வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாக வேண்டுமா?! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்பு முறைகள்!

0

காரணங்களால் சிலருக்கு கூந்தல் வறண்டு போயிருக்கும். அந்த வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாக, வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்பு முறைகள் இங்கே. மியா சலூனின் உரிமையாளர் ஃபாத்திமா சொல்லும் டிப்ஸை ஃபாலோ செய்யுங்கள், கூந்தலைப் பளபளக்கச் செய்யுங்கள்!

மஞ்சள் கரு

முட்டை

இரண்டு முட்டைகளின் மஞ்சள் கருக்களை எடுத்து, இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில் விட்டு, ஒரு டீஸ்பூன் தண்ணீர் சேர்த்து நன்கு அடித்துக் கலக்கவும். இதனை ‘பேக்’ ஆக தலையில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து அலசவும். முட்டையில் நிறைந்துள்ள புரதச் சத்து, கூந்தலை வலிமையாக்குவதுடன், வறட்சியிலிருந்தும் காக்கும்.

மயோனைஸ்

பிரெட் சாண்ட்விச் செய்ய உதவும் மயோனைஸ் (டிபார்ட்மென்ட் கடைகளில் கிடைக்கும்) அரை கப் எடுத்து, தலையில் நன்கு தடவி 15 நிமிடங்கள் கழித்து அலசவும். இது வறண்ட கூந்தலைப் பளபளப்பாக்கும்.

இளம் தேங்காய் எண்ணெய்

டிபார்ட்மென்ட் ஸ்டோர்களில் கிடைக்கக்கூடிய இளம் தேங்காயின் எண்ணெயை வாங்கி, தேவையான அளவு எடுத்து நன்கு சூடுபடுத்தி, வெதுவெதுப்பாகும் வரை ஆறவைத்து, தலையில் தேய்த்து 30 நிமிடங்கள் கழித்து அலசவும். கேசத்துக்கு நல்ல கண்டிஷனர் இது.

டீ ட்ரீ ஆயில்

தலையில் பாக்டீரியாக் களினால் ஏற்படும் பூஞ்சை, அரிப்பு, செதில் செதிலாக உதிரும் டெட் ஸ்கின் போன்ற அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வளிக்கக்கூடியது, டீ ட்ரீ ஆயில் (காஸ்மெடிக் கடைகளில் கிடைக்கும்). இதைத் தலையில் நன்கு தேய்த்து 20 நிமிடங்களில் அலசினால், கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் மாற்றும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயை வெதுவெதுப் பாகச் சூடுபடுத்தி, தலையில் தேய்த்து பத்து நிமிடங்களில் அலசவும். இது வறண்ட கூந்தலை மிருதுவாக்கும் இன்ஸ்டன்ட் ரெமடி.

நல்லெண்ணை (Representational Image)

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப் பான சூட்டில் தலையில் தடவவும். இதில் வைட்டமின் `சி’ உள்ளதால் முடிக்கு ஈரப்பதம், பளபளப்பு அளிப்பதுடன் முடியை வலிமையாக்கும்.

அவகோடா

அவகோடா பழத்தின் சதைப்பகுதியுடன் இரண்டு டீஸ்பூன் ஆலிவ் ஆயில், ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தலை மற்றும் கூந்தலில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து அலசவும். வைட்டமின்கள், மினரல்கள் மற்றும் நேச்சுரல் ஆயில் நிறைந்த அவகோடா, வறண்ட தலைக்கு ஈரப்பதத்தை அளிப்பதுடன், வறண்டு உடைந்த கூந்தலை மிருதுவாக்கி, கண்ணாடி போன்ற பளபளப்பையும் அளிக்கும்.

அலோ வேரா

ஒரு சோற்றுக் கற்றாழை கிளையின் உள்ளிருக்கும் சதைப்பற்றை எடுத்து அரைத்து, தலையில் தேய்த்து பத்து நிமிடங்கள் கழித்து அலசவும். இது கேசத்தை வறட்சியிலிருந்து காப்பதுடன், புத்துணர்வும் அளிக்கும்.

- இந்துலேகா.சி


மேலும் படிக்க வறட்சி நீங்கி கூந்தல் பளபளப்பாக வேண்டுமா?! வீட்டிலேயே செய்யக்கூடிய எளிய பராமரிப்பு முறைகள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top