டெல்லியை சேர்ந்த தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறித்தது மற்றும் அரசு அதிகாரிகள் என்று கூறி பணம் பறித்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சுகேஷ் சந்திரசேகரிடமிருந்து பரிசுப்பொருள்களை பெற்றவர்களில் நடிகை நோரா ஃபதேஹி என்பவரும் அடக்கம். அவரிடம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர். நோரா இவ்வழக்கில் சாட்சியாக மாறியிருக்கிறார். அவர் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், ``சுகேஷ், காதலியாக சம்மதித்தால் மிகப்பெரிய வீடு தருவதாகவும், ஆடம்பரமாக வாழலாம் என்றும் தெரிவித்தார்.

பிங்கி இரானி, `எனது உறவினரை தொடர்பு கொண்டு, சுகேஷ் காதலியாக மாற ஜாக்குலின் பெர்னாண்டஸ் தயாராக இருக்கிறார். ஆனால் சுகேஷ் உங்களைத்தான் விரும்புகிறார். சுகேஷை கவனித்துக்கொள்ள பல நடிகைகள் தயாராக இருக்கின்றனர்.’ என்றார். ஆரம்பத்தில் சுகேஷ் யார் என்று எனக்கு தெரியாது. அதன் பிறகு எல்எஸ் கார்ப்பரேஷன் என்ற கம்பெனியில் வேலை செய்வதாக நினைத்தேன்.
சுகேஷுடன் நேரடியாக நான் பேசிக்கொண்டதும் கிடையாது. தொடர்பு வைத்துக்கொண்டதும் இல்லை. அமலாக்கப்பிரிவு என்னிடம் விசாரணை நடத்த சம்மன் அனுப்பிய பிறகுதான் சுகேஷ் ஒரு கிரிமினல் என்று தெரிய வந்தது. அதைப்பற்றி எனக்கு தெரியாது. அவனை சந்தித்ததும் கிடையாது. அமலாக்கப்பிரிவின் விசாரணையின் போதுதான் முதன் முறையாக அவனை பார்த்தேன்” என்றார். மேலும், சுகேஷ் மூலம் தான் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அவனிடமிருந்து எந்த வித பண உதவியும் பெற்றுக்கொண்டதில்லை என்று அமலாக்கப்பிரிவு விசாரணையில் நோரா தெரிவித்துள்ளார். ஆனால் கார் போன்ற ஆடம்பர பரிசுப்பொருள்களை சுகேஷிடமிருந்து பெற்று இருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அமலாக்கப்பிரிவின் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ள மற்றொரு நடிகை நிக்கி தம்போலி. சுகேஷை டெல்லி திகார் சிறைக்கு சென்று பார்த்து வந்த மற்றொரு நடிகையான நிக்கி தம்போலி கோர்ட்டில் கொடுத்துள்ள வாக்குமூலத்தில், ``என்னிடம் சுகேஷை எனது காதலன் என்று என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போடும்படி கட்டாயப்படுத்தினார். 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் முறையாக சுகேஷை சிறையில் பார்க்க சென்ற போது சிறை நுழைவு வாயிலில் எந்த வித பாதுகாப்பு சோதனையும் இல்லை. அடையாள அட்டையையும் காட்டும்படி கேட்கவில்லை. போலீஸார் எனது பாதுகாப்புக்கு வந்தனர். சுகேஷ் என்னை சந்தித்து பேசிய பிறகு ஒரு விலையுயர்ந்த பேக் மற்றும் 2 லட்சம் பணம் கொடுத்தார். அதை கொடுத்துவிட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னுடன் நட்பில் இருப்பதாக பதிவிடும் கட்டாயப்படுத்தினான். அதன் பிறகும் அடிக்கடி எனக்கு பரிசுப்பொருள்களை அனுப்பிக்கொண்டிருந்தார். அதேசமயம் நான் அவனது பாய்பிரண்ட் என்று இன்ஸ்டாகிராமில் பதிவிடும்படி கட்டாயப்படுத்தினான்.” என பதிவிட்டுள்ளார்.
மேலும் படிக்க `ஆடம்பரமாக வாழலாம்; காதலன் என இன்ஸ்டாவில் போட சொன்னார்’ - சுகேஷுக்கு எதிராக நடிகைகள் புகார்