``மூன்றாவது அணி என்பது, நானும் பைடனும் கூட்டணி வைப்பது மாதிரி!” - கார்த்தி சிதம்பரம் `நச்’

0

அகில இந்திய காங்கிரஸுக்கான தலைவர் தேர்தலில், ‘சசி தரூர்தான் வெற்றிபெறுவார்’ என்ற காங்கிரஸ் கட்சி எம்.பி கார்த்தி சிதம்பரத்தின் ஆரூடம் பொய்த்து, மல்லிகார்ஜுன கார்கே வெற்றிபெற்றிருக்கிறார். இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்தை அவரது சென்னை அலுவலகத்தில் சந்தித்து சில கேள்விகளை முன்வைத்தோம்...

“ ‘இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது’ என்று சசி தரூருக்கு ஆதரவான கருத்துகளைப் பதிவுசெய்து வந்தீர்கள். சசி தரூரின் தோல்வியில் உங்களுக்கு வருத்தம் உண்டா?”

“இதில் எனக்கு என்ன வருத்தம்... நான் எதிர்பார்த்ததுபோலத்தான் தேர்தல் முடிவு வெளியாகியிருக்கிறது. ஆனாலும், சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றதே மகிழ்ச்சியும் திருப்தியும் அளிக்கிறது.”

ராகுல் காந்தி -சசி தரூர்

“தமிழ்நாடு காங்கிரஸின் இன்றைய நிலை?”

“கர்நாடகவில் அடுத்த ஆறு மாதத்தில் ஆட்சி அமைக்க போகிறோம். ஆனால், தமிழ்நாட்டில் ஐம்பது ஆண்டுகள் ஆகிவிட்டது ஆட்சிக்கு வந்து. அதை பற்றி யாரும் பேசவில்லையே. இப்படி இருக்கும் போது எந்த குறியீடை வைத்து தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி வளர்ந்திருக்கிறது என்று சொல்ல முடியும்?”

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

``ஏன், கட்சி வளர்ச்சிக்காக நீங்கள் ஆக்கபூர்வமாக முன்னெடுக்கலாமே?”

“நான் செய்வதை ஆக்கபூர்வமாக ஏற்பார்களா என்று தெரியவில்லையே. ஓப்பன் மெம்பர்ஷிப்பையே நிறுத்த வேண்டும் என்கிறேன். லட்சோப லட்ச தொண்டர்கள், மிஸ்ட் கால் கொடுத்து தொண்டர்கள் என்று மெம்பர் ஆக்குவதை நான் ஏற்கவில்லை. ஒரு சட்டமன்ற தொகுதி என்று எடுத்து கொண்டால் நூறிலிருந்து இருநூறு பேருக்குள்தான் உறுப்பினர்கள் இருப்பார்கள். அவர்கள் மூலமாகதான் தேர்தல் வைத்து நிர்வாகிகளை தேர்ந்தெடுத்து மக்களை நாடி செல்ல வேண்டும். அப்படி செய்தால் கட்சியின் பலம் என்ன பலவீனம் என்ன என்பது தெரிந்து சில திட்டமிடல்களை முன்னெடுக்கலாம்”

“ஒரு வேளை, அடுத்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தமிழ் நாட்டில் தனித்து போட்டியிட்டால் அதன் முதல்வர் வேட்பாளர் யார்?”

“தனித்து போட்டியிடும் தகுதியே இன்னும் காங்கிரஸ் வரவில்லையே. அந்த விஷ பரிட்சைக்கெல்லாம் போககூடாது”

சந்திரசேகர ராவ், ஸ்டாலின்.

``எதிர்வரும் 2024 தேர்தலில் மூன்றாம் அணி சாத்தியமா? மூன்றாம் அணி தோன்றாமல் இருக்க காங்கிரஸ் கட்சியின் வியூகம் என்னவாக இருக்கும்?”

