பிக் பாஸ் 6 நாள் 24: `மானம்,மரியாதை இழந்து பிக் பாஸ்ல இருக்க முடியாது!' மீண்டும் சண்டை; மல்லுக்கட்டு

0
ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. அசிமும் தனலஷ்மியும் இந்த சீசனின் இறுதி வரை நிச்சயம் தாக்குப் பிடிப்பார்கள். அந்த அளவிற்கு ரணகளமான கன்டென்ட் தருகிறார்கள். இருவருக்கும் இடையில் எந்த நேரத்தில் பற்றிக் கொள்ளும் என்றே யூகிக்க முடியவில்லை. அப்படி பற்றிக் கொண்டால், சரவெடி மாதிரி அரைமணி நேரத்திற்கு வெடித்துத் தள்ளி விடுகிறார்கள். டாம் அண்ட் ஜெர்ரி மாதிரி எப்போதும் ஒருவரையொருவர் கொலைவெறியுடன் துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்.
அசிம்

ஆரம்ப நாட்களில் அண்ணன் – தங்கச்சியாக பாசம் காட்டியவர்கள், இப்படி மாறுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. ‘தொட்டுப் பாத்தா ஷாக் அடிக்கும் வேற மாறி’ என்கிற பாடல் வரிக்கு சரியான உதாரணமாக இருக்கிறார் தனலஷ்மி. கோபம் மண்டைக்குள் ஏறி விட்டால் எதிரில் எவராக இருந்தாலும் ஒரே மிதிதான்.

நாள் 24-ல் நடந்தது என்ன?

‘அடுத்து என்ன செய்யலாம்?’ என்று ‘அந்த டிவி’ அணி பேசிக் கொண்டிருந்தது. ‘ஆயிஷா தன்னை மாத்திக்கணும்.. முதல் நாள்ல நான் பார்த்த ஆயிஷா இவ இல்லை’ என்று தனலஷ்மி புகார் தர, ‘அவளை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். இப்ப இருக்கற ஆயிஷாதான் ஒரிஜினல்’ என்று திருநெல்வேலி அல்வா மாதிரி சான்றிதழ் தந்தார் அசிம். இதனால் தனலஷ்மிக்கும் அசிமிற்கும் இடையே வழக்கம் போல் முட்டல் ஆரம்பித்து அதன் சூடு அதிகமாகிக்கொண்டே போனது.

தனலஷ்மி

‘பேய்க்கும் பேய்க்கும் சண்டை.. ஊரே வேடிக்கை பார்க்குது’

கமலின் எச்சரிக்கைக்குப் பிறகு சற்று பம்மியிருக்கும் அசிமின் உள்ளே தூங்கிக் கொண்டிருக்கும் மிருகம் மறுபடியும் மெல்ல எழ ஆரம்பித்திருக்கிறது. அவரால் தன்னுடைய கோபத்தையும் உயர்வு மனப்பான்மையையும் கட்டுப்படுத்த முடியவில்லை. “மரியாதை கொடுத்துப் பேசு” என்று அசிம் எகிற “என்னால அடங்கிப் போக முடியாது" என்று பதிலடி தந்தார் தனலஷ்மி. ‘உன்னை விடவும் எனக்கு சூப்பரா கோபம் வரும்’ என்று அசிம் சொல்ல “அது எனக்குத் தெரியும்.. பதிலுக்கு வாய் பேசினா என்ன பண்ணுவீங்க?” என்று தனலஷ்மியும் விடாமல் மல்லு கட்டினார். ‘உன் கோபத்துக்கும் என் கோபத்துக்கும் சோடி போட்டுக்குவமா.. சோடி’ என்பது போல் இருவரும் சூடு தணியாமல் பேசிக் கொண்டே போனார்கள்.

தனலஷ்மி ஆத்திரத்துடன் எழுந்து செல்ல, “ஏன் அவளுக்குப் பயப்படறீங்க?” என்று மற்றவர்களிடம் அலுத்துக் கொண்ட அசிம் ‘மானம் மரியாதை இழந்து பிக் பாஸ்ல என்னால் இருக்க முடியாது. இனிமே நான் இந்த டீம்ல இருக்க மாட்டேன்’ என்று வீர சபதம் செய்தார். (ஒருவருக்கு இவ்வளவு சொரணை இருந்தால் கமலால் ரிவிட் அடிக்கப்பட்ட போதே வெளியேறி இருக்க வேண்டும்!). வீட்டிற்கு வெளியே சென்ற தனம் ஆனந்தமாக மழையில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தார். (என்னா வில்லத்தனம்!).

