T20 WC Final: `Expect the Unexpected' - மாபெரும் சபையில் வெற்றிக்கொடியைப் பறக்கவிடப்போவது யார்?

0

டி20 உலகக்கோப்பை இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. லட்சம் பேர் கூடப்போகும் அந்த மாபெரும் மெல்பேர்ன் மைதானத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றனர்.

சொல்லியடித்த கில்லியாக இந்திய அணியை இறுதிப்போட்டிக்கு வரவிடாமல் செய்து இங்கிலாந்தை கம்பீரமாக இறுதிப்போட்டிக்குக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார் ஜாஸ் பட்லர். 1992-ல் மெல்பேர்னில் இம்ரான் கான் செய்ததை போன்றதொரு சம்பவத்தை இந்த முறை செய்தே தீருவோம் என பாகிஸ்தானும் இறுதிப்போட்டியில் கச்சைக்கட்டி கொண்டு நிற்கிறது. வெல்லப்போவது யார், இரு அணிகளின் பலம் பலவீனம் என்ன?

இரு அணிகளுமே கடந்த உலகக்கோப்பையில் மிகச்சிறப்பாக ஆடியிருந்தன. ஆயினும், அந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டிக்கு இரு அணியாலும் தகுதிப்பெற முடியவில்லை. ஆனால், இந்த உலகக்கோப்பையில் இரு அணிகளுமே அத்தனை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. சூப்பர் 12 சுற்று ஆரம்பித்து முதல் ஒரு வாரம் முடிந்திருந்த சமயத்தில் இங்கிலாந்தும் பாகிஸ்தானும் இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெறுமா என யாரிடமாவது கேட்டிருந்தால், வாய்ப்பே இல்லை என்றே சொல்லியிருப்பார்கள். இங்கிலாந்து அயர்லாந்திடம் தோற்றிருந்தது. பாகிஸ்தான் ஜிம்பாப்வேயிடம் தோற்றிருந்தது. அப்படிப்பட்ட இரு அணிகள்தான் இப்போது க்ளைமாக்ஸில் இறுதிப்போட்டியில் மோதவிருக்கின்றன.

Pakistan

இரு அணிகளிடமும் எக்கச்சக்கமான குறைகள் இருந்தன. ஆனால், ஒவ்வொரு கட்டத்திலும் அந்தக் குறைகளைக் கொஞ்சம் கொஞ்சமாகக் களைந்து முன்னேறியிருக்கின்றனர். பாகிஸ்தான் அணியின் பெரும் நம்பிக்கைகளான பாபர் அசாமும் ரிஸ்வானும் சூப்பர் 12 சுற்றில் ஒன்றுமே செய்யவில்லை. அதேநேரத்தில், முக்கியமான அரையிறுதிப் போட்டியில் அதிரடி காட்டிவிட்டார்கள். இன்னொரு பக்கம் இங்கிலாந்து அணியிலும் பேட்டிங்கில் ஏகப்பட்ட பிரச்னைகள் இருக்கின்றன. அத்தனையையும் சரிசெய்யும் வகையில் பட்லரும் ஹேல்ஸூம் முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொண்டு காரியத்தைச் சாதித்து காண்பித்திருக்கிறார்கள்.

முதலில் இரு அணிகளின் பேட்டிங்கைப் பற்றியும் பார்த்துவிடுவோம். சூப்பர் 12 சுற்றில் பாபர் அசாமும் அடிக்கவில்லை. ரிஸ்வானும் அடிக்கவில்லை. அப்படியிருந்தும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

காரணம், பாகிஸ்தான் அணியிடம் அதன் ஓப்பனர்களை தாண்டியும் பெர்ஃபார்ம் செய்ய வீரர்கள் இருக்கிறார்கள். இஃப்திகார், ஷதாப் கான், முகமது ஹாரிஸ் என இக்கட்டான சூழலில் அத்தனை வீரர்களும் கைக்கோத்து பெர்ஃபார்ம் செய்திருக்கின்றனர்.

ஒருவேளை இறுதிப்போட்டியில் பாபர் அசாமும் ரிஸ்வானும் சொதப்பினாலும் கூட பாகிஸ்தான் அணியால் சவாலளிக்கும் ஒரு ஸ்கோரை எட்ட முடியும். அதற்கான சாட்சிதான் பாகிஸ்தானின் அந்த சூப்பர் 12 பெர்ஃபார்மென்ஸ். இங்கிலாந்துக்கான எச்சரிக்கை இது. ஓப்பனர்களின் விக்கெட்டை மட்டுமல்ல. பாகிஸ்தானின் மிடில் ஆர்டர் விக்கெட்டுகளின் மீதும் இங்கிலாந்து கூரிய கவனத்தைச் செலுத்த வேண்டும்.

