கிளிப்பேச்சு கேட்கவா: கொள்ளிவாய் பிசாசும் பயந்தாங்கொள்ளியும் - காமெடி ஹாரர் ஜானருக்கான விதை!

0
80 & 90ஸ் தமிழ் சினிமா ‘நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – 'கிளிப்பேச்சு கேட்கவா’.

இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம்.

டென்ட் கொட்டாய் டைரீஸ் - 80s, 90s Cinemas For 2K Kids

மலையாள நகைச்சுவைத் திரைப்படங்களின் ருசி என்பது பத்தியச் சாப்பாடு மாதிரி. ஒருவகையான பிரத்யேக சுவையில் இருக்கும். முகத்தில் அடிக்கும் மசாலாவோ, வயிற்றைக் கெடுக்கும் காரமோ அதில் இருக்காது. அமுங்கிய குரலில் மெலிதாக வெளிப்படும் இந்த நகைச்சுவையை நுகர்வதற்குத் தனியான ரசனை வேண்டும்.

இந்த வகையான நகைச்சுவைப் படங்கள், டப்பிங் வடிவில் அல்லது ரீமேக் வழியில் தமிழிற்கு நிறைய வந்திருக்கின்றன. காமெடியும் சென்டிமென்ட்டும் கச்சிதமான கலவையில் அமைந்திருக்கும் இவ்வகையான திரைப்படங்களை உருவாக்குவதில் இயக்குநர் ஃபாசில் முக்கியமானவர். ‘டென்ட் கொட்டாய்’ சீரிஸில், இவர் இயக்கிய ‘அரங்கேற்ற வேளை’ படத்தைப் பற்றி முன்பே பார்த்திருக்கிறோம்.

ஃபாசில் இயக்கத்தில் மம்மூட்டி நடித்த நேரடி தமிழ்த் திரைப்படமான ‘கிளிப்பேச்சு கேட்கவா’ பற்றித்தான் இந்த வாரம் பார்க்கப் போகிறோம்.

இயக்குநர் ஃபாசில்

‘கொள்ளிவாய் பிசாசுடன் குடும்பம் நடத்துகிற பயந்தாங்கொள்ளி’

‘தன்னுடைய நிழலைக் கண்டே அஞ்சுகிற ஒரு பயந்தாங்கொள்ளி, ஒரு பேயுடன் ஆசையாக குடும்பம் நடத்துகிறான்’. இதுதான் இந்தப் படத்தின் குத்துமதிப்பான ‘ஒன்லைன்’ எனலாம். இளையராஜாவின் அட்டகாசமான பாடல்கள், மம்மூட்டி, கனகாவின் லூட்டிகள், மிதமான சென்டிமென்ட், இயல்பான டைரக்ஷன் போன்ற காரணங்களால் இந்தப் படத்தைச் சமகாலத்தில் நினைவுகூர்வது தவிர்க்க முடியாத விஷயமாக இருக்கிறது.

தன் இரண்டு தங்கைகளுக்குத் திருமணம் செய்து விட்டு, வயதான தாயைப் பராமரிப்பதற்காக எந்தவொரு வேலையையும் ஏற்க வேண்டிய பரிதாபமான சூழலில் இருக்கிறான் சிதம்பரம் (மம்மூட்டி). மிகுந்த சிரமத்திற்குப் பிறகு ஒரு கிராமத்துப் பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கிறது. ஆனால் அதற்காக இரண்டு நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. ஒன்று, ஆசிரியர் வேலையோடு அங்குள்ள ஒரு பங்களாவில் இரவு வாட்ச்மேன் பணியையும் ஏற்று அங்குதான் தங்கியாக வேண்டும். இரண்டு, இந்த வேலையைக் குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்காவது செய்தே ஆக வேண்டும். வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டு கிளம்புகிறான் சிதம்பரம்.

ஆனால் அந்தக் கிராமத்திற்குச் சென்றபிறகுதான் அந்த இரண்டு நிபந்தனைகளுக்கான காரணங்களும் மெல்ல மெல்ல அவனுக்குப் புரிய ஆரம்பிக்கின்றன. அந்தப் பங்களாவில் ஒரு கொடூரமான பேய் இருப்பதாகக் கிராமத்தில் ஒரு வலுவான நம்பிக்கை உலவுகிறது. இரவு தங்கியவர்கள் மறுநாள் உயிரோடு திரும்பியதில்லை என்றும் இதுவரை பத்தொன்பது பேர் ரத்தம் கக்கிச் செத்திருக்கிறார்கள் என்றும் அறிந்து ‘பேய் முழி’ முழிக்கிறான் சிதம்பரம்.

