ஈரோடு: மின்வாரிய ஸ்கிராப் ஏலம்: அதிகாரிகள் துணையுடன் லட்சக்கணக்கில் முறைகேடா?!

0

ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையத்தையும், நாமக்கல் மாவட்டம், ஓடாநிலையையும் இணைக்கும் வகையில் காவிரி ஆற்றின் குறுக்கே பாலத்துடன் கூடிய கதவணை நீர் மின் நிலையம் இயங்கி வருகிறது. 30 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் வெண்டிபாளையம் நீர்மின் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் நடைபெறும்போது, டான்ஜெட்கோ சார்பில் கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமும், துணை மின் நிலையமும் சுமார் 2.50 ஏக்கர் நிலத்தில் கட்டி முடிக்கப்பட்டது.  

வெண்டிபாளையம் நீர் மின் நிலையம் கட்டி முடித்து 10 ஆண்டுகளாக மின்உற்பத்தி நடைபெற்று வரும் நிலையில், கட்டுமான காலத்தில் கட்டப்பட்ட கண்காணிப்பு பொறியாளர் அலுவலகமும், அதையொட்டி கட்டப்பட்ட 2 அலுவலக கட்டடத்தையும் இடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்தனர். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட அந்தக் கட்டடத்தை இடித்து அதிலுள்ள கதவுகள், இரும்புச் சட்டங்கள் உள்ளிட்ட பொருள்களை ஏலம் விட மின்வாரிய அதிகாரிகள் திட்டமிட்டனர். தற்போது கட்டடம் இடித்து, அதிலுள்ள பொருள்களை அப்புறப்படுத்துவதற்கான ஏலத்தை மிகக் குறைந்த விலைக்கு ஏலம் விட முயற்சிப்பதாகவும், இந்த டெண்டரில் குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு மட்டுமே ஒப்பந்தப்புள்ளி குறித்த அறிவிப்பை அனுப்பியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சில ஒப்பந்ததாரர்கள் கூறியதாவது, ``வெண்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள நீர்மின் திட்ட கண்காணிப்பு பொறியாளர்  அலுவலகம் கடந்த 2007-ம் ஆண்டு வாக்கில் சுமார் ரூ.30 லட்சம் செலவில் கட்டப்பட்டது. மொத்தம் 3 பெரிய அலுவலக அறைகளில் 2 கட்டடத்தை மட்டும் இடித்து அப்புறப்படுத்த மின்வாரிய அதிகாரிகள் முடிவு செய்து அதற்கான ஒப்பந்தப்புள்ளியை கடந்த 14-ம் தேதி வெளியிட்டனர். பொதுவாக இதுபோன்ற ஸ்கிராப் விடுவதற்கான ஏல அறிவிப்பு ஆன்லைன் மூலமாகவே வெளியிடப்படும். ஆனால், இந்த ஏலத்தை ஆன்லைன் மூலம் நடத்தாமல், தங்களுக்கு வேண்டிய சில ஒப்பந்ததாரர்களை மட்டும் அழைத்து அவர்களிடம் இருந்து பெயரளவில் ஒப்பந்தப்புள்ளிகளை பெற்று இந்த ஏலத்தை கடந்த 27ஆம் தேதி நடத்தி முடித்துள்ளனர்.


இந்த ஏலத்தில் பங்கேற்ற ஒப்பந்ததாரரில் ஒரு நபர், டெண்டரில் பங்கேற்ற மற்ற ஒப்பந்ததாரர்களை தனியே அழைத்து குறிப்பட்ட தொகையை கொடுத்து டெண்டரை வாபஸ் பெறச் செய்து, தனக்கே இந்த டெண்டரை கிடைக்கும் வகையில் செயல்பட்டுள்ளார். இதற்கு மின்வாரிய அதிகாரிகளும் உடந்தையாக உள்ளனர். பல லட்சம் செலவில் கட்டப்பட்ட இந்த 2 கட்டடங்களின் இரும்பு சட்டங்கள், கதவுகள், கருங்கற்கள் போன்றவை பல லட்சத்துக்கு ஏலம் போகும். ஆனால் இது வெறும் ரூ. 2.50 லட்சத்துக்கு மட்டுமே இறுதி ஏலம் கோரப்பட்டுள்ளது.

வெண்டிபாளையம் கதவணை நீர்மின் நிலைய கட்டுமான பணிகளின்போது கட்டப்பட்ட கண்காணிப்புப் பொறியாளர் அலுவலகம்.

அதுமட்டுமல்ல, கட்டடம் அமைந்துள்ள நிலமும், தற்போதுள்ள துணை மின்நிலையமும் சேர்த்து 2.50 ஏக்கர் நிலம், கடந்த 2006-ம் ஆண்டில் அதன் நில உரிமையாளரிடம் இருந்து  கையகப்படுத்தப்பட்டது. அந்த நிலத்துக்கு தரவேண்டிய தொகையை மின்வாரியம் இன்னும்  நில உரிமையாளருக்கு வழங்கவில்லை. கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாகி விட்ட நிலையில் அங்கு அமைந்துள்ள துணை மின் நிலையத்தை மீண்டும் நில உரிமையாளருக்கு ஒப்படைக்க முடியாது. ஆனால், கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தின் 2 கட்டடங்களை அகற்றி விட்டு, அந்த அரை ஏக்கர் நிலத்தை மீண்டும் நில உரிமையாளருக்கே ஒப்படைத்து விடும் நோக்கத்தில் இந்த ஏலத்தை அவசரகதியில் நடத்தி முடித்துள்ளனர்” என்றனர்.        

இதுகுறித்து ஈரோடு மண்டல நீர் மின் நிலைய மேற்பார்வை பொறியாளர் பத்மநாபனிடம் கேட்டபோது, ``ஏலம் குறித்த அறிவிப்பு ஈரோடு மாநகராட்சி அலுவலகம், நகராட்சி அலுவலகங்கள், ஒரு சில பஞ்சாயத்து அலுவலகங்களின் அறிவிப்பு பலகையில் ஒட்டி வைக்கப்பட்டுள்ளது. ஏலத்தில் 11 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் ஏலம் கூறியதை விடியோ எடுத்து வைத்துள்ளோம். இந்த டெண்டர் இறுதியானது அல்ல. இந்த டெண்டர் குறித்து முதன்மை பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர் அடங்கிய டெண்டர் கமிட்டிக்கு அனுப்பி வைத்து, சரிபார்க்கப்பட்ட பின்னரே டெண்டர் இறுதி செய்யப்படும்.
நில உரிமையாளருக்கு தொகை வழங்குவதை மின்வாரியமும், அரசும் தான் முடிவு செய்ய வேண்டும். நிலத்துக்கு எவ்வளவு தொகை வழங்குவது என்பதை மாவட்ட நிர்வாகம் தான் முடிவு செய்ய வேண்டும்.” என்றார்,

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத சென்னை டான்ஜெட்கோவின் உயரதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``ஏலத்தில் முறைகேடு நடந்துள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். நில உரிமையாளருக்கு தொகையை வழங்காததற்கான காரணத்தையும் விசாரித்து கூறுகிறேன்” என்றார்.


மேலும் படிக்க ஈரோடு: மின்வாரிய ஸ்கிராப் ஏலம்: அதிகாரிகள் துணையுடன் லட்சக்கணக்கில் முறைகேடா?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top