74-வது குடியரசு நாள்- ஒரு பார்வை | My Vikatan

0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடன் தளத்தின் கருத்துக்கள் அல்ல. - ஆசிரியர்

ராஜாதி ராஜ, ராஜ மார்த்தாண்ட, ராஜ கம்பீர, ராஜ குல திலக, ராஜ வைராக்ய, மா மன்னர், பெருங்கோ…..

இது போன்ற பட்டங்களை சுதந்திர இந்தியாவில் இன்று நாம் கேட்க முடிவதில்லையல்லவா.

காரணம் என்ன?

உலகில் ஏறத்தாழ அனைத்து நாடுகளும் ஏதோ ஓர் காலகட்டத்தில் மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்ட நிலங்களே ஆகும்.

மன்னர்கள் எனப்படும் தனி நபர்களின் விருப்பு வெறுப்புகள், கோப தாபங்கள், இவை அனைத்தும் ஒரு நாட்டை ஆள்வதற்கு இடையூராக அமைந்துவிடக்கூடாது என்பதற்காக ‘மக்களே மக்களை ஆண்டு கொள்வது என்பது போன்ற ஒரு அமைப்பு கிரேக்க நாட்டிலும், அதைச் சுற்றி இருக்கக் கூடிய பல நாடுகளிலும் அமலுக்கு வந்தது.

இதைத்தான் ‘Democracy , A system in which the government of a country is elected by the people. என்று கூறுகிறோம்.

எழுதி வைக்கப்பட்ட  வரலாற்றுச் சின்னங்களின் ஆதார அடிப்படையில் நம் இந்தியா ஏறத்தாழ 3000 வருடங்களாகத் தொடர்ந்துப் பல மன்னர்களாலும், பேரரசர்களாலும் ஆளப்பட்ட ஒரு நாடாகவே இருந்ததை நாம் நன்கு அறிவோம்.

1757 ல் பிளாசிப் போர் (Battle of Plassey)

பிளாசிப் போர் என்பது East India Company என்றுச் சொல்லக்கூடிய கிழக்கிந்திய கம்பெனிக்கும், வங்காள மன்னர் நிஸாம்க்கும் இடையே நடைபெற்றது. இதில் கிடைத்த வெற்றிதான், இந்திய மண்ணில் ஆங்கிலேயர்கள் வெற்றி வாகை சூடிய முதல் போர் என்பது குறிப்பிடத்தக்கது..

கிழக்கிந்திய கம்பெனியின் லண்டன் தலைமை அலுவலகம்

The Battle of Plassey was the first turning point of getting east india compeny’s influence in India.

1757 முதல் 1857 வரை சரியாக 100 வருடங்கள், ஒரு சாதாரண வணிக நிறுவனமாகத் தொடங்கி, உலகிலேயே அரசாங்கத்துக்கு இணையான அந்தஸ்தைப் பெற்றது.

இதை எதிர்த்து, 1857 ல் வட இந்தியா முழுவதும் ஒரு மிகப் பெரிய சுதந்திரப் போர் The First War Of Independence நடைபெற்றது.

ஆனால் அதற்கு முன்னரே தமிழ் நாட்டில் ஆங்கிலேயர்களை எதிர்த்துச் செய்தப் போராட்டங்களில் முதன்மையனது 1790 களில் வீர மங்கை வேலு நாச்சியார் அவர்கள், கிழக்கிந்தியக் கம்பெனிகளை எதிர்த்து ஆயுதமேந்திப் போராடி, வெற்றி வாகை சூடி தன் ஆட்சியை 10 ஆண்டு காலம் தக்கவைத்துக் கொண்டு இருக்கிறார் என்பதே ஆகும்.

1857 ல் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஊடுறுவலை முற்றிலும் கலைத்து பூண்டோடு அழிக்கப்பட்டபிறகு 1858 முதல் 1947 வரை இந்தியாவை நேரடியாக பிரிட்டிஷ் மன்னரின் ஆட்சிக்குக் கீழ் கொண்டு வந்தார்கள்.

அப்பொழுதும் இந்தியா, மன்னர் ஆட்சியிலேயேதான் இருந்தது.

1880 களிலே சுதந்திரப் போராட்டம் என்பது கொஞ்சம் கொஞ்சமாகச் சூடுபிடிக்கத் தொடங்குகிறது.

1885ல் காங்கிரஸ் கட்சி நிறுவப்படுகிறது.

மகாத்மா காந்தி அவர்கள் தென்னாப்பிரிக்காவில் நிற வெறியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்தி, சில மாற்றங்களை ஏற்படுத்தினார்.

பிறகு இந்தியாவிற்கு வந்து தன்னை முழுமையாக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.

1909ல் முதல் அரசியல் சட்டம் First Government of India Act கொண்டு வரப்படுகிறது.

ஆங்கிலேயர்கள்|Representational image

1919 லே இரண்டாவது இந்திய அரசியல் சட்டம் என்று சொல்லக் கூடிய (Second Government of India Act) கொண்டு வரப்படுகிறது.  

