கலிபோர்னியாவில் கமலை சீண்டிய அண்ணாமலை... கொதிப்பில் ம.நீ.ம!

0

கலிபோர்னியா சென்றிருந்த பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, அங்கு பா.ஜ.க நிர்வாகிகளைச் சந்தித்துப் பேசும்போது, ``அரசியலில் நடிப்பதற்கு உதாரணமாக கமல்ஹாசனை எடுத்துக்கொள்ளலாம். கடந்த மாதம் லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு ஓய்வெடுத்த வந்தார். இங்கிருந்தபடியே ட்விட்டரில், ‘நான் கட்சி நிர்வாகிகளுடன் அமெரிக்காவில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றேன்’ என்று பதிவிட்டிருக்கிறார். லாஸ் ஏஞ்சலிஸ் நகருக்கு ஓய்வெடுக்க வந்துவிட்டு, இங்க சுத்திகிட்டு இருந்த நான்கு கட்சிக்காரர்களை உட்காரவைத்து, அவர்களோடு மீட்டிங் போட்டதாக போட்டோ வருது. தி.மு.க-வை அடியோடு அழிக்க வேண்டும் என்று சொல்லியவர், இன்று சினிமாக்காக, கையைப்படித்துப் பேசிவிட்டார். எப்படி கமல் சொல்வதை மக்கள் நம்புவார்கள்?

கலிபோர்னியாவில் அண்ணாமலை பேசியபோது

உங்களுக்குப் படம் ஓடவேண்டும் என்பதற்காக தனிப்பட்டக் கொள்கை. கட்சிக்காக இன்னொரு கொள்கை. அவர் கட்சியில் இருந்த மூன்று பொதுச்செயலாளர்களும் பா.ஜ.க-வில் இணைந்துவிட்டனர். ராஜராஜ சோழன் பற்றி இப்போது பேசுகிறார். பொன்னியன் செல்வன் நாவல் எப்போது வந்தது, கமல் எப்போது படித்தார்? அன்றைக்கு ஏன் இந்தக் கருத்தைச் சொல்லவில்லை? பிக்பாஸ் 6 வருவதற்காகத்தான் இப்படியானக் கருத்தைச் சொல்கிறார் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்” என்று தொடர்ந்து பேசியிருக்கிறார்.

பிக் பாஸ் கமல்
மக்கள் நீதி மய்யம்

இதற்கு கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் எதிர்ப்புத் தெரிவித்துவரும் வேளையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் அறிக்கை மூலம் அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். அவரிடம் பேசினோம், ``வேறு துறைகளில் இருந்து அரசியலுக்கு வந்தவர்கள், தான் வந்தப் பாதையைப் பார்க்க வேண்டும். காவல்துறை அதிகாரியாக இருந்தவர் போன்றா நடந்துகொள்கிறார்? தலைவர் கமல் சினிமா தொடர்பான அட்வான்ஸ் கோர்ஸ் ஒன்றைப் படிக்க லாஸ் ஏஞ்சல்ஸுக்குச் சென்றார். அவர் ஒன்றும் ஓய்வெடுக்கச் செல்லவில்லை. அந்த சினிமா தொடர்பான கல்வி மையத்தில் படித்த அத்தனை பேரும் 30 வயதுக்குக் கீழானவர்கள். கமல் மட்டும்தான் 68 வயதிலும் புதிதாகப் படிக்க வேண்டும், கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் சென்றிருந்தார்.

அங்கு சென்ற இடத்தில் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். கமல் எந்த லாஸ் ஏஞ்சல்ஸில் கட்சிக்காரர்களைச் சந்தித்துப் பேசியதை அண்ணாமலை கிண்டல் செய்தாரோ, அதே லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில்தானே அவரும் கட்சியினரை அழைத்துக் கூட்டம் போட்டு அரசியல் பேசுகிறார். எந்த விஷயத்தில் நாம் இன்னொருவரைக் குறை சொல்கிறோமோ அதிலிருந்து முதலில் நாம் விலகியிருக்க வேண்டுமல்லவா? அண்ணாமலை ஒரு விஷயத்தைச் செய்துகொண்டு, அதையே அவருக்கு முன்பாகச் செய்த கமலை விமர்சிப்பது கேலிக்கூத்து. பா.ஜ.க-வுக்கே அமெரிக்காவில் கட்சிக்காரர்கள் இருந்தால், ம.நீ.ம-வுக்கு இருக்காதா? கமல் தன்னுடைய சொந்தச் செலவில்தான் அமெரிக்கா சென்றார். அண்ணாமலை அப்படியா சென்றார்? மற்றவர்களின் பணத்தைக்கொண்டுதான் போய்விட்டு வந்திருக்கிறார்.