பிறகு எதிரணியிடம் சென்ற தனலஷ்மி, நடந்த பிரச்சினையைப் பற்றி விவரித்தார். ஆனால் இந்தச் சமயத்திலும் வாய் விடாமல் அணி ரகசியத்தை அவர் காப்பாற்றியது நன்று. சம்பந்தப்பட்டவர்கள் பெயர்களைச் சொல்லாமல் நடந்தவற்றை மட்டும் சொன்னார்.

‘நான் இந்த டீம்ல இருக்க மாட்டேன்’ – அசிமின் தொடரும் அட்ராசிட்டி

சற்று சமாதானம் அடைந்த ‘அந்த டிவி’ அணி, மறுபடியும் ஆலோசனைக்கு கூடியது. ‘விவாத களத்துல பேச எனக்கு ரெண்டாவது சான்ஸ் வேணும். ஆனா அசிம் கூட வேணாம்’ என்று தனலஷ்மி சொல்ல, மீண்டும் ஏழரை வந்து அங்கு உக்கிரத்துடன் அமர்ந்தது. இதனால் அசிம் கோபப்பட ‘அவ.. இவ..’ன்னு மரியாதை இல்லாம பேசாதீங்க” என்று ஆத்திரத்தின் உச்சிக்கே சென்றார் தனலஷ்மி.

மணிகண்டன், குவின்சி

தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள இயலாமல் அசிம் பொருமிக் கொண்டே இருந்ததால் “ஏன் கத்திக்கிட்டே இருக்கீங்க.. யாராவது ஒருத்தர் விட்டுக் கொடுங்க” என்று மகேஸ்வரியும் டென்ஷன் ஆனார். மறுபடியும் எதிரணியிடம் சென்று தன் பிரச்சினையை கோபமும் அழுகையுமாக தனலஷ்மி சொல்ல “இந்த கத்தற டிராமால்லாம் வேண்டாம்” என்று இங்கிருந்தே கத்தினார் அசிம். தனலஷ்மிக்கு ஆதரவாக அமுதவாணன் வந்து பேச, அசிமின் டென்ஷன் இன்னமும் ஏறியது. ‘என்னால இந்த டீம்ல இருக்க முடியாது’ என்று அழிச்சாட்டியம் செய்தார்.

‘ஆத்தங்கர ஓரத்தில்’ என்கிற பாடலுடன் நாள் 24-ன் பொழுது விடிந்தது. தலைவர் மணிகண்டனை தரதரவென இழுத்துச் சென்ற ரச்சிதா, கிச்சன் ஏரியாவில் பாத்திரங்கள் கழுவப்படாமல் அப்படியே கிடப்பதை சுட்டிக் காட்டினார். ‘நாங்கள்லாம் வெஷல் வாஷிங் டீம்ல இருந்தப்ப.. இந்த மாதிரில்லாம் போட்டு வெக்க மாட்டோம்’ என்று பெருமை பேசினார் ராபர்ட். பிறகு யாரும் வராததால் மணிகண்டனே பாத்திரங்களைக் கழுவித் தந்தார்.

லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்கை அறிவித்தார் பிக் பாஸ். வரவிருக்கும் போட்டிகளில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ அதற்கு 3600 பாயிண்ட்ஸ் கிடைக்குமாம். அந்த வெற்றிக்குப் பெரும் காரணமாக இருந்த ஒரு நபருக்கு 1800 பாயிண்ட்ஸ் லம்ப்பாக பங்கு கிடைக்குமாம். (குடுமிப்பிடிச் சண்டைகளை உருவாக்குவதற்காகவே பிக் பாஸ் ரூம் போட்டு யோசிப்பார் போல!).

தண்ணீருக்குள் கைப்பந்து

‘தண்ணீருக்குள் கைப்பந்து’ என்கிற விளையாட்டு ஆரம்பித்தது. ‘மழை காரணமாக 2 கோல் அடிக்கும் அணிக்கு வெற்றி’ என்று நடுவில் அறிவித்தார் பிக் பாஸ். நீச்சல் குளத்தில் ஆட்டம் நடக்கும் போது மழை பெய்தால்தான் என்ன? இதில் அசிமும் மணிகண்டனும் தலா ஒரு கோல் போட்டு ‘இந்த டிவி’ அணிக்கு வெற்றி தேடித் தந்தார்கள். (யாரோ.. ஒருத்தரு.. ‘இந்த டீம்லயே இருக்க மாட்டேன்’ன்னு சபதமெல்லாம் எடுத்தாரு!).

