என்.எல்.சி போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் தீவிரம்... பின்னணி என்ன?

0

இந்தியாவில் லாபம் ஈட்டும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்று கடலூர் மாவட்ட 'நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (என்.எல்.சி).’ ஆனால் இன்று பல உயிர்களை விழுங்கும் இடமாக மாறியிருக்கிறது. `கடந்த 2016-2020 ஆண்டுவரை கொதிகலன் வெடித்தது, கன்வேயர் பெல்ட்டில் தீ விபத்து, பாய்லர் வெடிப்பு காரணம் என 29 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இந்த மரணங்களுக்குத் தனிமனித கவனக்குறைவு காரணம் என அலட்சிய பதில்களை உதிர்க்கிறார்கள்’ என்கிறார்கள் மக்கள்.

வேறு எந்த அனல்மின் நிலையத்திலும் ஏற்படாத விபத்துகள் நடப்பது நிர்வாகச் சீர்கேட்டை வெளிப்படுத்துவதாகவும், அதை விசாரிக்க தமிழக அரசு தனி ஆணையம் அமைக்க வேண்டுமெனவும் இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அமைப்புகள், விவசாயிகள் ஒருபக்கம் இதை எதிர்த்து போராடும் அதே சூழலில், சில அரசியல் கட்சிகளின் முழு ஃபோகஸ் நெய்வேலிப் பக்கம் திரும்பியிருக்கிறது. இரண்டு தொகுதிகளின் வெற்றியைத் தீர்மானிக்கிற களம் என்பதால் யார் முந்துவது என்பதும் பெரும் போட்டியாகவும் இது பார்க்கப்படுகிறது.  

என்.எல்.சி விபத்து

கூட்டணிக் கட்சிகளின் மாபெரும் பேரணி!

என்.எல்.சி விரிவாக்கத்திற்கு கையகப்படுத்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தர வேண்டும் என்றும், குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர பணி என 17 கோரிக்கைகளை முன்வைத்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பாக நெய்வேலியில் மாபெரும் பேரணி நடத்தப்பட்டது. இதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமை ஏற்று நடத்தினார். இதில் கூட்டணி கட்சி சார்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜாவாஹிருல்லா, திராவிடர் கழக பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன், மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜீ ஆகியோர் கலந்து கொண்டு என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக கண்டனங்களைப் பதிவு செய்தனர்.

என்.எல்.சி பேரணி

அப்போது பேசிய சி.பி.எம் கட்சியில் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், "இந்த நிறுவனம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து இங்கு வாழும் மக்களின் உரிமை பறிக்கப்பட்டுள்ளது. அவர்கள் கேட்கும் உரிய இழப்பீட்டை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்," என்றார்.

மேலும், இது குறித்துப் பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், ``என்.எல்.சிக்கு 25 ஆண்டுகளுக்கு முன்பு நிலம் கொடுத்தவர்களுக்கு முழுமையான நிவாரணத் தொகை வேலை வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. அவை சரியாக வழங்கப்பட வேண்டும். சிலர் நிறுவனம் வேண்டாம் என்கிறார்கள். வேண்டாம் என்றால் அதானிக்கு விற்கப்படும். நிறுவனத்தை மூட போராட்டம் தேவை இல்லை. நாங்கள் அரசியல் காரணத்திற்காக இந்தக் கூட்டணியை ஏற்படுத்தவில்லை. நாட்டு மக்களை காப்பாற்றுவதற்காக இந்த கூட்டணி அமைத்துள்ளோம்” என பாமக-வின் செயல்பாடுகளை மறைமுகமாக விமர்சித்தார்.

என்.எல்.சி போராட்டம்

`நாமதான் போராடினோம்!

போராட்டக் களத்தில் பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், ``இதைச்  சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் நாங்கள் சந்திக்கத் தயாராக இருக்கிறோம். என்.எல்.சி-க்குப் பூட்டுப் போடாமல் நாங்கள் ஓய மாட்டோம். இந்தப் பகுதியிலுள்ள மாவட்டச் செயலாளர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உங்களுக்குத் தோள் கொடுப்பார்கள். என்றும் மாவட்ட மக்களுக்கு உறுதுணையாக இருப்போம்” என்றார்.

மேலும், நிலக்கரியைவிட தரம் குறைவான லிக்னைட்டை எடுக்க 25,000 ஏக்கர் விளைநிலங்களைப் பிடுங்க முயற்சி நடக்கிறது. விரைவில் 'A' எனத் தொடங்கும் தனியார் கைக்கு என்.எல்.சி நிறுவனம் செல்வதைச் சுட்டிக்காட்டிப் பேசியவர், "நாம்தான் தடுப்பதற்குப் போராடிவருகிறோம். இப்பதான் சில பேர் நாங்கதான் என வருகிறார்கள்” என மறைமுகமான விமர்சனத்தை முன்வைத்தார். இவ்வாறு மற்ற கட்சிகளை விமர்சிப்பதற்கும், இந்தப் பிரச்னையில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கும் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

அன்புமணி ராமதாஸ்

`பா.ம.க-வுடன் இணைந்து போராட தயார்!’

