Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?

0

Doctor Vikatan: ஒருவர் சாப்பிடும் அளவுக்கு அளவுகோல் ஏதும் உண்டா? எனக்கு மிகக் குறைந்த அளவு சாப்பிட்டாலே வயிறு நிறைந்து விடுகிறது. மற்றவர்கள் அது மிகவும் குறைவு என்கிறார்கள். ஒருவர் தேவைக்கேற்ப உணவு உண்பது சரியா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த டயட்டீஷியன் கற்பகம்

கற்பகம், ஊட்டச்சத்து நிபுணர்

ஒருவருடைய வயது, உடலுழைப்பு ஆகியவற்றைப் பொறுத்துதான் அவர் எவ்வளவு உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். சிலருக்கு கொஞ்சம் சாப்பிட்டதும், `இது போதும்.... இதற்கு மேல் வேண்டாம்' என சிக்னல் போன்று கிடைக்கும்.

இன்னும் சிலருக்கு வளர்சிதை மாற்ற செயலானது காலையில் மிக அதிகமாகவும் இரவில் மிகக் குறைவாகவும் இருக்கலாம். அதற்கேற்ப அவர்கள் உணவு எடுத்துக் கொள்ளலாம். சிலருக்கு மாலை வேளையில் அதிகமாகப் பசியெடுக்கும். அவர்கள் இரவு உணவை நன்றாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அப்படி எடுக்கும் இரவு உணவு சீக்கிரமே எடுத்துக் கொள்ளப்பட வேண்டியது அவசியம்.

வயது மற்றும் உடலுழைப்பை வைத்து ஒவ்வொருவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுக்கான `ரெகமண்டடு டயட்டரி அலவன்ஸ்' அளவீடுகள் உள்ளன. உதாரணத்துக்கு வளர்ந்த ஒருவருக்கு தட்டில் பாதி அளவு காய்கறிகள் இருக்க வேண்டும். மீதி அரை பாகத்தை இரண்டாகப் பிரித்து ஒரு பாகம் புரதச்சத்தாகவும், இன்னொரு பாகம் கார்போஹைட்ரேட்டாகவும் இருக்கும்படி எடுத்துக் கொள்ளலாம். இப்படிச் சாப்பிடும்போது தான் நமக்கு சரிவிகிதமாக எல்லா சத்துகளும் கிடைக்கும்.

சிலர் காய்கறிகள், பழங்களை குறைவாக எடுத்துக் கொள்வார்கள். அது தவறு. தினமும் ஒன்றிரண்டு பழங்கள் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். நீரிழிவு உள்ளவர்கள் அதற்கேற்ப மருத்துவ ஆலோசனையுடன் பழங்களை எடுத்துக் கொள்ளலாம்.

டயட்

காய்கறிகளும் அப்படித்தான்... தினமும் 200 முதல் 300 கிராம் காய்கறிகளை அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். பலவித காய்கறிகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் மிக அவசியம். காலையில் சாம்பாரில் காய்கறிகளைச் சேர்ப்பது, காய்கறிகளிலேயே சட்னி செய்வது, பழங்கள் சேர்த்து ஸ்மூத்தி செய்வது போன்று எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவுக்கு பொரியல், கூட்டு, சூப் என காய்கறிகளின் பங்கு அவசியம் இருக்க வேண்டும். இரவிலும் சட்னி, சாம்பார், சூப் போன்ற வடிவங்களில் காய்கறிகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காலை 9 மணிக்கு காலை உணவு, மதியம் 1 மணிக்கு மதிய உணவு, மாலை 4 மணிக்கு சத்தான நொறுக்குத்தீனிகள், இரவு 7- 7.30 மணிக்கு இரவு உணவு சாப்பிட்டுப் பழகும்போது உங்கள் உடலே உங்களுக்கு சிக்னல் கொடுக்கும். இதற்கு மேல் வேண்டாம் என உணர்த்தும். அப்படி உணரும்போது அத்துடன் நிறுத்திக் கொள்ளலாம்.

ஆனால் தேவையின்றி உங்கள் உணவின் அளவைக் குறைத்துக் கொள்ளாதீர்கள். உதாரணத்துக்கு எடைக்குறைப்பு முயற்சியில் இருக்கிறீர்கள் என்றால் ஊட்டச்சத்து ஆலோசகரிடம் பேசி அவர் பரிந்துரைக்கும் உணவுப் பட்டியலை, அதன் அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை நீங்கள் ஸ்போர்ட்ஸ்பர்சனாக இருக்கும்பட்சத்தில் அதற்கேற்ப சற்று கூடுதலாக உணவு எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

உடல் எடை

எனவே உங்களுக்கான உணவு எவ்வளவு என்பதை உங்களால் தீர்மானிக்க முடியாத பட்சத்தில் டயட்டீஷியனின் ஆலோசனையோடு அதைத் தெரிந்து கொண்டு பின்பற்றுவது சிறந்தது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


மேலும் படிக்க Doctor Vikatan: ஒருவர் எவ்வளவு சாப்பிட வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top