"2022-ல் 15 மலக்குழி மரணங்கள்; தூய்மைப்‌ பணிகளில்‌ 95% பேர்‌ தலித்துகள்"- அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை

0

சென்னை ஆஷா நிவாஸ் மையத்தில் நேற்றைய தினம், இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையத்தின் சார்பில், ``தமிழகத்தில் மலக்குழி மரணங்கள்" என்ற கருப்பொருளைக் கொண்டு, மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அறிக்கை வெளியிடப்பட்டது.

அந்த ஆய்வறிக்கை தொடர்பாக வெளியிடப்பட்டிருக்கும் பத்திரிகைச் செய்தியில், ``நாடு முழுவதும்‌ தூய்மைப்‌ பணிகள் என்ற பெயரில்‌ குப்பைகள்‌ அள்ளுவது, மலம்‌ அள்ளுவது, சாக்கடை அள்ளுவது, கழிவு நீர்‌ கால்வாயில்‌ அடைப்பு நீக்குவது, கழிவு நீர்‌ தொட்டி கழிவுகளை அகற்றுவது, உள்ளே இறங்கி கழிவுகளை அள்ளுவது உள்ளிட்டப் பணிகளில்‌ ஈடுபடுத்தப்படும்‌ பலர்‌ மரணமடைவதுதொடர் கதையாகி வருகிறது. இந்தப் பணிகளில்‌ பெரும்பாலும்‌ தலித்‌ அருந்ததியர்‌ சமூகத்தைச்‌ சேர்ந்தவர்கள்‌ ஈடுபடுத்தப்படுகின்றனர்‌. அதிலும்‌ 95 சதவிகிதம் தலித்‌ பெண்கள்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில்‌ 2016-2020 ஆண்டில்‌ கழிவு நீர்‌ / மலக்கழிவு அகற்றும்‌ பணிகளில்‌ ஈடுபட்ட 55 பேர்‌ இறந்திருக்கின்றனர்.

தூய்மைப் பணியாளர் - மலக்குழி மரணம்

அதிலும்‌ கடந்த 2022-ம்‌ ஆண்டில்‌ 8 மாதங்களில் 15-க்கும்‌ மேற்பட்டோர்‌ இறந்திருக்கின்றனர். இதுபோன்ற மரணங்களைத்‌ தடுக்கவும்‌, நாகரிக சமூகத்தில்‌ மனித மலத்தை மனிதர்கள்‌ கையால்‌ அள்ளுவதை தடைசெய்யவும்‌ `மனிதக்‌ கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்விற்கான சட்டம்‌ 2013' கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தவேண்டிய ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநாகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிர்வாகங்களும்‌, பொறுப்புடைய காவல்‌ மற்றும்‌ வருவாய்த்துறை அதிகாரிகளும்‌ இந்தச் சட்டத்தினை நடைமுறைபடுத்தாமல்‌ அலட்சியப்படுத்தி, புறக்கணிப்பதன்‌ காரணமாக மலக்குழி மரணங்கள்‌ தொடர்கின்றன.

கடந்த ஓராண்டில்‌ (ஆகஸ்ட்‌ 2021 முதல்‌ நவம்பர்‌ 2022 வரை) தமிழகத்தில்‌ கழிவு நீர்‌ தொட்டியில்‌ விஷவாயு தாக்கி இறந்த நிகழ்வுகள்‌, பள்ளிகளில்‌ அருந்ததியர்‌ குழந்தைகளைக் கழிவறை தூய்மைப்‌ பணியில்‌ ஈடுபடுத்தியது மற்றும்‌ தூய்மைப்‌ பணியாளர்கள்‌ மீதான வன்கொடுமைகள்‌ உள்ளிட்ட 21 சம்பவங்களை நேரடியாகக் கள ஆய்வு செய்த இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்‌, இந்தச் சம்பவங்களில்‌ இந்தச் சட்டம்‌ எந்த அளவுக்கு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதையும்‌ ஆய்வு செய்தது" எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தூய்மைப்‌ பணியாளர்கள்

ஆய்வின் அறிக்கை மற்றும் சட்டக்‌ கையேடு வெளியிடும் நிகழ்ச்சியில், ``சாதிய அடிப்படையில்‌, குலத்தொழில்‌ போன்று தலித்‌ மக்கள்‌ ஈடுபடுத்தப்படும்‌ இந்தத் தொழிலை ஒழித்து, முற்றிலும்‌ இயந்திரமயமாக்கவேண்டும்‌, காலங்காலமாக இதில்‌ ஈடுபடுத்தப்பட்ட வரும்‌ அருந்ததியர்‌ சமூக மக்களை இதிலிருந்து முற்றிலும்‌ விடுவிக்கவேண்டும்‌" என்பது ஆய்வின்‌ பரிந்துரையாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆய்வறிக்கையின் முடிவுகள், பரிந்துரைகளை பின்வருவனவாக பார்ப்போம்.

