தேவர் குருபூஜையில் பிரதமர்?: ``முக்குலத்தோர் மக்களின் வாக்குகளே குறி" - ரவிக்குமார் எம்.பி காட்டம்

0

வி.சி.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், ம.தி.மு.க., இடதுசாரி கட்சிகள் உள்ளிட்ட பல கட்சிகள் ஒருங்கிணைந்து நேற்று (11.10.2022) தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி நடத்தின. விழுப்புரத்தில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விழுப்புரம் மக்களவை தொகுதி உறுப்பினர் துரை.ரவிக்குமார், ``’காவி கும்பலுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை' என்று தமிழ்நாடு முழுவதும் இன்று மக்கள் அணிதிரண்டு முழங்குகிறார்கள். விழுப்புரம் மாவட்டத்தில் சுமார் 25-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த மனித சங்கிலி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இத்தகு உணர்வைப் புரிந்துகொண்டு, ஆர்.எஸ்.எஸ் காவிக் கும்பல் தமிழகத்தில் தன்னுடைய பிளவு வேலையை காட்ட வேண்டாம். உங்களுக்கான இடம் இது இல்லை என்பதை எச்சரிக்கையாக அறிவுறுத்தி கூறுகிறோம்.

மனித சங்கிலி - விழுப்புரம்

பிளவுவாத சக்திகளுக்கு, பிரிவினை வாதிகளுக்கு... மதத்தின் பெயரால், மொழியின் பெயரால் மக்களை கூறுபடுத்தும் சக்திகளுக்கு... தமிழ்நாட்டிலே இடமில்லை என்பதை சொல்வதற்காக தான் இன்றைக்கு இந்த மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை காவி கும்பல் கடைசி எச்சரிக்கையாக உணர்வார்கள் என நம்புகிறோம். இந்திய பிரதமர் எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதற்கும் உரிமை படைத்தவர். ஆனால், அவர் ஏன் இங்கே வருகிறார் என்பதை நாம் பார்க்க வேண்டும். அவர்கள், சாதிய ரீதியிலே தமிழ் மக்களை கூறுபடுத்தி அதில் அரசியல் லாபம் பார்க்க துடிக்கிறார்கள்.

ஏற்கனவே, தேவேந்திரகுல வேளாளர் மக்களை ஒரே பெயரில் அறிவிக்கிறோம் என்று சொல்லி, பட்டியலிலிருந்து உங்களை வெளியேற்ற நாங்கள் சட்டம் இயற்றுகிறோம் என்று சொல்லி, இங்கே அவர்கள் வந்து பேசினார்கள். இப்போது அங்குள்ள முக்குலத்தோர் மக்களின் வாக்குகளை குறிவைத்து, தேவர் குரு பூஜையிலே மோடி அவர்கள் பங்கேற்கிறார்கள். நரேந்திர மோடி அவர்கள் பிரதமராகி  8 ஆண்டுகள் கடந்துவிட்டது. இப்போது தான் பசும்பொன் தேவரின் பெருமை அவருக்கு தெரிந்ததா..? இன்று தான் அங்கு வரவேண்டும் என்று அவருக்கு புரிந்ததா..? இதையெல்லாமே 2024 நாடாளுமன்ற பொதுத் தேர்தலை குறிவைத்து தான் செய்கிறார்கள்.

விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் பேட்டி

இந்த நாட்டு மக்கள் இதனை நன்றாக உணர்வார்கள். குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டத்தில் இருப்பவர்கள்  பா.ஜ.க-வினுடைய அரசியலை நன்றாக புரிந்தவர்கள். தேவர் திருமகனாரின் கொள்கையிலே நம்பிக்கையுள்ளவர்கள் யாரும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க கும்பலின் பிரிவினைவாத அரசியலுக்கு பலியாக மாட்டார்கள். இங்குள்ள ஜனநாயக சக்திகளின் ஒருமித்த வேண்டுகோள் என்னவென்றால், ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு தமிழகத்திலே அனுமதி அளிக்கக்கூடாது என்பதுதான்" என்றார்.


மேலும் படிக்க தேவர் குருபூஜையில் பிரதமர்?: ``முக்குலத்தோர் மக்களின் வாக்குகளே குறி" - ரவிக்குமார் எம்.பி காட்டம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top