திமுக முதல் மம்தா வரை - அமர்த்தியா சென்னின் 2024 மக்களவைத் தேர்தல் கணிப்புகள் என்னென்ன?!

0

நோபல் பரிசு பெற்ற இந்தியப் பொருளாதார மேதை அமர்த்தியா சென், `இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி மம்தா பானர்ஜிக்கு இருக்கிறது' என்று கூறியிருப்பது தேசிய அரசியலில் பேசுபொருளாகியிருக்கிறது. `2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க-வின் பங்கு மிக முக்கியமானது' என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பி.டி.ஐ செய்தி நிறுவனத்துக்கு அமர்த்தியா சென் அளித்த பேட்டியில் பல்வேறு விஷயங்கள் குறித்துப் பேசியிருந்தார். அதில் குறிப்பாக, ``இந்திய நாட்டின் தன்மையை பா.ஜ.க சுருக்கிவிட்டது. இந்தியா என்றால் `இந்து இந்தியா', `இந்தி பேசும் இந்தியா' என்னும் அளவுக்கு மாற்றிக்கொண்டிருக்கிறது பா.ஜ.க. எனவே, அவர்களுக்கு மாற்று இல்லை என்றால் அது இன்னும் மோசமானதாக மாறக்கூடும். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மாநிலக் கட்சிகளின் பங்கு மிக முக்கியமானது. குறிப்பாக தி.மு.க மிக முக்கியமான கட்சியாக இருக்கும். திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும். சமாஜ்வாடி கட்சியும் முக்கியமானது. ஆனால், அது எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் எனத் தெரியவில்லை.

மம்தா!

பா.ஜ.க எவ்வளவு வலிமையான கட்சியாக உள்ளதோ, அதே அளவுக்கு அந்த கட்சி பின்னடைவைச் சந்திப்பதற்கான காரணங்களும் இருக்கின்றன. எதிர்க்கட்சிகள், அந்தக் காரணங்கள் எடுத்து விவாதிக்க வேண்டும். மம்தா பானர்ஜிக்கு இந்தியாவின் அடுத்த பிரதமராகும் தகுதி இருக்கிறது. அதே நேரம், அவர் பா.ஜ.க-வுக்கு எதிராக நிற்கும் மக்கள் சக்தியை தன்னால் ஒன்றிணைக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டவில்லை. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெல்லும் வாய்ப்புகள் மிகக் குறைவு. அந்தக் கட்சி வலுவிழந்து காணப்படுகிறது. இருந்தும், காங்கிரஸ் கட்சியால் மட்டுமே அனைவருக்குமான இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை அளிக்க முடியும்'' என்று கூறியிருக்கிறார்.

அமர்த்தியா சென்னின் இந்தக் கருத்து குறித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுக்கேந்து சேகர் ராய், ``மம்தா பானர்ஜி, தனக்குப் பிரதமராகும் தகுதி இருக்கிறது என்பதைப் பல முறை நிரூபித்திருக்கிறார். அந்தத் தகுதியைக் குறிப்பிட்டுத்தான் சென் பாராட்டிப் பேசியிருக்கிறார்'' என்றிருக்கிறார்.

சென்னின் கருத்துக்கு எதிர்வினை ஆற்றியிருக்கும் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், ``நாட்டிலுள்ள அனைவருக்கும் பேசுவதற்கு உரிமை உண்டு. ஆனால், நாட்டில் பிரதமர் பதவிக்கான காலியிடம் இல்லை. ஏற்கெனவே இரண்டு முறை பிரதமர் பதவியை மோடிக்கு அளித்த மக்கள், 2024-ல் மூன்றாவது முறையாக மீண்டும் அவருக்கே அளிப்பார்கள்!'' என்று கூறியிருக்கிறார்.

பா.ஜ.க-வின் தேசியத் துணைத் தலைவர் திலீப் கோஷ், ``மேற்குவங்கத்தைத் தாண்டி வேறெந்த மாநிலத்திலும் மம்தாவால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது. காங்கிரஸ் கட்சி உள்பட எந்தக் கட்சியும் அவருக்குத் துணையாக இல்லை. அவர் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் என்ன நடக்கிறது என்பதே சென்னுக்குத் தெரியவில்லை. மோடியை அவமதிக்கும் தனது பழைய பழக்கத்தை மீண்டும் தொடங்கியிருக்கிறார் சென்'' என்று சொல்லியிருக்கிறார்.

ஸ்டாலின், மம்தா

சி.பி.எம் கட்சியின் மேற்குவங்க மாநிலச் செயலாளர் முகமது சலீம், ``நமது கலாசாரம், பாரம்பர்யத்தை சீரழிக்கக் கூட்டு முயற்சி நடக்கிறது. இந்தச் சூழலில், பா.ஜ.க-வை எதிர்த்து எதிர்க்கட்சிகள் அனைவரும் ஓரணியில் திரள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால், அந்த ஒன்றிணைப்புக்கு எதற்காக சென் மம்தாவின் பெயரைக் குறிப்பிடுகிறார் எனத் தெரியவில்லை'' என்றிருக்கிறார்.

காங்கிரஸ் எம்.பி பிரதிப் பட்டாச்சார்யா, ``காங்கிரஸ் அல்லாத கூட்டணியால் நிச்சயம் பா.ஜ.க-வை வீழ்த்த முடியாது. நீண்டகாலமாகப் பிரதமர் கனவிலிருக்கிறார் மம்தா. ஆனால், அதைக் காங்கிரஸின் உதவியில்லாமல் அடையலாம் என்று நினைக்கிறார். நிச்சயம் அது நடக்காது'' என்று தெரிவித்திருக்கிறார்.

அமர்த்தியா சென்னின் கருத்து பல்வேறு மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மேற்குவங்கத்தில் இந்தக் கருத்து அனைத்துக் கட்சிகளுக்குமிடையே காரசார விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. சென் சொன்னதுபோல மம்தா பிரதமர் வேட்பாளராவாரா... 2024 நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க முக்கியப் பங்கு வகிக்குமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்!


மேலும் படிக்க திமுக முதல் மம்தா வரை - அமர்த்தியா சென்னின் 2024 மக்களவைத் தேர்தல் கணிப்புகள் என்னென்ன?!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top