ஆய்வின்‌ முடிவுகள்‌:

1. இந்த நவீன உலகில்‌, இந்தியா போன்ற வளரும்‌ நாடுகளில்‌, சமூக அமைப்பில்‌ சாதி ஆழமாக வேரூன்றியிருப்பதால்‌, தூய்மை மற்றும்‌ கழிவுகள்‌ அகற்றுதல்‌ போன்றவை தலித்‌ மக்கள்‌ மீது திணிக்கப்படுகிறது.

2. இந்தச் சட்டத்தை நடைமுறைபடுத்தும்‌ பொறுப்பாளிகான உள்ளாட்சி அரசுகள்‌, காவல்‌ மற்றும்‌ வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம்‌ உள்ளிட்ட அனைத்தும் சட்டத்தை நடைமுறைபடுத்தாமல்‌ மிகவும்‌ அலட்சியப்படுத்தி, புறக்கணித்திருக்கின்றன என்பதை ஆய்வில்‌ கண்டறியமுடிந்தது.

3. தூய்மைப்‌ பணிகளில்‌ 95 சதவிகிதம் பேர்‌ `தலித்துகள்‌', அவர்களில்‌ 99 சதவிகிதம் பேர்‌ தலித்‌ பெண்கள்‌. அவர்களில்‌ பெரும்பாலோனோர்‌ ஒப்பந்த அடிப்படையில்‌ தற்காலிக ஊழியர்களாக நியமிக்கப்பட்டிருக்கின்றனர். பணி நிரந்தரம்‌, பணிப் பாதுகாப்பு, நல உதவிகள்‌ போன்ற எதுவுமின்றி, எந்த நேரத்திலும்‌ வேலை பறிக்கப்படும்‌ என்ற அச்சுறுத்தலுடன்‌ தினசரி ஊதியம்‌ மற்றும்‌ ஒப்பந்த முறைகளின்‌ கீழ்‌ அவர்கள் சுரண்டப்படுகின்றனர்‌.

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அறிக்கை

4. அரசியல்‌ கட்சிகள்‌ பொதுக்கூட்டங்கள்‌, மாநாடு மற்றும்‌ சந்தை, திருவிழா, பொது நிகழ்ச்சிகள்‌, கூட்டங்கள்‌, கண்காட்சிகள்‌, பெரும்பாலான பேருந்து நிலையங்கள்‌ என பொதுமக்கள்‌ கூடுமிடங்களில்‌ திறந்த வெளியில்‌ மலம்‌ கழித்தல்‌ மட்டுமே நடக்கிறது. இதுபோன்ற திறந்த வெளி கழிப்பிடங்களில்‌ உள்ள மனிதக்‌ கழிவுகளை, தூய்மைப்‌ பணியாளர்கள்‌ வெறுங்கைகளால்‌ அகற்றுகின்றார்கள்‌.

5. கழிவுநீர்‌ தொட்டி மரணங்கள்‌ சமீப நாள்களில்‌ தனியார்‌ அடுக்குமாடிக் குடியிருப்புகள்‌ மற்றும்‌ தனியார்‌ நிறுவனங்களில் பெருமளவில்‌ நிகழ்ந்திருக்கின்றன. சட்டத்தில்‌ கூறப்பட்டிருக்கும்படி 58 வகையான பாதுகாப்பு கருவி மற்றும்‌ உபகரணங்கள்‌ எதுவும்‌ இங்கு பின்பற்றப்படவில்லை. எவ்வித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும்‌ மேற்கொள்ளப்படவில்லை.

6. Safai Karamchari Andolan எனும்‌ தேசிய அமைப்பு செய்த ஆய்வு அறிக்கையின்படி, 2016 முதல்‌ 2020 வரை தமிழ்நாட்டில்‌ 55 பேர்‌ கழிவுநீர்‌ தொட்டிகளைச் சுத்தம்‌ செய்யும்‌போது இறந்திருக்கின்றனர். குறிப்பாகச் சென்னை மற்றும்‌ அதைச் சுற்றியிருக்கும் மாவட்டங்களில்‌ இறப்பு விகிதம்‌ அதிகம்‌.

