குஜராத்தில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளுல் ஒன்றுதான் மணிநகர். இத்தொகுதியில் வசிக்கும் தமிழர்களின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தோராயமாக 23,000 ஆக இருக்கிறது. இத்தொகுதியில் 2002, 2007, 2012 என்று மூன்று முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு.
குஜராத்தில் வாழும் தமிழர்கள் பெரும்பாலும் பாஜக-வுக்கு தங்களது ஆதரவை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். குஜராத் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்ற நிலையில் நேற்று வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்நிலையில், தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளில், பாஜக வேட்பாளர்கள் வெற்றியை பெற்றுள்ளனர்.

குஜராத்தில், தமிழர்கள் அதிகம் வசிக்கும் சட்டமன்ற தொகுதிகளுல் ஒன்றுதான் மணிநகர். இத்தொகுதி வட குஜராத்தில், அகமதாபாத் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது. மணிநகர் தொகுதியின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 2,77,179. இத்தொகுதியில் வசிக்கும் தமிழர்களின் வாக்கு எண்ணிக்கை மட்டும் தோராயமாக 23,000 ஆக இருக்கிறது. மணிநகர் தொகுதியில் 1990 முதலே பாஜக தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் இத்தொகுதியில் 2002, 2007, 2012 என்று மூன்று முறை பிரதமர் மோடி போட்டியிட்டு வெற்றி பெற்றிருப்பது கூடுதல் சிறப்பு. குஜராத் முதல்வராக இருந்த மோடி, பிரதமராக தேர்வு செய்யப்பட்ட பின் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார்.
அதன் பிறகு நடந்த இடைத்தேர்தலிலும் பாஜக வேட்பாளரான சுரேஷ் பட்டேல் வெற்றி பெற்றார். அதன் பிறகு நடந்த 2017 சட்டமன்றத் தேர்தலிலும் மணிநகர் தொகுதியில் பாஜகவின் வேட்பாளரான சுரேஷ் பட்டேல் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. 2022 குஜராத் சட்டமன்றத் தேர்தலில் மணிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளராக களம் இறங்குகியுள்ளார் அமுல் பாய் பட். களத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி.எம் ராஜ்புத் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த விபுல் படேல் இருந்தாலும் காலை முதலே பாஜக வேட்பாளர் அமுல் பாய் பட் தொடர்ந்து முன்னிலை வகித்தார். இந்நிலையில் அமுல்பட் 83,520 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றியை பெற்றார். மணிநகர் தொகுதியை பாஜகவின் கோட்டை என்று சொல்லுவதில் சந்தேகம் ஏதுமில்லை.

அதேபோன்று, தமிழர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளுல் ஒன்றுதான் அமராவாடி. இத்தொகுதியில் 17,000கும் மேற்பட்ட தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். 2012 மற்றும் 2017ல் நடைபெற்ற குஜராத் சட்டமன்றத் தேர்தல்களிலும் அமராவாடி தொகுதியில் பாஜக வேட்பாளரே வெற்றி பெற்றார். கடந்த இரண்டு தேர்தல்களில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற H.S படேல், 2022 தேர்தலிலும் அமராவாடி தொகுதியில் போட்டியிட்டு 43,272 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். பாஜக ஆதிக்கம் செலுத்தி வரும் தொகுதிகளில் அமராவாடி தொகுதியும் ஒன்று, என்றே சொல்லலாம். குஜராத்தில் பாஜக தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில், தன் பலத்தை மீண்டும் நிரூபித்து காட்டி இருக்கிறது.
மேலும் படிக்க குஜராத் தேர்தல்: பாஜக-வும் தமிழர்கள் அதிகம் வாழும் தொகுதிகளும்..! - ஒரு பார்வை