ராஜபாளையம்: மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் பலி - இரண்டாவது மகள் படுகாயம்

0

ராஜபாளையம் அருகே சேத்தூர் காமராஜ் நகரை சேர்ந்தவர் தங்கமுனியாண்டி. இவரின் மனைவி பாண்டிசெல்வி (வயது 28). இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். பாண்டிச்செல்வி தனது மூத்த மகளை பள்ளியில் விட்டுவிட்டு இளைய மகளுடன் வீடு திரும்பும்போது, தென்காசியில் இருந்து மதுரை நோக்கி ஐயப்ப பக்தர்கள் வந்த கார், பாண்டிச்செல்வி மீது மோதியது. இந்த விபத்தில் பாண்டிச்செல்வி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவருடன் வந்த இளைய மகளுக்கு காயம் ஏற்பட்டது.

மறியல்

விபத்தில் பாண்டிச்செல்வி இறந்த தகவலறிந்த அவரின் உறவினர்கள், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதுகுறித்து தகவலறிந்த சேத்தூர் காவல்நிலைய போலீஸார் மற்றும் ராஜபாளையம் தாசில்தார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பேசியவர்கள், `இந்தச்சாலையில் வாகனங்கள் அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டிச் செல்கின்றனர். இதுபற்றி பலமுறை புகார் கொடுத்துவிட்டோம். ஆனால் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உடனடியாக, இப்பகுதியில் வேகத்தடை அமைக்காவிட்டால் நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம்’ எனக்கூறி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, உடனடி தீர்வாக வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்து, அப்பகுதியில் வேகத்தடை அமைக்க நடவடிக்கை எடுத்தனர். அதன்பிறகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். மேலும், விபத்து தொடர்பாக காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், விபத்தை ஏற்படுத்திய கார் ஓட்டுநரான வேலூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் (32) மீது போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் படிக்க ராஜபாளையம்: மகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாய் விபத்தில் பலி - இரண்டாவது மகள் படுகாயம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top