தூய்மைப்‌ பணியாளர்

7. காவல்துறை அதிகாரிகளின்‌ அலட்சியம்‌, முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவுசெய்வதில்‌ தாமதம்‌, செய்யாமல்‌ தவிர்ப்பது, உரிய பிரிவுகள்‌ சேர்க்கப்படாதது, முறையான விசாரணை நடத்தாமலிருப்பது, கைதுசெய்வதிலும்‌ தாமதம்‌ அல்லது தவிர்ப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்குப் பாதுகாப்பு உள்ளிட்ட சட்ட நடவடிக்கைகளை முறையாகச்‌ செய்வதிலும்‌ காவல்துறையின்‌ அலட்சியம்‌ உள்ளிட்ட காரணங்களால் இந்தச் சட்டம்‌ அமல்படுத்தப்படாமல்‌ தேங்கி நிற்கின்றது.

8. குறிப்பாக எமது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம்‌ நேரடியாகக் கள ஆய்வு செய்த 21 சம்பவங்களில்‌ 6 சம்பவங்களில்‌ மட்டுமே இந்தச் சட்டத்தின்‌ கீழ்‌ முதல்‌ தகவல்‌ அறிக்கை பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. 5 வழக்குகளில்‌ வன்கொடுமை தடுப்புச்‌ சட்டமும்‌, ஒரு வழக்கில்‌ ஜே.ஜே.சட்டமும்‌ பதிவுசெய்யப்பட்டிருப்பதோடு 9 வழக்குகளில் 5 பேர்‌ கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். இந்த 9 வழக்குகளில்‌ மட்டுமே நிவாரணம்‌ வழங்கப்பட்டிருக்கிறது. மேற்படி 21 சம்பவங்களில்‌ 4 சம்பவங்கள்‌ அரசுப்‌ பள்ளிகளில்‌ அருந்ததியர்‌ மாணவர்களைக் கழிவறை உள்ளிட்டவற்றை தூய்மை செய்யும்‌ பணிகளில் ஈடுபடுத்தப்பட்டது தொடர்பானவையாகும்‌.

9. இதுவரை ஒரு வழக்கில்‌கூட குற்றப்பத்திரிகை தாக்கல்‌ செய்யப்படவில்லை. இந்த நிலையில்‌, 21-ல்‌ 7 வழக்குகள்‌ எவ்வித நடவடிக்கையும்‌ எடுக்கப்படாமல்‌ சமாதானம்‌ ஆகியிருக்கின்றன.

பரிந்துரைகள்‌:

1. மனித மலத்தை மனிதர்‌ அள்ளுவது முற்றிலும்‌ தடைசெய்யப்பட்டிருக்கும் நிலையில்‌, சட்டத்தை முழுமையாக நடைமுறைபடுத்தி, இந்தத் தொழிலை முற்றிலும்‌ ஒழிக்கவேண்டும்‌. முற்றிலும்‌ இயந்திரமயமாக்கி தலித்‌ அருந்ததியர்‌ குடும்பங்கள்‌ இந்தத் தொழில்‌ முறையிலிருந்து விடுவிக்கப்படவேண்டும்‌.

2. மனிதக் கழிவுகளை அகற்ற பணியமர்த்தல்‌ தடை மற்றும்‌ மறுவாழ்வு சட்டம்‌ 20/2 மற்றும்‌ வன்கொடுமை தடுப்புச் சட்டம்‌ 206 ஆகிய இரண்டும்‌ சரியாக அமல்படுத்தப்படவேண்டும்‌. இந்தச் சட்டம்‌ நடைமுறைக்கு வந்த 9 மாதங்களில்‌, அதாவது 06.09.2014-க்குள்‌ இந்தத் தொழிலை முற்றிலும்‌ தடைசெய்து ஒழிப்பது அதிகாரிகள்‌ பொறுப்பு எனப் பிரிவு 17-ல்‌ கூறப்பட்டிருக்கிறது.

இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் அறிக்கை

3. கழிவு அகற்றும்‌ பணியில்‌ ஈடுபடும்போது மொத்தம்‌ 59 வகையான பாதுகாப்பு உபகரணங்கள்‌ பயன்படுத்தப்பட வேண்டும்‌ என்றும்‌, இதனை உள்ளாட்சி அல்லது முகவர்‌ செய்துகொடுக்கவேண்டும்‌ என்றும்‌ இந்தச் சட்டத்தின்‌ விதிகள் 4, 5-ல்‌ கூறப்பட்டிருக்கிறது. மேலும்‌ விதிகள் 6, 7-ல்‌ பாதுகாப்பு விதிகள்‌ கூறப்பட்டிருக்கின்றன. இவை எங்குமே பின்பற்றப்படுவதில்லை. இனியேனும்‌ அரசு முழுமையாக இதில்‌ கவனம்‌ செலுத்தவேண்டும்‌.

