இந்தித் திணிப்பு விவகாரம்: தொடரும் அண்ணாமலை Vs திமுக

0

தமிழ்நாட்டில், இந்தித் திணிப்புக்கு எதிரான உணர்வும், போராட்டங்களும் நீண்டகாலமாக இருந்துவருகின்றன. காங்கிரஸ் கட்சியின் ஆட்சியின்போது, இந்தித் திணிப்புக்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்களை தமிழக மாணவர்கள் நடத்தினர். அதன் பிறகும், இந்தித் திணிப்பு முயற்சி தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

அமித் ஷா

காங்கிரஸ் ஆட்சியில் மட்டுமல்லாமல், பா.ஜ.க ஆட்சியிலும் இந்தித் திணிப்பு முயற்சி தொடர்கிறது என்கிற குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது. உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்தி மொழிக்கு ஆதரவாக அவ்வப்போது கருத்துத் தெரிவிப்பதும், அதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்புவதும் அவ்வப்போது நடைபெற்றுவருகிறது.

இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, குடியரசுத்தலைவர் திரௌபதி முர்முவிடம் பல பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்திருக்கிறது. அதில், ‘மத்திய அரசு நடத்தும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், மத்திய பல்கலைக்கழங்கள் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் கட்டாயமாக இந்தி மட்டுமே பயிற்று மொழியாக இருக்க வேண்டும்.

ஆங்கில வழி கல்விக்கு பதிலாக இந்தி வழி கல்வியே கற்பிக்கப்பட வேண்டும். மத்திய அரசின் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளிலும் ஆங்கிலத்தை நீக்கிவிட்டு, இந்தியில் மட்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும்’ என்பன உட்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஸ்டாலின்

மத்திய அரசின் இந்தப் பரிந்துரைகளுக்கு, தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின், “இந்தியைக் கட்டாயமாக்க முயன்று, இன்னொரு மொழிப்போரை எங்கள் மீது திணிக்க வேண்டாம். எங்கள் தாய்மொழி உணர்வு எனும் நெருப்பை உரசிப் பார்க்க வேண்டாம்” என்று மத்திய அரசை எச்சரித்தார்.

தி.மு.க அத்துடன் நிற்கவில்லை. தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், மாணவரணியும் இளைஞரணியும் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தின. சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், “வெறும் ஆர்ப்பாட்டத்துடன் நிற்கமாட்டோம். டெல்லிக்கு வந்து உங்கள் அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்துவோம்” என்று உதயநிதி எச்சரித்தார்.

உதயநிதி ஸ்டாலின்

இந்தி விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிரான தி.மு.க-வின் அறிக்கைகள், போராட்டத்துக்கும் பதில் கொடுத்துவரும் பா.ஜ.க தலைவர்கள், மொழி விவகாரத்தில் தி.மு.க-வை நோக்கி பல்வேறு கேள்விகளை எழுப்பிவருகிறார்கள். ‘இந்தியை எதிர்க்கும் தி.மு.க-வினரே... நீங்கள் நடத்துகிற பள்ளிகளில் மட்டும் ஏன் இந்தியை வைத்திருக்கிறீர்கள்?’ என்று பா.ஜ.க-வினர் கேள்வி எழுப்பிவருகிறார்கள்.

பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை, “சட்டமன்றத்தில் இந்தித் திணிப்புக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. தீர்மானம் மட்டும் போடதான் இந்த ஆட்சியா... தமிழக அரசின் இருமொழி கொள்கை என்பது என்ன... ஆங்கிலம் கட்டாயம், ஆனால் தமிழ் கட்டாயம் இல்லை என்பதுதானே... அதனால்தான் தமிழ்நாட்டில் இருமொழிக் கொள்கை என்ற பெயரில் ஒன்றாம் வகுப்பு முதல் கல்லூரிப் படிப்பு வரை தமிழே படிக்காமல், படிக்கக்கூடிய வாய்ப்பை உருவாக்கி இருக்கிறீர்கள்.

