பங்களை கவனத்தில் கொண்டு இதில் இறுதி முடிவுக்கு வரப்படும். சுகேஷ் மனைவிக்கு சென்னையில் ஒரு ஸ்டூடியோ இருக்கிறது. அந்த ஸ்டூடியோ நிகழ்ச்சிக்கு வரும்படி நோராவுக்கு சுகேஷ் அழைப்பு விடுத்துள்ளார். இதில் பங்கேற்க பணமாக பெற்றுக்கொள்ளவேண்டாம் என்றும், பரிசாக கார் தருகிறோம் என்று சுகேஷ் தெரிவித்திருக்கிறார். காரை நோராவின் மைத்துனர் பெற்றுக்கொண்டுள்ளார். சுகேஷுடன் நோரா பகிர்ந்து கொண்ட சாட்டிங் விபரங்களை எங்களுடம் கொடுத்துள்ளார். கார் பெற்றதை நோராவின் மைத்துனர் உறுதிபடுத்தியுள்ளார்” என்றார்கள். இவ்வழக்கில் இருந்து நோராவை விடுவித்து இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இப்போது ஜாக்குலின் பெர்னாண்டஸ் மட்டும் மாட்டிக்கொண்டுள்ளார். அவரின் பெயர் அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க மிரட்டி பணம் பறித்த வழக்கு... டெல்லி போலீஸ் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகை நோரா ஃபதேஹி!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top