அந்தக் கிராமத்தில் உள்ள சிவகாமி என்கிற பெண்ணுடன் (கனகா) சிதம்பரத்திற்குக் காதல் ஏற்படுகிறது. அதனால் சில சிக்கல்கள் ஏற்படுகின்றன. எல்லாவற்றிற்கும் அந்த பேய் பங்களா மையக் காரணமாக இருக்கிறது. சிதம்பரத்தின் காதல் என்னவானது... பேய் அவனைப் பழிவாங்கியதா, தன் சிக்கல்களை சிதம்பரம் எவ்வாறு எதிர்கொண்டான் என்பதையெல்லாம் இயல்பான நகைச்சுவைக் காட்சிகளின் மூலம் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறார்கள்.

கிளிப்பேச்சு கேட்கவா

‘பேய்க் காமெடிப்படம் என்னும் சூறாவளி’

பொதுவாக அனைத்துப் பேய்க்கதைகளிலும் தொன்மத்தின் சாயல் படிந்திருக்கும். நாட்டுப்புறக்கதைகளின் சுவாரஸ்யம் ஒளிந்திருக்கும். இவற்றைத் தர்க்க ஒழுங்கில் அணுகக்கூடாது. லாஜிக் பார்க்கக்கூடாது. அவை தரும் திகில் உணர்ச்சிதான் நமக்கு முக்கியம். இந்த திகில் உணர்ச்சியே ஒரு கட்டத்தில் காமெடியாகி விடும். ‘இதற்கா இத்தனை பயந்தோம்?’ என்று விடிந்த பிறகும் சிரித்துக் கொண்டேயிருப்போம். ‘கிளிப்பேச்சு கேட்கவா?’ படமும் இப்படித்தான். லாஜிக்கை சற்று ஒதுக்கி வைத்துப் பார்த்தால் இதிலுள்ள அபாரமான நகைச்சுவையை ரசிக்க முடியும்.

“பேய்ப்பட காமெடி’ என்றொரு சுனாமி தமிழ் சினிமாவில் வீச ஆரம்பித்தது. ‘முனி’யில் ஆரம்பித்தது இந்த சனி. இடைவிடாமல் பத்து வருடங்களுக்கும் மேலாக நம்மை அடித்துத் துவைத்து இப்போதுதான் சற்று ஓய்ந்திருக்கிறது.

இந்தப் ‘பேய் காமெடி’ படங்களின் முன்னோடி என்று ‘கிளிப்பேச்சு கேட்கவா’ போன்ற படைப்புகளைக் குறிப்பிடலாம். ஆனால் இதில் குமட்ட வைக்கும் மிகையான கிராபிக்ஸ் காட்சிகளோ, அலுக்க வைக்கும் கிளிஷேக்களோ இருக்காது.

இந்தப் படத்தை பாரதிராஜா + பாக்யராஜ் படத்தின் மெலிதான கலவை என்று சொல்லிவிடலாம். ஒரு பழைமைவாத கிராமம். அங்குப் புதிதாக நுழையும் ஓர் ஆசிரியர். கிராமத்துப் பெண்ணுடன் அவருக்கு ஏற்படும் காதல். அதனால் ஏற்படும் சிக்கல்கள், உணர்ச்சிகரமான கிளைமாக்ஸ் என்று பாரதிராஜாவின் சாயலும் இருக்கும். அதே போல் பள்ளிக்கூட வாத்தியாருக்கும் மாணவர்களுக்கும் இடையில் நிகழும் காமெடிகள் பாக்யராஜை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கும். மாணவர்களிடம் ஒன்றை விளக்கி விட்டு ‘Understand?’ என்று மம்மூட்டி கேட்பார். அனைத்து மாணவர்களும் சடாரென எழுந்து நிற்பார்கள். இதைக் கண்டு திகைக்கும் அவர் “சரி, சரி... Undersit” என்பார்.

தாமதமாகப் பள்ளிக்கு வரும் ஒரு மாணவனிடம் “ஏண்டா லேட்?” என்று ஆசிரியர் கேட்க “எப்படியும் நீங்க பேய் அடிச்சு செத்துப் போயிருப்பீங்க... ஸ்கூலுக்கு லீவு விட்டிருப்பாங்கன்னு நெனச்சேன்” என்று அந்த மாணவன் வெள்ளந்தியாகச் சொல்வது போன்ற இடங்களில் எல்லாம் பாக்யராஜின் வாசனை வரும்.
கிளிப்பேச்சு கேட்கவா

‘சிதம்பரம்... நான் சொல்றத கேளு’ – வழிகாட்டி பேய்

மம்மூட்டி நேரடியாக நடித்த தமிழ்ப்படங்கள் மிகக்குறைவு. ‘தளபதி’, ‘மௌனம் சம்மதம்’, ஆனந்தம்’, 'பேரன்பு' என்று சில படங்கள்தான் சட்டென்று நினைவிற்கு வரும். இந்த வரிசையில் ‘கிளிப்பேச்சு கேட்கவா’ ஒரு கவனிக்கத்தக்கப் படம். இதில் ஹீரோவாக பாக்யராஜோ, பாண்டியராஜனோ நடித்திருந்தால் தமிழ் பார்வையாளர்கள் இன்னமும் கூட நெருக்கமாக உணர முடிந்திருக்கும் என்றாலும் மம்மூட்டி தந்திருந்த நகைச்சுவை நடிப்பு வித்தியாசமான ருசியைத் தந்தது என்பதை மறுக்க முடியாது.

