`முதல் சினிமா வாய்ப்பும், மாமனாரின் கடிதமும்!' - கிரேஸி மோகன் ரீவைண்ட்ஸ் #AppExclusive

0

சொந்த வேலையாகப் பெங்களூருக்குச் சென்றுவிட்டு அன்று மாலை நான் சென்னை திரும்பினேன். வீட்டுக்குள் நான் நுழையும்போதே என் தாத்தா வழிமடக்கினார்: 

“மோகன்...  கலாகேந்திரா ஆபீஸ்லேருந்து உன்னைத் தேடிக் கார் வந்தது...” 

“உன்னை உடனே அவங்க ஆபீசுக்குப் போன் பண்ணச் சொன்னாங்க,,,” இது என் பெரியப்பா.

“பாலசந்தர் தன்னோட அடுத்த படத்திற்கு கதை, வசனம் எழுதத்தான் உன்னைக் கூப்பிடறார்னு நினைக்கிறேன்...” என் உடன் பிறப்பு! 

எனக்குக் கை, கால்கள் நடுங்க ஆரம்பித்தன. உள்ளம் மகிழ்ச்சியால் பூரித்தது. அருகில் இருக்கும் டெலிபோன் 'பூத்'துக்கு ஓடி, கலாகேந்திராவின் நம்பரைக் கிழிந்துபோன டைரக்டரியில் தேடி டயல் செய்தேன்.

'"ஹலோ... கலாகேந்திராவா... நான் கிரேஸி மோகன் பேசறேன்.”

“ஹலோ மோகன்... நான் பாலசந்தர்... உடனே எங்க ஆபீசுக்கு கொஞ்சம் வரீங்களா...?'' 

''கால் மணி நேரத்துலே வரேன் சார்...”

வீட்டுக்கு ஓடிப்போய்த் குளித்தேன். 'ஜாய்ஃபுல் கலாகேந்திரா" என்று இஷ்டத்துக்குப் பாடினேன்! படு அமர்க்களமாக டிரஸ் செய்து கொண்டு புறப்பட்டேன். 

Crazy Mohan

லாகேந்திரா ஆபீஸின் வரவேற்பு அறையில் நானும் என் நண்பன் கிச்சாவும் (இவன் எனக்கு வால் மாதிரி!) காத்துக்
கொண்டிருந்தோம். கலாகேந்திரா துரை எங்களிடம் வந்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
 
“நாங்க ‘காட்டா மீட்டா’ இந்திப் படத்தைத் தமிழில் எடுக்கப்போறோம். அதுக்கு நீங்க வசனம் எழுதணும்...” துரை பேசிக் கொண்டிருக்கும்போதே பாலசந்தர் அறைக்குள் நுழைந்தார்.

“மோகன், நாளைக்கு சாயங்காலம் தேவி மினியிலே ‘காட்டா மீட்டா' புரொஜக்ஷன் இருக்கு... போய்ப்பாருங்க. ஒரு ஐடியா கிடைக்கும். கதையைக் கொஞ்சம் மாற்றி நம்ப ஜனங்களுக்கு ஏற்ற மாதிரி எழுதணும்...” படபடவென்று பேசி விட்டு பாலசந்தர் விடை பெற்றார்.

மறுநாள் ஆபீசுக்கு பர்மிஷன் போட்டு விட்டு, தேவி மினிக்கு நான் போய்ச் சேரும்போது மணி 6-45. இருநூறு பேர் உட்காரக்கூடிய அரங்கில் நானும் கிச்சாவும் மட்டும் உட்கார்ந்தோம். அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில், கொஞ்சம் பயமாகக்கூட இருந்தது!
 
சிறிது நேரத்தில் துரை வந்தார். அவரோடு வந்த இன்னொரு நபரை எங்கேயோ பார்த்த மாதிரி இருந்தது. பிறகுதான் புரிந்தது. அட, நம்ப விஷ்ணுவர்த்தன்! கன்னட நடிகர்!

விஷ்ணுவர்த்தனுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த கிச்சாவுக்குப் படுகுஷி! நடிகரின் இடது கையை உராய்ந்த படியேதான் அவன் முழுப் படத்தையும் பார்த்தான்! 

எனக்கும், கிச்சாவுக்கும் இந்தி தெரியாது. அதனால் விஷ்ணுவர்த்தன் சிரித்த இடங்களிலெல்லாம் நாங்களும் சிரித்தோம்! அவர் ‘ச்சூ என்று பல்லி கொட்டியபோது நாங்களும் பல்லி கொட்டினோம். படம் முடிந்ததும் துரை என்னிடம் அபிப்பிராயம் கேட்டார். 

“கதை சுமாரா இருந்தாலும் ஸ்டோரி நல்ல பவர்ஃபுல்லா இருந்தது...” என்று பழைய ஜோக்கை அடித்தேன்! படத்தின் இடையே பிஸ்கெட்டும், காபியும் கொடுத்தார்கள். ஓவர் லோடினால் மப்பு தட்டிப் போய் கிச்சா பாதிப்படத்தில் தூங்கி விட்டான்!
 