அதைத் தொடர்ந்து 1935 ல் மறுபடியும் ஒரு இந்திய அரசியல் சட்டம் Government of India Act கொண்டுவரப்படுகிறது.  இந்த 1935 சட்டத்தின் மூலம் இதுவரை இந்தியர்களுக்கு வழங்கப்படாத சலுகைகளும், உரிமைகளும் அந்தஸ்துகளும் வழங்கப்பட்டன.

அதோடு மட்டுமல்லாமல் இந்தியர்களுக்கு மக்களாட்சி எனப்படும் Democracy க்காக தத்துவங்களையும், ஆட்சி அமைக்கத் தேவையான சட்ட விதி முறைகளையும் கோடிட்டுக் காட்டியிருந்தது.

இரண்டாம் உலகப் போரின் மூலமாக வந்த கடுமையான நிதி நெருக்கடி, இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வலுவான போராட்டங்கள், மற்றும் பல அரசியல், நிர்வாகக் காரணங்களால் ஆங்கிலேய அரசு 1947ல் இந்தியாவிற்கு சுதந்திரம் அளித்துவிட்டு, தங்கள் நாட்டிற்குத் திரும்பி விட்டனர் ஆங்கிலேயர்கள்.

ஜனவரி 26, 2023 . இந்தியாவின் 74வது குடியரசு நாளை நாம் சீரும் சிறப்புமாகக் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.

ஆப்ரஹாம் லிங்கன் அவர்களின் கூற்றுப்படி குடியரசு என்பது மக்களால் மக்களுக்காக மக்களே தேர்ந்தெடுப்பது. Democracy is an Government for the people by the people of the people.

இந்திய அரசமைப்புச் சட்டம் அமலுக்கு வந்த நாள் குடியரசு நாள் ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது இந்தியாவின் ஆட்சி நிர்வாகத்திற்கான விதிகளைக் கொண்டுள்ள ஆவணம் ஆகும்.

அண்ணல் அம்பேத்கார் சொன்ன வாசகம்

“Constitution is not a mere lawyers’ document, it is a vehicle of Life, and its spirit is always the spirit of Age.”

ஆண்டுதோறும் குடியரசு நாள் அணிவகுப்பு டெல்லி ராஜபாதையில் நிகழும். குடியரசுத் தலைவர் மாளிகையில் தொடங்கி, இந்தியா கேட் வரை நடக்கும்.

குடியரசு தின விழா

1950 முதல் ஆண்டுதோறும் இந்த அணிவகுப்பு நிகழ்கிறது.

குடியரசு நாள் அணிவகுப்பின் மரியாதையை இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமைத் தளபதியான (Commander-in-Chief ) இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசு நாள் அணிவகுப்பில் அளிக்கப்படும் மரியாதையை ஏற்றுக்கொள்வார்.

வேறு நாட்டு அரசின் தலைவர் (பிரதமர் அல்லது அதிபர்) இந்த நிகழ்வில் தலைமை விருந்தினராகப் பங்கேற்பார்.

1974 முதல் இந்திய மாநிலத் தலைநகரங்களில் மாநில அரசு சார்பாக நடக்கும் குடியரசு நாள் கொண்டாட்டங்களில் ஆளுநர்களும்,

விடுதலை நாள் கொண்டாட்டங்களில் மாநில முதல்வர்களும் கொடி ஏற்றுகின்றனர்.

குடியரசு நாள் அணிவகுப்பில் கலந்துகொண்ட முப்படை வீரர்களும் தங்கள் முகாமுக்கு திரும்பும் நிகழ்வு 'பாசறை திரும்புதல்' (beating retreat) எனப்படும்.

குடியரசு நாள் கொண்டாட்டங்கள் நிறைவு பெறுவதைக் குறிக்கும் இந்த நிகழ்வு, ஆண்டுதோறும் ஜனவரி 29, மாலை இந்திய நாடாளுமன்றம் மற்றும் குடியரசுத் தலைவர் மாளிகை அருகே அமைந்துள்ள விஜய் சவுக்கில் நடக்கும்.

போர்க் காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக பரம் வீர் சக்ரா, மகா வீர் சக்ரா, வீர் சக்ரா ஆகிய விருதுகளும், போர் இல்லாத காலங்களில் வீர தீர செயல்களில் ஈடுபட்டதற்காக அசோகச் சக்ரா, கீர்த்தி சக்ரா, சௌர்ய சக்ரா ஆகிய விருதுகளும் இந்திய அரசால் குடியரசு நாளில் வழங்கப்படுகின்றன.

“You must be the change you want to see in the World” — Mahatma Gandhi.

“Citizenship consists in the service of the country." – Jawaharlal Nehru

“Swaraj is my birth right and I shall have it” – Lokmanya Bal Gangadhar Tilak

வாழ்க பாரதம்

ஜெய்ஹிந்த்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

My vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.


மேலும் படிக்க 74-வது குடியரசு நாள்- ஒரு பார்வை | My Vikatan
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top