குடையை நீட்டிக் கொண்டே முதலாளியிடம் வேலை கேட்பதும், பேய் பங்களா பற்றிய மற்றவர்களின் முகபாவங்களைக் கவனித்து துணுக்குறுவதும், மதுவருந்திய துணிச்சலில் முதல் நாள் இரவைக் கழித்து விட்டு தெருவில் கெத்தாக நடந்து வருவதும், ‘இன்னிக்கு பெளர்ணமி. பேய் வராது. நாளைக்கு நிச்சயம் வரும்’ என்று சொல்லப்படுவதைக் கேட்டு முகம் மாறுவதும், பேயிடம் (?!) மெல்ல மெல்ல உரையாடி சிநேகமாவதும், ஒரு கட்டத்தில் அதன் குரலைக் கேட்காமல் மன உளைச்சல் கொள்வதும்... என ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பில் கலக்கியிருந்தார் மம்மூட்டி.

இந்தப் படத்தின் நாயகி கனகா. தமிழிற்கு நிகரான எண்ணிக்கையில் மலையாளத் திரைப்படங்களில் நடித்தவர். சிவகாமி என்கிற பாத்திரத்தைச் சிறப்பாகக் கையாண்டிருந்தார். பங்களாவில் தங்குபவர்களைப் பேய் போலப் பேசி பயமுறுத்தி அனுப்புவதுதான் இவரது வேலை. ஆனால் மம்மூட்டியைக் கண்டவுடன் மையல் கொண்டு அவ்வாறு அனுப்ப இயலாமல் தயங்குவார். என்றாலும் “சிதம்பரம்... நான் சொல்றத கேளு” என்று தன் காதலுக்கு தானே ரூட் போட்டுக் கொள்ளும் காட்சிகள் சுவாரஸ்யமானவை.

கனகாவின் தாத்தாவாக விஜயகுமார். ஒட்டுமொத்த கிராமமே தெய்வமாக வணங்கும் ஆசாமி. “பத்தொன்பது வருஷம் பூஜையை நடத்தி முடிச்சுட்டேன். இருபதாவது வருஷமும் நடத்திட்டா பங்களா கைக்கு வந்துடும்” என்கிற உருக்கமான கோரிக்கையோடு இவர் செய்யும் விஷயங்கள் திகிலும் சென்டிமென்ட்டும் கலந்ததாக இருக்கும். "சிவகாமியை எனக்குக் கல்யாணம் பண்ணி வைங்க. இல்லாட்டி இந்தப் பூஜை எப்படி நடக்குதுன்னு பார்க்கறேன்” என்று மிரட்டும் மினி வில்லனாக நாசர். விஜயகுமாரிடம் மரியாதையை வெளிப்படுத்தும் அதே சமயத்தில் வில்லனுக்குண்டான வேலைகளைப் பின்னணியில் கனகச்சிதமாகச் செய்து கொண்டிருக்கும் பாத்திரத்தை நாசர் சிறப்பாகக் கையாண்டார்.

மம்மூட்டிக்கு ஆதரவாகச் செயல்படும் டீக்கடைக்காரராக சீனு மோகன், “பேய்லாம் மூடநம்பிக்கை. நம்பாதீங்க” என்று கெத்தாக முற்போக்கு பேசி விட்டு பங்களாவிற்கு வந்ததும் அலறியடித்துக் கொண்டு ஓடும் சார்லி போன்ற சிறு சிறு பாத்திரங்கள் இந்தப் படத்திற்குச் சுவாரஸ்யத்தைக் கூட்டின.
கிளிப்பேச்சு கேட்கவா

‘சிவகாமி நெனப்பினிலே... பாடம் சொல்ல மறந்து விட்டேன்’

இந்தப் படம் சிலரால் இன்று கூட நினைவுகூரப்படுகிறதென்றால், அதற்குப் பிரதான காரணம் இதன் பாடல்களாகத்தான் இருக்க முடியும். ‘சிவகாமி நெனப்பினிலே... பாடம் சொல்ல மறந்து விட்டேன்’ என்பது எப்போது கேட்டாலும் இனிமையாக ஒலிக்கும் பாடல். இது மாயாமாளவகௌளை ராகத்தில் இசையமைக்கப்பட்டது என்கிறார்கள். எஸ்.பி.பியும் ஜானகியும் அருமையாகப் பாடியிருப்பார்கள்.