முரளி அப்பாஸ்

பா.ஜ.க ஆளும்கட்சியாக இருப்பதால் கட்சி நிதி தாராளமாக வரும். ஆனால், ம.நீ.ம-வுக்கு நிதி ஆதாரமே கமல் மட்டும்தான். அவருடைய வீட்டைத்தான் கட்சி அலுவலகமாக மாற்றிக்கொடுத்தார். கடந்த பிக்பாஸில் சம்பாதித்தவற்றில் இருந்துதான் தேர்தலுக்கானச் செலவுகளைக் கையாண்டார். சினிமாவில் சம்பாதிப்பதையும் கட்சிக்காகக் கொடுக்கிறார்.

பொன்னியன் செல்வன் படத்தை அன்றைக்கு நேரில் சென்று பார்க்கப் போயிருந்தார் கமல். படத்தைப் பார்த்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசியபோது, நிருபர் ஒருவர் கேட்டக் கேள்விக்குத்தான் பதில் சொன்னாரே தவிர, வேண்டுமென்றே இவரே எதையும் பேசவில்லை. வெற்றிமாறன் சொல்வது சரி என்று சொல்லும் வகையில், ஆங்கிலேயர்கள்தான் இந்து என்கிற பெயரைக் கொடுத்ததாக வரலாற்றைத் தான் சொல்லியிருந்தார். காஞ்சிப்பெரியவரும், துக்ளக் சோவும் ஒப்புக்கொண்ட உண்மையை, அண்மையில் பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்ரமணியன் சுவாமி வழிமொழிந்த உண்மையைத்தான் கமல் சொன்னார். அதையெல்லாம் மறுக்கத் திராணியற்ற அண்ணாமலை, கமல் மீது மட்டும் பாய்கிறார். இப்படி அர்த்தமற்றப் பேச்சைத் தொடர்ந்துப் பேசுவாரானால், அவர் அரசியலில் மதிப்பிழந்து, அவர் ஏற்கெனவே சொன்னபடி, ஆடுமேய்க்கும் தொழிலுக்குத்தான் போகவேண்டும்!” என்றார் காட்டமாக.

பொன்னியின் செல்வன்

திடீரென கமலை, அண்ணாமலை சீண்டுவதற்கானக் காரணம் குறித்து அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேசியபோது, ``2019 நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது, ‘இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து’ என்று காந்தியைச் சுட்டுக்கொன்ற கோட்சேவை மையப்படுத்திப் பேசினார் கமல். அப்பேச்சு அச்சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போதில் இருந்தே கமல் மீது தமிழக பா.ஜ.க-வுக்கு ஒரு நெருடல் இருந்துவருகிறது. அண்ணாமலை சென்ற அதே கலிபோர்னியாவில்தான் கமலும் இருந்தார் என்பது ஒரு காரணம் என்றாலும், சமீபத்தில் மீண்டும் இந்து மதம் குறித்த வெற்றிமாறனின் பேச்சுக்கு கமல் ஆதரவு கொடுத்துப் பேசியதும் பா.ஜ.க-வுக்குக் கொதிப்பை ஏற்படுத்தியது. அதேநேரம், தி.மு.க கூட்டணி இருப்பதைக் காட்டிலும் மேலும் வலுவடைந்துவிடக்கூடாது என்பதில் அண்ணாமலை உறுதியாக இருக்கிறார். கமலின் மக்கள் நீதி மய்யம், எங்கு தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்துவிடுமோ என்கிற எண்ணத்தில், முன்பு கமல் தி.மு.க-வைக் கடுமையாகப் பேசியதையெல்லாம் எடுத்துக்காட்டிப் பேசியிருக்கிறார் அண்ணாமலை” என்கிறார்கள்.


மேலும் படிக்க கலிபோர்னியாவில் கமலை சீண்டிய அண்ணாமலை... கொதிப்பில் ம.நீ.ம!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top