‘தனலஷ்மி பற்றி புறணி பேசிய ஏடிகே’

ஏறத்தாழ ஒரே அலைவரிசையில் சிந்தித்து நண்பர்களாக இருக்கும் விக்ரமனிற்கும் ஷிவினிற்கும் இடையில் கூட மோதல் வந்தது. பிக் பாஸ் வீட்டு ராசி அப்படி. ‘எல்லாத்துக்கும் நொய். நொய்..ன்னு ஏதாவது கருத்து சொல்லிட்டே இருப்பீங்களா?’ என்பது போல் விக்ரமனிடம் வெடித்தார் ஷிவின்.

ஏடிகேவிற்கு நல்ல காமெடி சென்ஸ் இருக்கிறது. ஆனால் அசிமிற்கு ஆதரவாக வலது கரம் போல் செயல்படுவது அவருக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும். “அசிம் பேஸிக்கலி நல்லவன். இந்த கேம் அவனை டென்ஷன் ஆக்குது.. தனலஷ்மி யாரையும் மதிக்க மாட்டேங்குது. வெளில யாராவது செவுள்லயே வெச்சா தெரியும். ஆம்பளைங்க அடங்கிப் போவாங்க. இதே லேடீஸ் கூட சண்டை வரட்டும்.. அப்ப தெரியும்..” என்பது போல் ராபர்ட்டிடம் தனலஷ்மி பற்றி புறணி பேசிக் கொண்டிருந்தார் ஏடிகே.

ஏடிகே

அடுத்ததாக ஒப்பனைப் போட்டி. எதிர் டீமைச் சேர்ந்த ஜனனியை அழைத்து ‘மேக் ஓவர்’ பரிசோதனையை ‘இந்த டிவி’ அணி ஆரம்பித்தது. ஒப்பனைக்குப் பிறகு அயல்கிரகவாசி போல விநோதமாக காட்சியளித்தார். ‘அந்த டிவி’யும் இதற்கு பதிலடி தர முடிவு செய்தது. ‘தனலஷ்மி’ யை அழைத்து ஒப்பனை செய்தார்கள். இந்த முயற்சி வெற்றி பெற்றது என்றுதான் சொல்ல வேண்டும். பலரும் இதைப் பாராட்டினார்கள். ஆனால் இந்தச் சமயத்தை மிகச்சரியாக தேர்ந்தெடுத்து சேரில் அமர்ந்தபடி உறங்கிக் கொண்டிருந்தார் அசிம். (நடிகன்டா... நடிகன்டா..).

‘எனக்கு உப்புமாவே போதும்’ – தியாகி ஜனனியின் பரிதாபக் கதை

ஸ்கிராட்ச் கார்ட் போட்டியில் வென்றதன் காரணமாக, நிவாவிற்கு வீட்டு உணவு வந்து சேர்ந்தது. மற்றவர்கள் பார்த்து பெருமூச்சு விட்டார்கள். ‘ஒரு நாள் மெனுவை ஜனனி தீர்மானிக்கலாம்’ என்பது ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டது. “ஆக்சுவலி.. எனக்கு காலைல இட்லி, மதியம் சிக்கன் பிரியாணி.. நைட்டு நூடுல்ஸ் சாப்பிடத்தான் ஆசை.. ஆனா இங்கதான் ஒண்ணுமே இல்லியே.. என் கெரகம்.. என்ன செய்யறது.. உப்புமா, முள்ளங்கி சாம்பார், கோதுமை தோசை போதும்...” என்று சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்து கொண்டார் ஜனனி. (குடும்பக் கஷ்டம் தெரிஞ்ச பொண்ணுப்பா!).

