ஆன்லைனில் பல்வேறு நூதன மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அழகிய ஆண்களின் படத்தின் மூலம், பெண்களை நம்ப வைத்து வீடியோ எடுத்து பணம் பறித்த ஒருவரை கோவை மாநகர் சைபர் க்ரைம் போலீஸ் கைது செய்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் பரமசிவம்.
இவர் யோ-யோ (YOYO), இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்துள்ளார். முக்கியமாக யோ-யோ ஆப் மூலம் பல பெண்களிடம் நண்பராக பழகியுள்ளார்.

அழகிய ஆண்களுடைய புகைப்படத்தை தன்னுடைய புகைப்படமாக (ப்ரொபைல் போட்டோ) வைத்து பல பெண்களை நம்ப வைத்துள்ளார் பரமசிவம்.
பிறகு அவர்களின் அந்தரங்க போட்டோ மற்றும் வீடியோக்களை பெற்று அதை ஆன்லைனில் பரப்பி விடுவேன் என்று மிரட்டி பணம் பறிப்பதை வாடிக்கையாக வைத்துள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் பரமசிவம் மீது மோசடி, பெண்களுக்கு துன்புறுத்தல் கொடுத்தல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸ், தொழில்நுட்ப ஆதாரங்களுடன் அவரை கைது செய்தனர்.
மேலும் படிக்க அழகிய ஆண்களின் படங்களை வைத்து மோசடி - அந்தரங்க வீடியோ பெற்று பெண்களை மிரட்டி பணம் பறித்த நபர் கைது!