Motivation Story: 3,259 நாள்கள் சிறை வாசம்; தேள், குளவி, வௌவாலின் அச்சுறுத்தல் நேரு செய்த செயல்!

0
`உங்களுக்கு ஒரு மந்திரம் சொல்கிறேன். அது மிகச் சிறிய மந்திரம். நீங்கள் அதை உங்கள் இதயத்தில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு மூச்சும் அந்த மந்திரச்சொல்லை ஒலிக்கட்டும். அந்த மந்திரம் இதுதான்: `செய் அல்லது செத்து மடி.’ - மகாத்மா காந்தி. 
நேரு

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஜவஹர்லால் நேரு. வசதியான குடும்பத்தில் பிறந்தவர். தந்தை மோதிலால் நேரு எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் தனிப்பட்ட சொகுசு வாழ்க்கையை விட்டுவிட்டு, தேச சேவையில் இறங்கியவர். பெரிய பெரிய தொழில் நிறுவனங்களிலிருந்தெல்லாம் நிறைய சம்பளம் தருவதாக அழைப்புகள் வந்தன. அவற்றையெல்லாம் மறுத்தார். தன்னுடைய வழக்கறிஞர் தொழிலை முறையாகச் செய்திருந்தால்கூட லட்ச லட்சமாக அவர் சம்பாதித்திருக்கலாம். அவரோ, `பொதுத் தொண்டு செய்வதை விட்டுவிட்டு, சொற்பப் பணம் சம்பாதிப்பதற்காக வாழ்க்கை முழுவதையும் செலவிடுவது வீண்’ என்று அழுத்தமாக நம்பினார். காந்தியத்தைக் கைக்கொண்டு எளிய வாழ்க்கை வாழ்ந்தார். இவைகூடப் பெரிதல்ல... அவர் சிறையிலிருந்த நாள்கள் கொடுமையானவை.                                                                                                                                                                                                                                                        

அன்றைய காலகட்டத்தில் ஆங்கிலேய ஏகாதிபத்யத்தை எதிர்ப்பது சாதாரண காரியமல்ல. ஒவ்வொரு போராட்டத்துக்கும் சிறைத் தண்டனை உண்டு. காந்தியின் `செய் அல்லது செத்து மடி’ வாக்கை அப்படியே அச்சுப் பிசகாமல் கடைப்பிடித்தவர் நேரு. `An Autobiography' என்கிற அவருடைய நூலில் சிறை வாழ்க்கையை எதிர்கொண்ட அனுபவத்தைப் பதிவுசெய்திருக்கிறார். அதை `மாமனிதர் நேரு’ என்கிற நூலில் விவரிக்கிறார் காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளரும், எழுத்தாளருமான ஆ.கோபண்ணா. 

கோபண்ணா

நேருவின் பதிவு இப்படி விரிகிறது... ``டேராடூன் சிறையில் 14 மாதங்கள், 15 நாள்களைக் கழித்தேன். சிறை வாழ்க்கையோடு ஒன்றிவிட்டதாக அப்போது நான் நினைத்துக்கொண்டேன். அந்த அறையில் நான் மட்டும் தனியாக இல்லை. குளவிகளும் வண்டுகளும் குடியிருந்தன. மேற்கூரையில் ஏராளமான பல்லிகள் இருந்தன. மாலையானதும் அவை இரைதேட ஆரம்பிக்கும். பல்லிகள் எழுப்பும் ஒலியிலேயே அவற்றின் எண்ணமும் உணர்ச்சியும் வெளிப்படும். காற்றோட்டம் இல்லாத அந்த அறை அவற்றுக்குப் பிடித்துப்போயிருக்கும் என நினைத்துக்கொள்வேன். அந்தச் சிறிய இடத்திலேயே அவை வாழப் பழகியிருந்தன. 

எனக்கும் மூட்டைப்பூச்சிகள், கொசுக்களுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்துகொண்டேயிருக்கும். என் அறையிலிருந்த நூற்றுக்கணக்கான குளவிகளையும் வண்டுகளையும் நான் பொறுத்துக்கொண்டேன். `குளவிகள் கொட்டிவிடுமோ?’ என்ற பயமும் இருந்தது. கோபத்தில் அவற்றை விரட்ட முயல்வேன். ஆனால், தன்னுடைய இருப்பிடத்திலிருந்து வெளியேறாமல், என்னுடன் அது போராடும். அங்கேயே முட்டையிடும். அதன் பிறகு, `நம்மை அவை தொந்தரவு செய்யாதவரை, நாம் ஏன் அவற்றைத் தொந்தரவு செய்ய வேண்டும்’ என்று ஒரு முடிவுக்கு வந்தேன். இந்தக் குளவிகள், வண்டுகளோடு பல ஆண்டுகள் சிறையில் வாழ்ந்திருக்கிறேன். அவை, என்னை ஒருபோதும் தாக்கியதில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நட்பாய் இருந்துகொண்டோம். 