ஜனனி

பாத்திரம் கழுவும் அணியில் இன்னமும் பஞ்சாயத்து ஓயவில்லை. எனவே மணிகண்டன் மல்லு கட்ட வேண்டியதாக இருந்தது. ராம் சரியாக ஒத்துழைக்காததால் விக்ரமன் அலுத்துக் கொள்ள “போய் ஹெல்ப் பண்ணுங்க ப்ரோ” என்று மணிகண்டன் சொல்ல, காலை நீட்டி ஒய்யாரமாகப் படுத்திருந்த ராம் “குணமா வாய்ல சொல்லணும்.. குற்றம் கண்டுபிடிக்கற மாதிரில்லாம் பேசக் கூடாது.. அவரு கழுவி வெக்கட்டும்.. அப்புறம் நான் எடுத்து வைக்கறேன்..” என்று அழிச்சாட்டியம் செய்தார். ஒரு சாதாரண வேலைக்கு இத்தனை பஞ்சாயத்து! வெளியே அனுப்பப்பட வேண்டியவர்களின் பட்டியலில் ராமும் பிரதானமாக இருப்பார் போலிருக்கிறது.

‘நிகழ்ச்சியில் சூடு குறையுதே’ என்று உள்ளே கொலைவெறியுடன் யோசித்துக் கொண்டிருந்த பிக் பாஸ், இன்னமும் கூடுதலாக நாலைந்து விறகுக் கட்டைகளைப் போட்டு நெருப்பை ஊதி விட தீர்மானித்தார். ‘இரண்டு அணிகளும் ஒருவரைத் தேர்ந்தெடுத்து, ‘அவரிடம் உள்ள எந்தக் குணாதிசயம் மாற்றிக் கொள்ளப்பட வேண்டும்?’ என்று அனைவரும் சொல்ல வேண்டும்.

‘எங்களுக்கு டிஆர்பிதான் முக்கியம்’ – ‘இந்த டிவி’யின் லட்சியம்

அமுதவாணன் அணி, இதற்காக எதிர்டீமைச் சேர்ந்த தனலஷ்மியைத் தேர்வு செய்தது. தனலஷ்மி வாயைத் திறந்தாலே அது பிரமோவில் வருவதற்கான காட்சி என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ‘எங்களுக்கு டிஆர்பிதான் முக்கியம்” என்று உண்மையை பட்டவர்த்தனமாக போட்டு உடைத்தார் ரச்சிதா. (‘நீ என் இனமடா..’ என்று உள்ளே பிக் பாஸ் உச்சி முகர்ந்திருப்பார்’).

தனலஷ்மி, குவின்சி, ஜனனி

தனலஷ்மியை அமர வைத்து ஆளுக்கு ஆள் உபதேசம் சொன்னார்கள். அதேதான். ‘தனலஷ்மி தன் கோபத்தையும் எளிதில் உணர்ச்சிவசப்படுவதையும் குறைத்துக் கொள்ள வேண்டும்’ என்பதுதான் அந்த உபதேசத்தின் சாரம். “உன் கிட்ட பேசும் போது எனக்கே பயமா இருக்கும்மா’ என்று அமுதவாணன் சொல்ல, சட்டென்று சிரித்து விட்டார் தனலஷ்மி.

அனைவரும் ஒரு திசையில் செல்லும் போது அதற்கு எதிர் திசையில் செல்வதுதானே கலகவாதிக்கு அழகு?! எனவே “கோபம் –ன்றது தப்பான விஷயம் இல்ல. நியாயமானதுக்கு கோபப்படணும்.. இந்த விஷயத்தில் நான் தனலஷ்மியைப் பாராட்டுகிறேன். ஏ.. மானிட சமூகமே.. கோபப்படு.. அறச்சீற்றம் முக்கியம்’ என்று உரத்த குரலில் பிரசங்கம் செய்தார் விக்ரமன். ‘கறை நல்லது’ என்கிற விளம்பர வாக்கியம் போல “கோபம் நல்லது’ என்பது விக்ரமனின் தத்துவம். சுயமரியாதைக்கு இழுக்கு வரும் போதெல்லாம் தனலஷ்மி பொங்கியெழுவது சரியானதுதான். ஆனால் பெரும்பாலான விஷயங்களுக்கு தனலஷ்மிக்கு வரும் முன்கோபத்தையும் அநாவசிய டென்ஷனையும் விக்ரமன் நியாயப்படுத்துவது முறையல்ல.

‘உங்களுக்கும் எனக்கும் வாய்க்கா தகராறா?’ – மணிகண்டன் ஆவேசம்

அடுத்ததாக விக்ரமனை நடுவில் அமர்த்தி இன்னொரு அணி உபதேசத்தை ஆரம்பித்தது. “எல்லாத்துக்கும் கருத்து சொல்றீங்க. சென்சிட்டிவ்வா இருக்கீங்க. கடுகடுன்னு பேசறீங்க” என்பதே இதன் சாரம். விக்ரமனைப் போலவே தனலஷ்மியும் மற்றவர்களில் இருந்து விலகி ‘வித்தியாசமாக’ கருத்து தெரிவித்தார். “யாரையும் நம்பாதீங்க. சுத்தி இருக்கறவங்க சொல்றதை கேட்காதீங்க..’ என்பது தனலஷ்மியின் அபிப்ராயம்.