ரண்டு நாட்கள் கழித்து ஓட்டல் சவேராவில் பாலசந்தருடன் டிஸ்கஷன் நடந்தது. நான் ஓரளவு தயாரித்து வைத்திருந்த திரைக்கதையை அவரிடம் கூறினேன். கன்னத்தில் கையை வைத்துக் கொண்டு கே.பி. நீண்ட நேரம் யோசனை செய்தார். திரைக்கதையமைப்பு திருப்தி அளித்துவிட்டது போல் அவருடைய முகபாவம் காட்டியது. நான் பேசாமல் உட்கார்ந்து கொண்டிருந்தேன். அவரும் யோசனையிலேயே இருந்தார்! கன்னத்திலிருந்து கையை எடுக்கவேயில்லை. 'டிஸ்கஷன்’ அன்று முடியும்போது நேரம் நள்ளிரவு! கடைசியில் தமிழ் கதாநாயகனுக்கு ஆறு குழந்தைகள் என்று ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.

“இன்னொரு தடவை இது மாதிரி லேட்டா கீட்டா வந்தே, கதவையே திறக்க மாட்டேன் ராஸ்கல்!” என்று வீட்டில் என்னை ‘வரவேற்றார்’ என் தந்தை. 

“என்னடா மோகன்! நீ பேசினா புளிச்ச வாசனை வருது!” என்று எதையோ சம்பந்தமில்லாமல் மோப்பம் பிடித்தாள் என் தாய். நான் வாயை ஊதிக் காட்டினேன். நம்பவில்லை. கற்பூரத்தை ஊதி அணைத்தேன்!

Crazy Mohan

டையில் பாலசந்தர் வெளிநாடு போய் விட்டதால் ‘காட்டா மீட்டா’வைத் தமிழில் டைரக்ட்  செய்யப்போகும் நடிகை லட்சுமியுடன் ஒரு வாரம்  டிஸ்கஷன் நடந்தது. நான் ஏற்கெனவே பாலசந்தருடன் விவாதித்ததை லட்சுமியிடம் கூறுவேன்.

அவர் நான் சொன்னதையே வரிக்கு வரி திரும்பிக் கூறிவிட்டு, தான் புதுசாக எதையோ சொல்லிவிட்டது போல் 'இது எப்படி இருக்கு?’ என்று கேட்பார். நானும் ஒரு போலிப் புன்னகையுடன், 'பிரமாதமாக இருக்கு" என்பேன். ஒவ்வொரு நாளும் லட்சுமியுடன் 'டிஸ்கஷன்’ முடிந்து வீடு திரும்பும் போது மணி 11-30 ஆகிவிடும். வீட்டில் கதவைத் திறக்க மாட்டார்கள்! பின்பக்கம் போய் மரத்து மேல் ஏறி, மொட்டை மாடிக்குள் குதித்து ‘திருடன்’ மாதிரி என் ரூமுக்குள் நுழைவேன்! 

எங்கள் டிஸ்கஷன் தொடர்கதையாக நீண்டது. படத்தில் பன்னிரண்டு குழந்தைகள் இருக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு பாலசந்தர் வெளிநாடு போய்விட்டார். லட்சுமியோ ஆறு குழந்தைகள் போதும் என்றார், கலாகேந்திரா கோவிந்தராஜனோ, 'இப்போதைக்கு 12 குழந்தைகள் வச்சுக்குங்க... டைரக்டர் வந்ததும் மீதியைப் பார்த்துக்கலாம்...' என்றார்.

எனக்கு லேசாக அலுப்புத் தட்ட ஆரம்பித்தது. வீட்டிலும் என்னுடைய சினிமா உலகப் பிரவேசத்திற்குப் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. உறவினர்கள் முணுமுணுத்தார்கள். மாமனாருக்குப் பரம அதிருப்தி! தன்னுடன் நான் இருக்கும் நேரம் குறைந்து கொண்டே வந்ததைக் கண்ட என் மனைவி கண்ணீர் சிந்த ஆரம்பித்தாள். எனக்கும் இந்த சினிமா புரியவில்லை. அவர்களுடைய ‘வேக’த்தோடு என்னால் ஈடு கொடுக்க முடியவில்லை. 

கூப்பிட்டு அனுப்பிய போதெல்லாம் போகாமல் தாமதம் என்ற பெயரில்  எனக்கும் கலாகேந்திராவுக்கும் இருந்த இடைவெளியை வேண்டுமென்றே அதிகரித்துக்கொண்டு, 'லேஸி' மோகன் என்று பெயர் பெற்று வெளியேறினேன்!
 
எனக்குப் பதிலாக விசு வசனம் எழுதப் போகிறார் என்ற செய்தி என் குடும்பத்திற்குத் தேனாக இனித்தது. ஊரிலிருந்து என் மாமனார் எழுதினார்:
 
“உங்களுக்குக் கிடைத்த சினிமா சான்ஸ் பறி போய் விட்டது என்று அறிந்தேன். ரொம்ப சந்தோஷம்!”

- `கிரேசி' மோகன்

(05.08.1979 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழிலிருந்து...)

மேலும் படிக்க `முதல் சினிமா வாய்ப்பும், மாமனாரின் கடிதமும்!' - கிரேஸி மோகன் ரீவைண்ட்ஸ் #AppExclusive
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top