கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்-க்கு செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!

0

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுள்ளார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவிற்குள் நுழைந்திருக்கிறது. இந்த யாத்திரை தேர்தலை கருத்தில் கொண்டு திட்டமிடப்படவில்லை. ஆனால் குஜராத், இமாச்சல பிரதேசத்திற்கு அடுத்த மாதம் தேர்தல் நடக்கிறது. குஜராத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரியான தலைமை இல்லாமல் இருக்கிறது. அதோடு ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கி சூறாவளியாக பிரசாரம் செய்து வருகிறது. ஏற்கனவே டெல்லி, பஞ்சாப்பை காங்கிரஸ் கட்சியிடமிருந்து ஆம் ஆத்மி பிடுங்கிக்கொண்டது. இப்போது குஜராத்திற்கு குறி வைத்திருகிறது. காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் களத்தில் தலைமை மற்றும் நட்சத்திர பேச்சாளர்கள் இல்லாமல் இருக்கிறது. இதனால் குஜராத் காங்கிரஸ் கட்சியினர் விழி பிதுங்கி நிற்கின்றனர். ஆனால் ஆம் ஆத்மி கட்சியினர் குஜராத்தில் தொடர்ச்சியாக பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அர்விந்த் கெஜ்ரிவால் தொடர்ச்சியாக காங்கிரஸ் கட்சியால் குஜராத்தில் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்றும், தங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கூறி முதல்வர் வேட்பாளரையும் அறிவித்து பிரசாரம் செய்து வருகிறார். குஜராத்தில் கடந்த முறை சட்டமன்ற தேர்தலின் போது ராகுல் காந்தி தீவிர பிரசாரம் செய்ததால் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதோடு பிரதமர் பதவியில் மோடி இருந்த போதும் கூட பாஜகவால் 100 தொகுதிகளில் வெற்றி பெற முடியவில்லை. கடந்த முறை ராகுல் காந்தியின் கோயில் ஓட்டம் மக்களிடம் அதிக வரவேற்பை பெற்றது. அதே போன்று ஜோடோ யாத்திரை குஜராத்திற்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் இம்முறை ராகுல் காந்தி குஜராத் பிரசாரத்திற்கு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

திட்டமிட்டபடி ராகுல் காந்தி தனது ஜோடோ யாத்திரையை மகாராஷ்டிராவில் முடித்துக்கொண்டு மத்திய பிரதேசத்திற்குள் செல்லவேண்டும். அதன் படிதான் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் தேர்தலையொட்டி ராகுல் காந்தி தனது திட்டத்தில் சிறிது மாற்றம் செய்து தனது யாத்திரையை குஜராத் நோக்கி திருப்பவேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் விருப்பம் தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி குஜராத் நோக்கி ஜோடோ யாத்திரையை திருப்பினால் அது காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் நோக்கர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ராகுல் காந்தி குஜராத் தேர்தல் பிரசாரத்திற்கு வந்தால் எதையாவது சர்ச்சைக்குறிய வகையில் பேசி அது பாஜகவுக்குத்தான் சாதகமாக அமையும் என்று பாஜக தலைவர் ஒருவர் தெரிவித்தார். ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி ஏற்கனவே குஜராத்திற்கு எதிராக பேசியிருப்பதையும் அந்த தலைவர் சுட்டிக்காட்டினார்.

அதோடு இமாச்சல பிரதேச தேர்தலுக்கும் ராகுல் காந்தி செல்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜோடோ யாத்திரையை சில நாட்கள் நிறுத்திவிட்டுத்தான் இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொள்ளவேண்டும். இது தொடர்பாக இமாச்சல பிரதேச காங்கிரஸ் தலைவர் பிரதிபா சிங் அளித்திருந்த பேட்டியில், ``ராகுல் காந்தி பிரசாரத்திற்கு வருவதாக தெரிவித்துள்ளார்” என்று குறிப்பிட்டு இருந்தார். ஆனால் வருவாரா என்று தெரியவில்லை. குஜராத் பாஜக-வுக்கு மிகவும் முக்கியமான மாநிலமாக இருக்கிறது. 2024-ம் ஆண்டு நடக்க இருக்கும் மக்களவை தேர்தலுக்கு குஜராத் தேர்தல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. பிரதமர் மோடியும் பம்பரமாக சுழன்று பிரசாரம் செய்து வருகிறார்.

தலைவர்களின் வாரிசுகள் ராகுல் யாத்திரையில் பங்கேற்பு:

மகாராஷ்டிராவுக்குள் நுழைந்துள்ள ராகுல் காந்தியின் யாத்திரையில் ஆரம்பத்தில் சரத்பவார் மற்றும் உத்தவ் தாக்கரே கலந்து கொள்வதாக இருந்தது. உத்தவ் தாக்கரே ஏற்கனவே உடல் நலம் பாதிக்கப்பட்டவர். சரத்பவாரும் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதனால் அவரால் ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்க முடியவில்லை. இதையடுத்து சரத்பவாரின் மகள் சுப்ரியா சுலே கட்சி நிர்வாகிகளுடன் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்டார். இதே போன்று உத்தவ் தாக்கரேயிக்கு பதில் அவரது மகன் ஆதித்ய தாக்கரே நேற்று மாலையில் ராகுல் காந்தியின் யாத்திரையில் கலந்து கொண்டார். இருவரின் யாத்திரையில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர். முதல் முறையாக இருவரும் இந்த யாத்திரையில் சந்தித்துக்கொண்டனர்.


மேலும் படிக்க கட்சியினரின் எதிர்பார்ப்பு... தேர்தல் நடக்கும் குஜராத்-க்கு செல்லுமா ராகுலின் ஜோடோ யாத்திரை?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top