இது தொடர்பாகப் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், ``பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கியதிலிருந்து என்.எல்.சி வேலைவாய்ப்பு குறித்தும், ஒப்பந்தத் தொழிலாளர் குறித்தும் போராட்ட நடத்தும் குழுத் தலைவனாக இருந்தவன் நான். அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பின்பும் மக்களுக்காக 30 ஆண்டுகளாகப் போராடிவருகிறேன். அதனால், நிலம் கொடுத்த 13,000 மக்கள் என்மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.  தற்போது நெய்வேலியில் எங்கள் தலைமையில் வெற்றிபெற்ற குழுதான் தொழிலாளர்களால் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கமாக இருக்கிறது.

எனவே, பாமக சொல்வது பற்றி எனக்குக் கவலை இல்லை. அதே நேரம் அவர்கள் போராடுவதைப் பற்றி எனக்கு ஆட்சேபனையும் இல்லை.  மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் என்.எல்.சி நிறுவனத்துக்கு எதிராக யாரோடு வேண்டுமானாலும் நாங்கள் இணைந்து போராட தயார். அது பாமக-வாக இருந்தாலும் சரி. நாங்கள் சாதியத்தைக் கடந்து மக்கள் நலனுக்காகப் போராடுகிறோம். இது உயர்மட்ட அளவில் சாத்தியமாவது கடினம். ஆனால், கீழ்மட்ட அளவில் பாமக-வைச் சேர்ந்தவர்களும் எங்களுடன் இணைந்துதான் பாணியாற்றுகிறார்கள்" என்றார்.

வேல்முருகன்

இது தொடர்பாக பாமக-வின் முக்கியப் பிரமுகர் ஒருவர் பேசியபோது, "நாங்கள் மக்களின் நலனுக்குத்தான் குரல் கொடுக்கிறோம். வரும் ஜனவரி 7, 8 தேதிகளில் தலைவர் நடைப்பயணமாகச் சென்று மக்களின் பிரச்னைகளைக் கருத்து கேட்கவிருக்கிறார். நாங்கள் எங்கள் பாதையில் செல்கிறோம். நீங்கள் சொல்லும் அந்தக் கட்சியுடன் ஒப்பீட்டு அளவில்கூட எங்களைப் பார்க்க வேண்டாம். எங்கள் உயரம் எது என எங்களுக்கு நன்றாகத் தெரியும்” என முடித்துக்கொண்டார்.

போராட்டத்தின் அரசியல் பின்னணி!

இது தொடர்பாகப் பேசிய அரசியல் விமர்சகர் பிரியன், "திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி இவையனைத்தும் கடலூர் மாவட்டத்தில் முக்கியமான தொகுதிகள். இதில் ஒவ்வொரு தொகுதியிலும் 30% வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். ஆனால், கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு, தன்  தொகுதிகளில் பாமகவால் வெற்றி வாகை சூட முடியவில்லை. ஆட்சியாளர்கள் நல்லது செய்தால் பாராட்டுவது, தவறான நடவடிக்கைகளை விமர்சனம் செய்வது, மதுவிலக்கு போராட்டம், மக்கள் நலனுக்குக் குரல் கொடுப்பது என பாமக கட்சியின் செயல்பாடுகள் பாசிட்டிவ்வாக இருந்தாலும், சாதிக் கட்சி என்னும் சாயல் நீங்கவில்லை.

ப்ரியன்

அதனால், பாமக தனித்து நிற்கும்போது இடைநிலைச் சாதிகளிடம் பெற முடியாத வாக்குகளை, மற்ற கூட்டணிக் கட்சிகள் எளிதல் பெற்றுவிடுகிறது. 2011-ம் ஆண்டு பாமக-விலிருந்து விலகிய வேல்முருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சியை உருவாக்கிக் களமாடத் தொடங்கிய பின்னர் கடலூரில் பாமக-வின் செல்வாக்கு சிறுகச் சிறுக சரிவைக் கண்டது. ஒரு காலகட்டத்தில் நெய்வேலி நிலக்கரி தொழிற்சங்கத்தில் டாப்பில் இருந்த பா.ம.க., மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்த இடத்தை த.வா.க தொழிற்சங்கம் கைப்பற்றியது" என்றார்.

என்.எல்.சி தீ விபத்து

``இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு எதிராக பாமக-வும், மக்களுக்கு நெருக்கமானவர்கள் என்ற நிலையில் அவர்களுக்காகப் போராட்டங்களை நடத்துவதாக திமுக கூட்டணி கட்சிகளும் தெரிவிக்கின்றன. குறிப்பாக, தனித்து போட்டியிட முடிவு செய்திருக்கும் பாமக-வுக்கு ஒரு சமூக ஆதிக்கம் செலுத்தும் இடங்களிலும் வெற்றிப் பெற அனைத்து சாதியினர் வாக்கு முக்கியம். இதை உறுதி செய்யவே தனித்து நின்று போராட்டத்தை நடத்துகிறார்கள். ஆனால், தமிழக வாழ்வுரிமை கட்சி அதன் கூட்டணி கட்சிகளுடன் தொடர்ந்து செயல்பட திட்டமிட்டு இருப்பதால் ஒன்றிணைந்து செயல்படுகிறது” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மேலும் படிக்க என்.எல்.சி போராட்டக் களத்தில் அரசியல் கட்சிகள் காட்டும் தீவிரம்... பின்னணி என்ன?
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top