கால்பந்து உலகக் கோப்பையில் அதிக கோல்களை அடித்த வீரரைக் கெளரவிக்கும் விதமாக வழங்கப்படுவது 'கோல்டன் பூட்' விருது.
இந்த 2022ம் ஆண்டு 22வது ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் கோல்டன் பூட் விருதை அர்ஜெண்டினாவின் லியோனல் மெஸ்ஸி, பிரான்ஸின் எம்பாப்பே இருவரில் யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பிருந்தது. அதுமட்டுமின்றி மெஸ்சியின் கடைசி உலகக் கோப்பை இது. எனவே இதுவரை 'கோல்டன் பூட்' விருதைப் பெற்றிறாத மெஸ்சி, இந்த உலகக் கோப்பையில் இந்த விருதைப் பெற்றிட வேண்டும் என்பதே அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது.

இந்நிலையில் நேற்றைய இறுதி ஆட்டத்தில் திக்திக் நிமிடங்களில் ரசிகர்களை ஆழ்த்தி 4-2 என அர்ஜெண்டினா வென்று உலகக்கோப்பையை தட்டித்தூக்கியது.
இதில் மெஸ்சி 'கோல்டன் பூட்' விருதைப் பெறுவார் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இந்த இறுதிப் போட்டியில் இரண்டு கோல்களை அடித்து, இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 7 கோல்களைப் பெற்றார் மெஸ்சி. ஆட்டத்தின் போக்கையே மாற்றி அதிரடியாக விளையாடிய பிரான்ஸ் வீரர் எம்பாப்பே, 80வது நிமிடத்தில் ஒரு கோல் மற்றும் அடுத்த 97 செகண்டில் அடுத்த கோல் என அடுத்தடுத்து இரண்டு கோல்கள் அடித்தார். பின்னர் 118 வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் அடித்து இந்த இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். இதனால், இந்த உலகக் கோப்பையில் மொத்தம் 8 கோல்களை அடித்து, அதிக கோல்களை அடித்தவர் என்ற பெருமையுடன் 'கோல்டன் பூட்' விருதைத் தட்டித்தூக்கி ரசிகர்களின் உள்ளங்களை வென்றார் எம்பாப்பே.
மேலும் படிக்க FIFA WorldCup 2022; `ஹாட்ரிக் கோல்' 'கோல்டன் பூட்'; உள்ளங்களை வென்ற எம்பாப்பே!