``நீல கலர் புடவையில பிங்க் நெயில் பாலிஷ் கொட்டி, அதை மறைச்சபடியே...”- பாடகி சுதா ரகுநாதன் சுவாரஸ்யம்

0

மார்கழி என்றாலே அதிகாலை கோலம் தொடங்கி, கோயிலின் அதிகாலை சிறப்பு பூஜைகள், இசை நிகழ்ச்சிகள், கச்சேரிகள் என்று களை கட்டிவிடுகின்றன. இதில், மார்கழிக்கும் இசைக்குமான தொடர்பு அலாதியானது. தனது வசீகரக் குரலாலும், இசைத் திறமையாலும் கச்சேரிகளில் கலைஞர்கள் பார்வையாளர்களைக் கட்டிப் போட்டுவிடுகின்றனர்.

இதில், சபாக்களில் பாடும் பெண் கலைஞர்களின் கச்சேரியை ரசிப்பதோடு மட்டுமன்றி, அவர்களின் புடவை, ஆடை அணிகலன்களை கண்டு ரசிக்கவும் தனிக்கூட்டம் இருக்கும். “அவங்க புடவை எல்லாமே அவ்வளவு அழகா இருக்கும்!”, “அவங்க போட்டுருக்க ஜிமிக்கியைப் பார்க்கவே கச்சேரிக்கு போகலாம்!”,“எங்க இருந்துதா இந்த மாதிரி நகையெல்லாம் எடுக்குறாங்கன்னே தெரிலப்பா... அவ்ளோ அழகா இருக்கு” என்று சபாக்களில் இப்படிப்பட்ட பேச்சுகளையும் கேட்கலாம்.

சுதா ரகுநாதன்

இந்த நிலையில், சபாக்களில் பாடும் இசைக்கலைஞர்கள், குறிப்பாக பெண்கள் மார்கழி மாதக் கச்சேரிக்காகத் தங்களை எப்படித் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள், என்ன மாதிரியான மெனக்கெடல்களை எல்லாம் மேற்கொள்வார்கள் என்ற கேள்விகளுடன் பிரபல பின்னணிப் பாடகி மற்றும் இசைக்கலைஞர் சுதா ரகுநாதனை சந்தித்தோம்...

“மார்கழின்னாலே எங்களுக்கு முதல்ல பாட்டு, கச்சேரி தான். எங்க எந்தப் பாட்டு பாடனும், என்ன ராகம், என்ன பல்லவி, தாளத்துல பாடணும்னு நவம்பர் மாசத்துல இருந்தே லிஸ்ட் போட ஆரம்பிச்சுருவோம். போன வருஷம் பாடுனதுல இருந்து என்ன வித்தியாசமா பாடலாம்னு யோசிப்போம். ஒருசிலர் இந்த மாதிரியான முன்தயாரிப்பு வேலைகளை ரொம்ப பரபரப்பா செய்வாங்க. இன்னும் சிலர் கொஞ்சம் நிதானமா செய்வாங்க. நான் ரொம்ப பரபரப்பும் கிடையாது, ரொம்ப நிதானமும் கிடையாது.

கச்சேரிக்கான உங்க புடவை  செலக்ஷன் பற்றி...!

முதன்முதலா 21 வயசுல பாட ஆரம்பிச்சப்போ, ஒருமுறை தாவணி கட்டி பாடிருக்கேன். அதுக்கப்புறம் புடவை மட்டும்தான். பெரும்பாலும் பிரைட் கலர் புடவைதான் நிறைய கட்டுவேன். பிங்க், ப்ளூ, பிரவுன், மஞ்சள், இதெல்லாம் தான் கச்சேரிகளுக்கு நல்லாயிருக்கும். எனக்கும் அதுதான் ரொம்ப பிடிக்கும். லைட் கலர்ஸை விட பிரைட் கலர்ஸ் தான் அதிகம் எடுப்பேன். லைட் கலர்ஸ்-ல கிரே, லைட் கிரீன் இதுதான் எடுப்பேன்.