``மாநிலக் கட்சிகள் எல்லாம் கூட்டணி அமைப்பது கூட்டணியே கிடையாது. இதெல்லாம் பேப்பர் கூட்டணி. ஒரு பேச்சுக்கு டி.ஆர்.எஸ், மம்தாவை எடுத்து கொண்டால் கூட என்ன  பங்கீடு வைத்து கொள்வார்கள். இது நானும் ஜோ பைடனும் கூட்டணி வைத்து கொள்வது மாதிரி. நான் அங்க சீட் கேட்க போவதில்லை. அவர் இங்கே சீட் கேட்க போவதில்லை. எனவே இவர்கள் எல்லாம் எதற்கு இந்தியாவில் உள்ள கட்சிகளோடு கூட்டணி வைத்து கொண்டு, அகில உலக கட்சியோடு கூட்டணி வைத்து கொள்ளலாமே. காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தால்தான் அது கூட்டணி. ஒரு தேசிய கட்சியோடு கூட்டணி வைக்காமல் இந்த மாநில கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்வது கூட்டணியே கிடையாது”

“மத்திய அமைச்சர்கள் ஒவ்வொரு மாநிலமாக ஆய்வுக்கு செல்கிறார்களே?”

“ஒன்றிய அமைச்சர்கள் அவர்கள் அலுவலகத்திலேயே உட்காராமல் ஆய்வுக்கு செல்வது நல்லதுதானே. இன்று இருக்கும் ‘ரிமோர்ட் ஒர்க்கிங்கில்’ எல்லா ஆபிசும் ஏன் டெல்லியில் இருக்கிறது. அரசின் சில தலைமை அலுவலகத்தை பல ஊர்களுக்கு மாற்றலாமே. இது தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஏன் எல்லா அமைச்சர்களும் சென்னைக்கு வர வேண்டும். மதுரை, திருச்சி, கோவை என்று வைத்தால் பல மணி நேரம் பயணம் செய்து சென்னைக்கு வரும் மக்கள் அவர்கள் பக்கத்திலேயே பார்த்து கொள்ளலாமே. இதனால் மக்கள் மனநிலை அவர்களுக்கும் புரிவதோடு, மக்களிடம் நேரடியாக தொடர்பு கொள்ளவும் முடியும்”

ஸ்டாலின் பேச்சு

“தமிழகத்தில் தி.மு.க அரசின் ஆட்சி குறித்து உங்கள் பார்வை?”

“வெளிப்படையான, துடிப்பான, அடிக்கடி மக்களை சந்திக்கும், மக்கள் பார்வையில் படுகின்ற முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார். அவருடைய இந்த ஸ்டைலை முழுமையாக பாராட்டுகிறேன்”

“மற்றபடி நிர்வாகம்...?”

“முதல்வரின் செயல்பாடுகளோடு முடித்துக் கொள்கிறேன்...!”

இந்த கேள்வி பதில்களோடு,

“காங்கிரஸில் நேரு குடும்பத்தின் ஆதிக்கத்தை எதிர்த்த ஜி-23 தலைவர்களில் ஒருவர் சசி தரூர். அவரை நீங்கள் ஆதரிப்பதற்கு ஏதும் உள்ளார்ந்த காரணங்கள் இருக்கின்றனவா?”

“கார்கேவின் வெற்றியை ஜி-23 தலைவர்களின் வெற்றியாக எடுத்துக்கொள்ளலாமா?”

“ ‘யார் தலைவராக வந்தாலும் நேரு குடும்பமே மானசிகத் தலைமையாக இருக்கும்’ என்று பேசியிருக்கிறீர்களே... அப்படியென்றால், புதிய தலைவர் ‘பொம்மை’ என்கிறீர்களா?”

“தமிழ்நாட்டு அரசியலை ‘உணர்ச்சி; கவர்ச்சி; வளர்ச்சி’ என்று விமர்சனம் செய்திருந்தீர்களே?”

“முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை பற்றிய உங்கள் மதிப்பீடு?”

போன்ற கேள்விகளுக்கு தனக்கே உரித்தான துடிப்புடன் 26/10/2022 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழுக்கு பதில் அளித்திருக்கிறார் கார்த்தி சிதம்பரம் எம்.பி.


மேலும் படிக்க ``மூன்றாவது அணி என்பது, நானும் பைடனும் கூட்டணி வைப்பது மாதிரி!” - கார்த்தி சிதம்பரம் `நச்’
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top