மும்பையின் மேற்கு பகுதியில் வசிக்கும் நிஷா மேத்தா(41) என்ற பெண் இரண்டு இடங்களில் பியூட்டி பார்லர் நடத்தி வந்தார். கொரோனாவால் இரண்டையும் மூடிவிட்டார். தனக்கு தெரிந்த லால்சந்த் குப்தா என்பவர் தானே மற்றும் நவிமும்பையில் நடத்தும் சீட்டாட்ட கிளப்பிலும் பார்ட்னராக சேர்ந்தார். நிஷா சீட்டாட்டத்தில் பைத்தியமாக இருந்தார். சீட்டாட்டத்தின் மூலம் அதிக பணம் சம்பாதிக்க முடியும் என்று கருதினார்.

ஆனால் அவர் முதலீடு செய்த சீட்டாட்ட கிளப்பில் முறைகேடு நடப்பதாக உணர்ந்து இரண்டு கிளப்பிலும், தான் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுக்கொண்டு லால்சந்த் குப்தா உறவையும் துண்டித்துக்கொண்டார். ஆனாலும் நிஷாவுக்கு சீட்டாட்டத்தின் மீது இருக்கும் மோகத்தை தெரிந்து கொண்ட லால்சந்த் உட்பட மூன்று பேர், அகமதாபாத்தில் ஒருவர் சீட்டாட்டத்தில் ரூ.25 லட்சம் முதலீடு செய்ய தயாராக இருப்பதாக அந்தப் பெண்ணிடம் தெரிவித்தனர்.
அகமதாபாத் சென்றால் நன்றாக பணம் சம்பாதிக்கலாம் என்று இருவரும் ஆசைவார்த்தை கூறினர். இதையடுத்து லால்சந்த் குப்தாவும், அவருடைய நண்பர்கள் இரண்டு பேரும் சேர்ந்து நிஷாவை கார் ஒன்றில் அகமதாபாத்துக்கு அழைத்துச்சென்றனர். அங்கு ஒரு வீட்டில் தங்கி இரவு முழுவதும் சீட்டாடினர். அதோடு மது அருந்தினர். மூன்று பேரும் சேர்ந்து நிஷாவை இரவு முழுக்க பாலியல் வன்கொடுமை செய்துவிட்டனர்.

மறுநாள் அவர்கள் மும்பை வந்தனர். மும்பை வந்த பிறகு இது குறித்து அந்தப் பெண் நடந்த சம்பவம் குறித்து தன் கணவரிடம் தெரிவித்தார். உடனே இருவரும் சேர்ந்து இது குறித்து விலே பார்லே போலீஸில் புகார் செய்தனர். விலே பார்லே போலீஸார் உடனே வழக்கு பதிவு செய்து விரைந்து செயல்பட்டு இரண்டு பேரை கைது செய்துள்ளனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர். இது குறித்து மும்பை விலே பார்லே போலீஸ் அதிகாரி கூறுகையில், ``பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு சீட்டாட்டத்தின் மீது இருந்த மோகத்தை பயன்படுத்தி அவரை அகமதாபாத்திற்கு அழைத்துச்சென்றிருக்கின்றனர்'' என்றார்.
மேலும் படிக்க `சீட்டாட்டத்தில் பணம் சம்பாதிக்கலாம்': பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்கள்