எல்லாவகை புடவைகளும் எனக்கு பிடிக்கும். ஆனா இப்போ காஞ்சிபுரம் மற்றும் ஷிஃபான் புடவைகள் தான் அதிகம் எடுக்குறேன். காஞ்சிபுரம் புடவைகள் ஒரு கம்பீரத்தைக் கொடுக்கும். ஆரி மற்றும் மதுபானி வொர்க் பண்ண புடவைகள், பெயின்ட்டிங், எம்பிராய்டிங் செய்யப்பட்ட புடவைகளை மத்தவங்களுக்கு கிஃப்ட பண்ண ரொம்ப பிடிக்கும். கச்சேரின்னா மட்டும்தான் புடவை. மற்றபடி எனக்கு சல்வார், ஃப்ராக், ஸ்கர்ட்-னு எல்லாமே ரொம்ப பிடிக்கும். என்னோட டிரஸ் செலக்ஷன் நிறைய பேருக்கு பிடிக்கும். என் கணவர் மற்றும் குழந்தைகளுக்கு நான்தான் செலக்ட் பண்ணுவேன். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களுக்கும் அவர்களுக்கு ஏத்த மாதிரி டிரஸ் செலக்ட் பண்ணித் தருவேன்

சுதா ரகுநாதன்

மேக்கப் மற்றும் காஸ்மெட்டிக்ஸ்-ல உங்களுக்கு எவ்வளவு ஆர்வம்..?

எல்லாருக்குமே நம்மள அழகா காமிச்சுக்கணும்னு ஆசை இருக்கும். பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும். நான் ரொம்ப பேஸிக்கான மேக்கப் தான் போடுவேன். அழகுசாதனப் பொருள்களைப் பொறுத்தவரை தரமானதா வாங்கி வெச்சுட்டா, ஒரு வருஷத்துக்கு அதுவே போதுமானதாஇருக்கும். கம்மல், ஜிமிக்கி இதெல்லாம் புடவைக்கேத்த மாதிரி போட்டுக்கற வழக்கத்த 90-கள்ல கொண்டு வந்ததே நான்தான்னு நினைக்கிறேன். அதுக்கு முன்ன யாரும் அதிகமா ஜிமிக்கி போட்டதில்ல. புடவைக்கு ஏத்த மாதிரி தங்கம், வைரம், பச்சைக்கல் வைச்சதுன்னு போட்டுப்பேன். எனக்கு டல் கோல்டு அதிகம் பிடிக்காது. பிரைட் கோல்ட், ஆன்ட்டிக் ஜுவல்ஸ் மற்றும் வைரம் போட்டுக்கப் பிடிக்கும்.

உங்களுக்கு லக்கி புடவைகள்னு ஏதாவது இருக்கா..?

நாலஞ்சு புடவை இருக்கு. கட்டிட்டுப் போனா கச்சேரி அமைஞ்சுரும்னு ஒரு புடவை, பத்ம பூஷன் மற்றும் கின்னஸ் சாதனைக்கு கட்டிருந்ததுன்னு சில மறக்க முடியாத நினைவுகளோட சில புடவைகள் இருக்கும். அந்தப் புடவைகளைப் பார்க்கறப்ப, அந்த நிகழ்வுகள்தான் மனசுக்குத் தோணும்.

பாடலுக்கு ஏற்ற மாதிரிதான் புடவையைத் தேர்வு செய்வீங்களா..?

இல்லை. அந்த இடத்துக்கு, அங்கிருக்கக் கூடிய லைட் மற்றும் பேக்ரவுண்டுக்கு ஏத்தமாதிரிதான் புடவையை செலக்ட் செய்வேன்.

சுதா ரகுநாதன்

கச்சேரியில நடந்த நகைச்சுவையான சம்பவம் ஏதாவது..?

கச்சேரியில இல்ல. ரியாலிட்டி ஷோக்கு கார்ல போகும்போது, நெயில் பாலிஷ் போட்டுட்டே போனேன். ஒரு வேகத்தடை-ல போறப்போ நெயில் பாலிஷ் தவறி புடவையில கொட்டிடுச்சு. புடவை நீல கலர். கொட்டுனது பிங்க கலர். காரும் ரொம்ப தூரம் வந்துடுச்சு. ஷோக்கும் ரொம்ப நேரம் ஆயிட்டதால அத மட்டும் மறைச்சு, மடிப்பு எடுத்து கொஞ்சம் சரி பண்ணிட்டுப் போனேன். ஆனா அங்க யாருக்கும் வித்தியாசமா தெரியல. ஷோ முடிஞ்ச அப்புறம் எல்லாரும் அதைப்பத்தி பேசி சிரிச்சிட்டு இருந்தோம்.


மேலும் படிக்க ``நீல கலர் புடவையில பிங்க் நெயில் பாலிஷ் கொட்டி, அதை மறைச்சபடியே...”- பாடகி சுதா ரகுநாதன் சுவாரஸ்யம்
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top