இதன் முடிவில், நீதிபதியாக வந்த மகேஸ்வரி சொன்ன இரண்டு பாயிண்ட்டுகளும் அருமை. மகேஸ்வரியால் சரியாக சிந்திக்க முடியும் என்பதற்கான அடையாளம் இது. “தனலஷ்மியின் முக எக்ஸ்பிரஷன் பத்தி ஆயிஷா சொன்னது தலைப்பிற்குத் தொடர்பில்லாத விஷயம். மாற்றப்பட வேண்டிய குணாதிசயத்தை சுட்டிக் காட்டறதுதான் டாப்பிக்’ என்ற மகேஸ்வரி, அடுத்து சொன்னதும் சரியானது. “தனலஷ்மியின் கோபம் சரியானதுன்னு விக்ரமன் சொன்னாரு.. மாத்திக்க வேண்டிய விஷயத்தைத்தானே சொல்லணும்?’ என்று பாயிண்டை சரியாகப் பிடித்தார். கடைசியாக, ‘அந்த டிவி’க்கு நான்கு பாயிண்ட் கிடைத்தது.

மணிகண்டன்

இன்னொரு அணியின் நீதிபதிகள் தீர்ப்பு சொல்ல வேண்டிய நேரம். ‘மணிகண்டனிடம் பாயிண்ட்ஸ் இல்ல.. பிரச்சினையை தேர்ந்தெடுத்து அதுக்கு மட்டும் நான் பேசறதா சொன்னாரு.. அப்படியில்ல. அவருக்கு என் மேல தனிப்பட்ட பழிவாங்குதல் குணம் இருப்பதாகத் தோன்றுகிறது’ என்று நீதிபதிகளுள் ஒருவரான விக்ரமன் சொல்ல “உங்களுக்கும் எனக்கும் முன்னாடியே வாய்க்கா தகராறு இருக்கா.. உங்களை யாருன்னே எனக்குத் தெரியாது. அப்புறம் எப்படி Personal Vengeance வரும்.. ஏன் எப்பவும் என்னையே டார்கெட் பண்றீங்க?’ என்று துள்ளிக் குதித்தார் மணிகண்டன். இருவருக்குள்ளும் வாதம் சூடானது. விக்ரமனின் ‘நாட்டாமைத்தனம்’ தொடர்பாக மணிகண்டனுக்குள் ஏற்கெனவே நிறைய அதிருப்தி இருப்பதை பல சமயங்களில் முன்பு பார்த்திருக்கிறோம்.

இன்னொரு நீதிபதியான ரச்சிதா பேசும் போது ‘விக்ரமன் கிட்ட பாசிட்டிவ் மாற்றம் வரணும்னுதான் சொல்றீங்க.. நல்ல விஷயம்தான். அவர் இறுக்கமா இல்லாம.. இன்னமும் கொஞ்சம் Fun-ஆ.. ஃப்ரீயா இருந்தா நல்லாயிருக்கும்’ என்று சொல்லி எதிரணிக்கு ஒரு பாயிண்ட் கூட்டினார்.

விக்ரமன், ரச்சிதா
‘இறுக்கமா இருக்கார்’ என்பதை ‘நெருக்கமா இருக்கார்’ என்று முதலில் வாய் தவறுதலாக சொல்லி சூழலை கலகலக்க வைத்தார் ரச்சிதா. (அது ராபர்ட்டிற்கு சொல்ல வேண்டியதாச்சே?!). “இந்த மணிகண்டன் ஏங்க. இப்படி இருக்காரு..” என்று தன் தரப்பு நியாயத்தை அசிமிடம் விக்ரமன் அனத்திக் கொண்டிருந்த காட்சியோடு எபிசோட் நிறைந்தது.

மேலும் படிக்க பிக் பாஸ் 6 நாள் 24: `மானம்,மரியாதை இழந்து பிக் பாஸ்ல இருக்க முடியாது!' மீண்டும் சண்டை; மல்லுக்கட்டு
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top