இதன் பாடல் காட்சியில் ஒரு சுவாரஸ்யம் உண்டு. “பாடம் சொல்லிக் கொடுக்கறத விட்டுட்டு பொண்ணோட ரொமான்ஸ் பண்றியா?” என்று பள்ளியின் தலைமையாசிரியர் மம்மூட்டியைக் கண்டிப்பதோடு இந்தப் பாடல் தொடங்கும். இவரை நடுவில் வைத்துக் கொண்டே மம்மூட்டியும் கனகாவும் ரொமான்ஸ் செய்வதும், எரிச்சலோடு தலைமையாசிரியர் ஒழுங்கு காட்டுவதும் சுவாரஸ்யமான காட்சிகள்.

‘அன்பே வா அருகிலே’ என்கிற பாடல் இரண்டு வெர்ஷன்களில் உண்டு. உருக்கமான குரலில் ஜேசுதாஸ் ஒன்றைப் பாடியிருப்பார். திகிலும் பிரியமும் கலந்த குரலில் இன்னொரு வெர்ஷனை ஜானகி பாடியிருப்பார். ‘வந்தது... வந்தது...’ என்கிற இனிமையான பாடலும் ஜானகியின் குரலில் ஒலிக்கும். மதுபானம் தந்த உற்சாகத்தில் ‘அடிச்சு விரட்டுவேன்’ என்கிற துள்ளிசைப்பாடலை மனோவும் சுரேந்தரும் உற்சாகமாகப் பாடியிருப்பார்கள். பின்னணி இசையிலும் பல இடங்களில் அசத்தலான பங்களிப்பைத் தந்திருப்பார் ராஜா. மௌனத்தின் மூலமே பல காட்சிகளில் திகில் ஊட்டப்பட்டிருக்கும்.

ஃபாசிலின் இயல்பான டைரக்ஷன்!

எவ்வித ஆர்ப்பாட்டமும் மிகையும் இல்லாமல் ஃபாசிலின் திரைக்கதை இயல்பான ஓட்டத்தில் பயணிக்கும். அதே சமயத்தில் சுவாரஸ்யமாகவும் இருக்கும். மம்மூட்டி கிராமத்தில் நுழைந்து ‘பங்களா’ பற்றி விசாரிக்கும் போது டீக்கடையில் அதுவரை இயல்பாகப் பேசிக் கொண்டிருந்தவர்களின் முகம் மாறி அவசரமாக விலகிப் போவார்கள். இப்படியான தொடர்ந்த பில்டப்களை ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக அமைத்திருப்பார் இயக்குநர். பார்வையாளர்களுக்கும் அப்படியொரு திகில் கலந்த ஆர்வம் ஏற்படும்.

கிளிப்பேச்சு கேட்கவா

பேய்க்கும் மம்மூட்டிக்கும் இடையில் ஏற்படும் உறவு, ஒரு அழகான படிநிலையில் அமைக்கப்பட்டிருக்கும். பேயின் குரலைத் தரிசிக்க முடியாமல் தவித்துப் போய் விடுவார் மம்மூட்டி. ‘அதெல்லாம் டுபாக்கூர்’ என்று கனகா சொல்லும் போது கோபம் கொள்வார். அந்தளவிற்கு அந்தக் குரலின் மீது விசுவாசமும் பக்தியும் கொண்டு விடுவார்.

பேய் வருவதற்கான அறிகுறிகளையும் சத்தங்களையும் ஏற்படுத்துவதற்காகப் பல வித்தியாசமான செட்அப்களை ஏற்படுத்தியிருப்பார்கள். இது தொடர்பான மெனக்கெடல் காட்சிகளில் நன்கு தெரியும். படத்தின் கிளைமாக்ஸ் உருக்கமாக அமைந்திருக்கும். “ஏம்ப்பா... நல்லபடியா முடித்திருக்கலாமே?” என்று கூட நமக்குத் தோன்றலாம். ஆனால் படத்தின் கட்டக்கடைசி காட்சியில்தான் அதற்கான நியாயம் புரியும்.

மம்மூட்டியின் இயல்பான நடிப்பு, கனகாவின் குறும்பு, ராஜாவின் இனிமையான பாடல்கள், ஃபாசிலின் திறமையான இயக்கம் போன்ற காரணங்களுக்காக, இன்றைக்கும் கூட பார்க்க முடிகிற, பார்க்க வேண்டிய ஒரு நகைச்சுவைத் திரைப்படம்தான் இந்த ‘கிளிப்பேச்சு கேட்கவா’.

மேலும் படிக்க கிளிப்பேச்சு கேட்கவா: கொள்ளிவாய் பிசாசும் பயந்தாங்கொள்ளியும் - காமெடி ஹாரர் ஜானருக்கான விதை!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top