4. தமிழ்நாட்டில்‌ தூய்மைப்‌ பணி புரிவோரின்‌ சமூக, கல்வி மற்றும்‌ பொருளாதார மேம்பாட்டிற்கென, 2007-ம்‌ ஆண்டு தமிழ்நாடு தூய்மைப்‌ பணியாளர்கள்‌ நலவாரியம்‌ உருவாக்கப்பட்டது. ஆனால், உருவாக்கப்பட்ட நோக்கத்துக்கு ஏற்றாற்போல்‌ இந்த நலவாரியம்‌ செயல்பாடுகள்‌ அமையவில்லை. எனவே, நலவாரியம்‌ முழு வேகத்துடன்‌ செயல்படுவதற்கேற்ற வகையில்‌ திருத்தியமைக்கப்பட வேண்டும்‌. காலமுறை உருவாக்கி, தூய்மைப்‌ பணியாளர்களின்‌ நலனில்‌ அக்கறை செலுத்தி, மேம்பாட்டினை உருவாக்கவேண்டும்‌. மேலும்‌, இதன்‌ நலத்திட்டம்‌ உள்ளிட்ட செயலாக்கத்தினை தாட்கோ எனும்‌ துறையிடமிருந்து பிரித்து, மாவட்ட ஆட்சியர்‌ தலைமையிலான மாவட்ட ஆதி திராவிடர்‌ நலத்துறையிடம்‌ ஒப்படைக்கவேண்டும்‌.

5. தமிழ்நாடு முழுவதும்‌ அனைத்து வகையிலான தூய்மை மற்றும்‌ கழிவுகள்‌ அகற்றும்‌ பணிகளை முற்றிலும்‌ இயந்திரமயமாக்கி மனித மாண்பு காக்கப்படவேண்டும்‌.

6. ஒப்பந்த முறையில்‌ பணி நியமனம்‌ செய்யப்படுவது முற்றிலும்‌ நிறுத்தப்படவேண்டும்‌. தற்போதிருக்கும் ஒப்பந்த மற்றும்‌ தற்காலிக ஊழியர்கள்‌ அனைவரும்‌ பணி நிரந்தரம்‌ செய்யப்படவேண்டும்‌.

7. மறுவாழ்வு மற்றும்‌ மேம்பாட்டுத்‌ திட்டங்கள்‌ தற்போதைய காலத்திற்கேற்றவாறு வடிவமைக்கப்படவேண்டும்‌. அதற்கேற்ற வகையில்‌ நிதி ஒதுக்கீடு தற்போதைய காலச்‌ சூழலுக்கு ஏற்ற வகையில்‌ அதிகரிக்கவேண்டும்‌.

8. தொடர்ந்து பாதுகாப்பற்ற முறையில்‌ தாய்மைப்‌ பணியில்‌ ஈடுபடுவதன்‌ காரணமாக பல்வேறு வகையிலான ஒவ்வாமைக்கு ஆளாகி, சுவாசக்‌ கோளாறு உள்ளிட்ட பல்வேறு வகையிலான உடல்‌நலப்‌ பிரச்னைகளுக்கு ஆளாகின்றனர்‌. முறையான பாதுகாப்பு, மருத்துவ வசதி, மருத்து சோதனை, மருத்துவ வசதி, மருத்துவக்‌ காப்பீடு, நோய்த்‌ தடுப்பு சிகிச்சை போன்றவற்றை அரசு சிறப்புத்‌ திட்டங்கள்‌ மூலம்‌ செயல்படுத்திட வேண்டும்‌.

தூய்மைப்‌ பணி

9. பிற சமூகத்துக்கு இணையாக/சமமாக தலித்‌ பழங்குடியின மக்கள்‌ வளரவேண்டும்‌ என்பதற்காகவும்‌, அதற்கான சமூக பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டங்களுக்காகவும்‌ சிறப்பு உட்கூறு திட்டம்‌ உருவாக்கப்பட்டு, அதற்காக நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால்‌, அந்த நிதி தலித்‌ பழங்குடியினருக்குச் சென்றடைவதில்லை என பல்வேறு கருத்துகள்‌ வெளிப்படுத்தப்படுகின்றன. எனவே, SCP/TSP திட்டத்தின்‌ கீழ்‌ தூய்மைப்‌ பணியாளர்களுக்கான சிறப்புத்‌ திட்டங்கள்‌ உருவாக்கப்படவேண்டும்‌. நிதி முழுமையாக அவர்களின்‌ நலனுக்கு, வழங்கப்படவேண்டும்‌.

10. சட்டத்தைச் சரியாக நடைமுறைப்படுத்தாத பொறுப்பதிகாரிகள்‌ மீது, அரசு தீவிர நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்‌.


மேலும் படிக்க "2022-ல் 15 மலக்குழி மரணங்கள்; தூய்மைப்‌ பணிகளில்‌ 95% பேர்‌ தலித்துகள்"- அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top