ஜாஸ் பட்லர்

பேட்டிங்கைப் பொறுத்தவரைக்கும் இங்கிலாந்து அணி இன்னமும் அதே அட்டாக்கிங் அணுகுமுறையைத்தான் கடைபிடிக்க நினைக்கிறது. ஆனால், இந்தத் தொடரில் அவர்களால் முழுமையாக அந்த அணுகுமுறையை அப்ளை செய்ய முடிந்திருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான். அட்டாக்கிங் என்ற பெயரில் ஸ்திரத்தன்மையற்ற பேட்டிங்கையே வைத்திருக்கின்றனர். பட்லரும் ஹேல்ஸூமே பெரும் பொறுப்பை ஏற்க வேண்டியிருக்கிறது.

இந்த உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியிடமிருந்து மூன்று 50+ பார்ட்னர்ஷிப்கள் வந்திருக்கின்றன. இந்த மூன்றுமே பட்லர் மற்றும் ஹேல்ஸ் கூட்டணியிடமிருந்து வந்ததே, அதுவும் மிக முக்கியமான கடைசி 3 போட்டிகளில்!

மற்ற பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் திணறவே செய்கின்றனர். சூப்பர் 12 சுற்றிலேயே ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கைக்கு எதிரான சுலபமான சேஸிங்கில் கூட ரொம்பவே சிரமப்பட்டிருந்தார்கள். இங்கிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரை குறை கூறும்போது இன்னொரு விஷயத்தையும் நாம் ஒப்புக்கொண்டேதான் ஆக வேண்டும். இங்கிலாந்து அணி மேட்ச் வின்னர்களால் சூழப்பட்டது. பட்லர், ஹேல்ஸ், ஸ்டோக்ஸ், லிவிங்ஸ்டன், ப்ரூக்ஸ், மலான், மொயீன் அலி என எல்லாருமே கேம் சேஞ்சர்கள். யாரோ ஒருவரோ இருவரோ நின்றுவிட்டாலே ஆட்டத்தை மொத்தமாக மாற்றிவிடுவார்கள். இது பாகிஸ்தானுக்கான எச்சரிக்கை!

பௌலிங்கை பொறுத்தமட்டில் வேகப்பந்துவீச்சில் இங்கிலாந்தை விட பாகிஸ்தான் ஒருபடி அதிக அபாயமாகவே இருக்கிறது. ஷாகீன் ஷா அஃப்ரிடி, நசீம் ஷா, வாசீம், ராஃப் என நான்கு அபாயகரமான வேகப்பந்து வீச்சாளர்கள் பாகிஸ்தானிடம் இருக்கிறார்கள்.

ஷாகீன் ஷா இந்தத் தொடரின் தொடக்கத்தில் ஃபார்மில் இல்லை. ஆனால், கடைசி சில போட்டிகளாக மிரட்டி வருகிறார். இந்த 4 வேகப்பந்து வீச்சாளர்களில் 10 விக்கெட்டுகளை அதிகமாக அவர்தான் வீழ்த்தியிருக்கிறார்.
Shaheen Afridi

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சோடு ஒப்பிடும்போது இங்கிலாந்தின் பந்துவீச்சு கொஞ்சம் ஸ்ருதி குறைவானதுதான். அபாயகரமானவர்கள் எனச் சொல்லுமளவுக்கு வீரர்கள் இல்லை. முக்கிய வீரரான டாப்ளே தொடருக்கு முன்பாகவே காயம் காரணமாக வெளியேறிவிட்டார். 150+ கி.மீ வேகத்தில் புயலாக வீசும் மார்க் வுட்டுக்கும் காயம். இறுதிப்போட்டியில் ஆடுவாரா என்பதே சந்தேகம்தான். பென் ஸ்டோக்ஸ், க்ரிஸ் வோக்ஸ், சாம் கரன், ஜோர்டன் இவர்களை வைத்தே இங்கிலாந்து சமாளித்து வருகிறது.

பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களையும் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர்களையும் எக்கானமியின் அடிப்படையில் ஒப்பிடுகையில், இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்தத் தொடரில் 5 முறை எக்கானமி 10க்கு மேல் கொடுத்திருக்கின்றனர். கிரிஸ் வோக்ஸ், ஸ்டோக்ஸ், ஜோர்டன் தலா ஒரு போட்டியிலும் சாம் கரன் இரண்டு போட்டிகளிலும் 10க்கு மேல் எக்கானமி வைத்திருக்கிறார். அதேநேரத்தில், பாகிஸ்தான் சார்பில் ஹரீஸ் ராஃப் மட்டும் ஒரே ஒரு போட்டியில் எக்கானமி 14க்கு மேல் வைத்திருந்தார். வேறெந்த வேகப்பந்து வீச்சாளரின் எக்கானமியும் 10க்கு மேல் செல்லவே இல்லை. இதிலிருந்து இரு அணியின் பந்துவீச்சு தரத்தையும் புரிந்துக்கொள்ளலாம். ஆனால், இப்படியொரு பந்துவீச்சை வைத்துக் கொண்டுதான் இங்கிலாந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறது. சாம் கரனெல்லாம் திடீரென விஸ்வரூபம் எடுப்பார். அதை பாகிஸ்தான் சமாளித்தாக வேண்டும்.

வேகப்பந்து வீச்சில் கொஞ்சம் ஏற்ற இறக்கம் இருந்தாலும் இரு அணியின் ஸ்பின்னர்களும் சரி சமமாகவே இருக்கின்றனர். இங்கிலாந்தில் அடில் ரஷீத் தொடர்ச்சியாக அந்த 4 ஓவர்களை கட்டுக்கோப்பாக வீசி வருகிறார். ஒத்துழைப்புக்கு லிவிங்க்ஸ்டனும் மொயீன் அலியும் இருக்கிறார்கள். பாகிஸ்தானின் ஷதாப் கான் ஆல்ரவுண்டராக அதகளம் செய்கிறார். அவருக்கு உதவ நவாஸ் இருக்கிறார்.

வீரர்களைப் பற்றி பேசியாயிற்று. வானிலை பற்றியும் பேசியே ஆக வேண்டும். மெல்பேர்னில் மழைக்கான வாய்ப்பிருக்கவே செய்கிறது.

Babar Azam & Buttler
குறைந்தபட்சமாக இரு அணிகளும் 10 ஓவர்களையாவது எதிர்கொண்டால் மட்டுமே போட்டியில் முடிவை எட்ட முடியும். ரிசர்வ் டே இருக்கிறது. ரிசர்வ் டேவிலும் போட்டியை நடத்த முடியவில்லையெனில் இரு அணிகளும் கோப்பையைப் பகிர்ந்து கொள்வர்.

அலசலெல்லாம் சரி... இந்த இறுதிப்போட்டியை வெல்லப்போவது யார் எனக் கேட்டால் அந்தக் கேள்விக்கு இப்போது விடை சொல்வது கடினமே! அயர்லாந்திடம் அடி வாங்கிய இங்கிலாந்தும், ஜிம்பாப்வேயிடம் அடி வாங்கிய பாகிஸ்தானும் அரையிறுதியில் இந்தியாவையும் நியூசிலாந்தையும் இத்தனை ஆதிக்கமாக வெல்வார்கள் என யாராவது நினைத்தோமா? நிச்சயமாக இல்லை.

Expect the Unexpected. அதுதான் டி20 யின் அழகு. இறுதிப்போட்டிக்கும் இதேதான்!

1992 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இதே மெல்பேர்ன் மைதானத்தில் நடந்த போது பாகிஸ்தான் அணியின் கேப்டன் இம்ரான் தனது வீரர்களிடம்,

Pakistan Cricket | இம்ரான் கான்
இதே அறிவுரை இப்போது மெல்பேர்னில் ஆடப்போகும் இங்கிலாந்து பாகிஸ்தான் அணிகளுக்குமே பொருந்தும். இந்தத் தருணத்தை அதிகம் ரசித்து அனுபவித்து ஆடப்போகும் அணியே வெல்லப்போகிறது. அது யார்? பொறுத்திருந்து பார்ப்போம்!

மேலும் படிக்க T20 WC Final: `Expect the Unexpected' - மாபெரும் சபையில் வெற்றிக்கொடியைப் பறக்கவிடப்போவது யார்?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top