இது தமிழ்மொழிக்கு செய்யும் துரோகம் இல்லையா... தமிழக அரசு செலவில் தமிழ்மொழியைப் படிக்காமலேயே, கல்லூரி வரை படிக்க வசதியாக, அரசு செலவில் இயங்கும் அரசுப் பள்ளிகள் பட்டியல் இருப்பது உண்மையா, இல்லையா பயிற்றுமொழியாக உருது மொழியில் 56 பள்ளிகள், மலையாளப் பள்ளிகள் 50, தெலுங்குப் பள்ளிகள் 35, கன்னடப் பள்ளி 1, இதுதவிர பாடமொழியாக உருது மொழியில் 204 பள்ளிகள், மலையாள மொழியில் 50 பள்ளிகள், தெலுங்கு மொழியில் 234 பள்ளிகள், கன்னட மொழியில் 60 பள்ளிகள் அரசு செலவில் இயங்குகின்றன.

அண்ணாமலை

தமிழ் மொழியை நீக்கிவிட்டு பிற மொழிகளை சொல்லித்தரும் அரசு, இந்தியை மட்டும் விருப்பம் உள்ளவர்கள் படிக்க அனுமதி மறுப்பது ஏன்? கல்வியில் ஏன் அரசியல் செய்கிறீர்கள்? 50 ஆண்டுகளுக்கும் மேலாக 1962 முதல் இருக்கும் தி.மு.க., தமிழை வளர்க்க என்ன செய்திருக்கிறது? தமிழர்கள் முன்னேற்றம் என்று சொல்ல மனமில்லாமல் திராவிட முன்னேற்றம் என்று கூறும் தி.மு.க-வா தமிழர்களை முன்னேற்றப்போகிறது? ஆனால், பிரதமர் நரேந்திர மோடி தமிழின் பெருமையை உயர்த்திப் பிடிக்கிறார். தமிழுக்கு எதுவுமே செய்யாமல் தமிழுக்காக போராட்டம் என்ற பொய்ப் பிரசாரத்தை இன்னும் எத்தனை நாள் தி.மு.க செய்துகொண்டிருக்கும்?” என்று அண்ணாமலை கேள்விகளை எழுப்பியிருக்கிறார்.

அண்ணாமலை, உதயநிதி ஸ்டாலினை நோக்கி ஒரு கேள்வியை எழுப்புகிறார். “திரையரங்குகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களை வாங்கி வைத்துக்கொண்டு, இந்தித் திரைப்படங்களைத்தான் பார்க்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் இந்தியைத் திணிக்கிறாரே... இன்னும் கொஞ்ச நாட்களில் அனைத்து இந்தி படங்களின் உரிமைகளும் உதயநிதி ஸ்டாலின் தான் வாங்குவார். எனவே, இந்தி மொழி விவகாரத்தில், பொய்யான வாதங்களை தி.மு.க கைவிட வேண்டும். தமிழ், தமிழ் என்று கட்சியைத் தொடங்கியவர்கள், எதற்காக இந்தி படங்களின் விநியோகத்தை வாங்க வேண்டும்’ என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருக்கிறார்.

ஸ்டாலின்

மேலும், ``1967-ல், இந்தி எதிர்ப்புப் போர் தி.மு.க-வை அரியணை ஏற்றியது. இப்போது காலம் மாறிவிட்டது. அதே இந்தி எதிர்ப்புதான் தி.மு.க-வின் வீழ்ச்சிக்கும் காரணமாக இருக்கப்போகிறது” என்று கூறும் அண்ணாமலை, “இந்தித் திணிப்பு என்ற பெயரில் தி.மு.க நடத்தும் கபட நாடகத்தை வெளிக்கொண்டு வரும் வகையில், மாவட்ட தலைநகரங்களில் பா.ஜ.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்” என்று அண்ணமலை கூறியிருக்கிறார்.

இந்தி விவகாரத்தில் கொள்கை ரீதியான தனது நிலைப்பாட்டையும் எதிர்ப்புக்கான விளக்கங்களையும் தி.மு.க தலைவர்கள் கூறிவருகிறார்கள். ஆனால், இந்தி மொழி விவகாரம் தொடர்பாக அண்ணாமலை உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்கள் எழுப்பிவரும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தி.மு.க-வினர் திணறுவது ஏன் என்பது பா.ஜ.க-வினரின் கேள்வியாக இருக்கிறது.


மேலும் படிக்க இந்தித் திணிப்பு விவகாரம்: தொடரும் அண்ணாமலை Vs திமுக
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top