ஜவஹர்லால் நேரு

வௌவால்களை மட்டும் எனக்குப் பிடிக்காது. எனினும் நான் சகித்துக்கொள்வேன். மாலை நேரங்களில் சத்தமே இல்லாமல் அவை பறக்கும். அவற்றுக்கு இரவில் மட்டுமே கண் தெரியும். என் முகத்தில் மோதுவதுபோல அவை பறக்கும். அவை என்னைத் தாக்கிவிடுமோ என்று நான் அச்சப்பட்டிருக்கிறேன். தலைக்கு மேல் பறக்கும் வௌவால்களைப் பார்க்கும்போது நரிகள் பறப்பதுபோல இருக்கும். 

எறும்புகளையும் மற்ற பூச்சிகளையும் நீண்ட நேரம் கவனித்துக்கொண்டே இருப்பேன். மாலை நேரத்தில் வரும் பல்லிகளுக்கு அவை இரையாகிவிடும். பொதுவாக பல்லிகள், குளவிகளை நெருங்காது. ஆனால், சில சமயம், குளவிகளின் முன்னே செல்லாமல், அதன் பின்னே சென்று தாக்கிக் கொல்வதைப் பார்த்திருக்கிறேன். குளவிகளின் கொடுக்குப் பகுதியைக் கவ்விப் பிடிக்காமல் அவற்றின் பின்பகுதியைப் பிடிப்பது, அவை கொட்டிவிடும் என்று தெரிந்தா அல்லது யதார்த்தமாகவா என்பது எனக்குத் தெரியவில்லை. 

என் அறையில் தேளை அடிக்கடி பார்ப்பேன். குறிப்பாக, இடியுடன் மழை பெய்யும்போது தேள்கள் அதிகமாக நடமாடும். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், அந்தத் தேள்கள் என்னை ஒரு முறைகூடக் கொட்டியதில்லை. என் படுக்கையின் மேல் ஊர்ந்து செல்லும்; புத்தகத்தின் மீது அமர்ந்திருக்கும். கறுப்புத் தேளைப் பிடித்து, நான் சிறிது நேரம் ஒரு பாட்டிலில் அடைத்துவைப்பேன். அதற்கு ஈக்களை இரையாகக் கொடுப்பேன். பிறகு சுவரில் விட்டதும் அது தப்பியோடிவிடும். தேளை மீண்டும் சந்திக்க எனக்கு விருப்பமில்லை. அதனால், என் அறையைச் சுத்தம் செய்து தேள்களை வேட்டையாடினேன். அதன் பிறகு, என் அறைப்பக்கம் தேள்கள் வருவதே இல்லை.’’ 

மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு

ஜவஹர்லால் நேரு சிறையில் அனுபவித்த சித்ரவதை நாள்களின் சிறு துளி இந்தப் பதிவு. சுதந்திரப் போராட்டத்தில் ஒன்பது முறை சிறைக்குச் சென்ற அவர் சிறையில் இருந்த மொத்த நாள்கள் எத்தனை தெரியுமா? 3,259 நாள்கள். 

இந்த நிகழ்வு மட்டுமல்ல... நேருவின் பிறப்பு முதல் அவர் மறைந்த தினம் வரை 700-மேற்பட்ட அரிய புகைப்படங்களுடன், 600 பக்கங்களில் ஒரு புத்தகமாக வெளியிட்டிருக்கிறார் எழுத்தாளர் ஆ.கோபண்ணா. நவ இந்தியா பதிப்பகத்தின் வெளியீடாக, `மாமனிதர் நேரு - அரிய புகைப்பட வரலாறு’ என்கிற கோபண்ணாவின் நூல் மிக முக்கியமான ஆவணம். 

சுதந்திரத்துக்குப் பிறகு ஆங்கிலேயர்கள் விட்டுச் சென்றது ஒன்றுபட்டிருக்காத ஓர் இந்தியா; ஒன்றுமே இல்லாத இந்தியா. சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவியேற்றபோது அவர் முன் கொட்டிக்கிடந்தவை சவால்கள் மட்டுமே. சுதந்திர இந்தியாவுடன் சமஸ்தானங்களை இணைத்தது தொடங்கி, இந்தியப் பொருளாதாரத்தின் வளர்ச்சியை அதிகரித்தது, பல தொழில்களுக்குக் கதவு திறந்துவிட்டது, ஒரு கனவு இந்தியாவை நனவாக்கியது எனத் தொடர்ந்த அவர் பணிகள் அபாரமானவை. அதனால்தான் அவர் `நவீன இந்தியாவின் சிற்பி’ என அழைக்கப்படுகிறார். 

வாழ்க்கையில் நமக்கு எத்தனையோ இடர்ப்பாடுகள். அவை எதிர்ப்படும்போதெல்லாம் நேரு கடைப்பிடித்த காந்தியின் வாக்கை நாமும் நினைவில்கொள்வோம். `செய் அல்லது செத்து மடி.’             

மேலும் படிக்க Motivation Story: 3,259 நாள்கள் சிறை வாசம்; தேள், குளவி, வௌவாலின் அச்சுறுத்தல் நேரு செய்த செயல்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top