கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர் - அதிர்ச்சி தகவல்கள்!

0

கல்வியறிவில் முதலிடத்தில் உள்ள கேரள மாநிலத்தில் மூட நம்பிக்கையால் இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் ஐஸ்வரியமும், செல்வமும் பெருக பூஜை செய்வதாக போலி மந்திரவாதியான முஹம்மது ஷாஃபி என்ற ஷிகாப் வழிகாட்டுதல்படி பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரின் மனைவி லைலா ஆகியோர் நரபலியில் ஈடுபட்டுள்ளனர். நரபலி கொடுத்த சம்பவம் குறித்த கூடுதல் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.

எர்ணகுளம் மாவட்டம் பெரும்பாவூர் பகுதியைச் சேர்ந்த ஷிகாப் என்ற முஹம்மது ஷாஃபி போலி ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஒன்றை தொடங்கியுள்ளார். அந்த அக்கவுன்ட் மூலம் பத்தனம்திட்டா மாவட்டம் இலந்தூரில் உள்ள வைத்தியர் பகவல் சிங்கை தொடர்புகொண்டார். அப்போது ஐஸ்வர்யம் பெருகவும், செல்வம் செழிக்கவும் வழிகாட்டப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். பின்னர் அதற்கு ஒரு பூஜை செய்ய வேண்டும் என கூறியுள்ளார். பகவல் சிங்கின் வீட்டுக்குச் சென்று அந்த இடங்களை பார்வையிட்டுவிட்டு ஒரு பெண்ணை நரபலி கொடுத்து பூஜை செய்ய வேண்டும் என கூறியதுடன், அந்த பெண்ணை நானே அழைத்து வருகிறேன் எனவும் முஹம்மது ஷாஃபி கூறியுள்ளார்.

முஹம்மது ஷாஃபி

முஹம்மது ஷாஃபி எர்ணாகுளம் சென்று காலடி பகுதியில் தனியாக வாடகைக்கு வசித்து வந்து, கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்து வந்த ரோஸ்லி(59)-க்கு பத்து லட்சம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து பகவல் சிங்கின் வீட்டுக்கு அழைத்துச் சென்று இரவு நேரத்தில் நரபலி பூஜையை செய்துள்ளனர். கட்டிலில் கிடத்தி கைகளையும், கால்களையு கட்டிப்போட்டு முதலில் கழுத்தை அறுத்துள்ளனர். பின்னர் உடலை சுமார் 22 துண்டுகளாக வெட்டியுள்ளனர். உடலை வைத்து சில பூஜைகள் செய்துள்ளனர். பூஜை முடிந்த பிறகு வீட்டிற்கு வெளியே துணி துவைக்கும் கல் அமைந்துள்ள பகுதியில் குழிதோண்டி உடலை புதைத்து, அதன் மீது மஞ்சள் நட்டு வைத்துள்ளனர்.

முதல் பூஜையால் பலன் கிடைக்காததால் மற்றொரு நரபலி கொடுக்க வேண்டும் எனக்கூறி கடந்த மாதம் மீண்டும் ஒரு நரபலி கொடுக்க முடிவு செய்தனர். கடவந்தறா பகுதியில் லாட்டரி விற்பனை செய்துவந்த தர்மபுரியைச் சேர்ந்த பத்மா(52) என்ற பெண்ணையும் பணம் கொடுப்பதாக கூறி திருவல்லா அழைத்துச்சென்று ரோஸ்லியை நரபலி கொடுத்தது போன்றே நரபலி கொடுத்துள்ளனர். அவரின் உடல்களையும் துண்டுதுண்டாக வெட்டி வீட்டுக்கு வெளிப்பகுதியில் புதைத்துள்ளனர்.

உடல்கள் தோண்டி எடுப்பு

ரோஸ்லியை காணவில்லை என கடந்த ஆகஸ்ட் மாதம் 17-ம் தேதி அவரின் மகள் மஞ்சு புகார் அளித்தார். அந்த விசாரணையில் பெரிய அளவில் துப்பு துலங்கவில்லை. பத்மாவை காணவில்லை என அவரின் மகன் செல்வராஜ் கடந்த மாதம் 27-ம் தேதி புகார் அளித்தார். அவரின் செல்போனை ஆய்வு செய்தபோது அது திருவல்லா பகுதியில் கடைசியாக பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. பின்னர் சி.சி.வி.டி வி காட்சிகள் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து பத்மாவை கடத்திய முஹம்மது ஷாஃபி முதலில் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரித்ததில் பெண்கள் கொடூரமாக நரபலி கொடுக்கப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளியானது.

இதையடுத்து பாரம்பர்ய வைத்தியர் பகவல் சிங், அவரது மனைவி லைலா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரோஸ்லி, பத்மா ஆகியோரது உடல் துண்டுகள் தேடி எடுக்கப்பட்டன. அவர்களது உடலை அடையாளம் காணும் விதமாக டி.என்.ஏ பரிசோதனை மேற்கொள்வதற்காக கோட்டயம் மெடிக்கல் காலேஜ் ஆஸ்பத்திரியில் அவர்களது உடல்கள் கொண்டு செல்லப்பட்டன. இந்த வழக்கின் தொடர் விசாரணையில் இன்னும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் படிக்க கேரளா: இரட்டை நரபலி; 22 துண்டுகளாக்கி பூஜை; மண்ணில் புதைத்து மஞ்சள் நட்டனர் - அதிர்ச்சி தகவல்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top