கடந்த மூன்று ஆண்டுகளாக நடிகர் சுனில் ஷெட்டியின் மகள் அதியா ஷெட்டி கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுலைக் காதலித்து வந்தார். இருவரும் சேர்ந்திருக்கும் புகைப்படங்களை அதியா ஷெட்டி அடிக்கடி சோஷியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டார்.
இதையடுத்து இருவருக்கும் திருமணத்திற்கான ஏற்பாடுகள் முழுவேகத்தில் நடந்து வந்தது. மும்பை அருகில் உள்ள கண்டாலா என்ற மலை நகரத்தில் சுனில் ஷெட்டிக்கு பண்ணை வீடு இருக்கிறது. இந்த பண்ணை வீட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமையிலிருந்து திருமணச் சடங்குகள் தொடங்கின. நேற்று மாலை இருவருக்கும் எளிய முறையில் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இதையடுத்து சுனில் ஷெட்டி தன் மகனுடன் வெளியில் வந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் திருமணம் நல்ல முறையில் நடந்தேறியதாகவும், நான் மாமாவாகிவிட்டேன் என்றும் தெரிவித்தார். அதோடு கூடியிருந்த பத்திரிக்கையாளர்களுக்கு இனிப்பு வழங்கி தனது மகிழ்ச்சியைக் கொண்டாடினார். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு திருமண வரவேற்பு இருக்கும் என்று தெரிவித்தார். திருமணத்தில் கிருஷ்ணா ஷெராப், கிரிக்கெட் வீரர் இஷாந்த் சர்மா, அவரது மனைவி பிரதிமா, வருண் ஆரோன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
திருமணத்திற்கு பிறகு அதியா ஷெட்டியும், கே.எல்.ராகுலும் சேர்ந்து வெளியிட்ட டிவிட்டர் செய்தியில், `இன்று நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் வீட்டில் திருமணம் செய்து கொண்டோம். அது எங்களுக்கு மகிழ்ச்சியையும், அமைதியையும் கொடுத்தது. நன்றியுணர்வும், அன்பும் நிறைந்த இதயத்துடன் இந்த ஒற்றுமை பயணத்தில் உங்கள் ஆசிர்வாதங்களைக் கோருகிறோம்' என்று தெரிவித்திருந்தனர். இதே போன்று அதியா ஷெட்டி தனியாக பதிவிட்டுள்ள டிவிட்டர் செய்தியில், `உனது வெளிச்சத்தில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன். இன்று எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான தருணம்' என்று குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு பிறகு இருவரும் கணவன் மனைவியாக பத்திரிக்கையாளர்களின் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தனர். சோசியல் மீடியாவில் திருமண தம்பதிக்கு பாலிவுட் பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிக்க `உனது வெளிச்சத்தில் காதலிக்கக் கற்றுக்கொண்டேன்' - கே.எல்.ராகுலை திருமணம் செய்த அதியா ஷெட்டி