தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு -3

0

`பச்சிளம் குழந்தை வளர்ப்பு’ பெற்றோருக்கு சவால் நிறைந்தது மட்டுமல்ல, பல்வேறு கேள்விகளும் நிறைந்தது. பெற்றோரின் கேள்விகள் கொண்டு `பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்’ ஒவ்வொன்றையும் வாரம் ஒன்றாக, மருத்துவ நுணுக்கங்களைக் கொண்டு, எளிதில் புரியும் வண்ணம், விரிவாக விளக்குவதே இந்த மருத்துவத் தொடரின் நோக்கம்.

கேள்வி: டாக்டர், எனது ப்ளட் க்ரூப் O-ve. என்னோட ப்ரெக்னென்ஸி பீரியட்ல, அல்ட்ராசவுண்ட் டெஸ்ட்டெல்லாம் நார்மலா இருந்தது. 28 வாரத்துல Anti-D போட்டாங்க. 40 வாரம் முடிஞ்சு நார்மல் டெலிவரி ஆச்சு. டெலிவரி ஆன ஒரு மணி நேரத்துல, குழந்தைக்கு, ஜாண்டிஸ் இருக்கு, ரத்தத்தை கம்ப்ளீட்டா மாத்தலன்னா, மூளை டேமேஜ் ஆகிடும்னு டாக்டர்ஸ் சொன்னாங்க. DVET பண்ணதும், ஜாண்டிஸ் நார்மலாயிடுச்சி. அம்மாவுக்கு நெகடிவ் ப்ளட் க்ரூப் இருந்தா, குழந்தைக்கு எப்படி ஜாண்டிஸ் வருது? அடுத்த ப்ரெக்னென்ஸில, இதைத் தடுக்க என்ன செய்யணும்? DVET பண்ணதால குழந்தைக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா, டாக்டர்?

blood groups

உங்கள் கேள்விக்கு பதிலளிக்கும் முன், ரத்த வகை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது, நெகடிவ் ரத்த வகையுள்ள கர்ப்பிணிகளுக்கு Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது, Rh இணக்கமின்மை ஏற்படாமல் எவ்வாறு தடுப்பது, Rh இணக்கமின்மை ஏற்பட்டால் தரும் சிகிச்சை முறைகளை பற்றி விரிவாகக் காண்போம்.

ரத்த வகைகள்:

ரத்த சிவப்பணுக்களின் மேலுள்ள ஆன்டிஜென்களை (Antigen – பிறபொருளெதிரியாக்கி) கொண்டு, ரத்த வகைகள் நிர்ணயிக்கப்படுகின்றன. ரத்தச் சிவப்பணுக்களின் மேல் ‘A’ ஆன்டிஜென் இருந்தால், ‘A’ ரத்த வகை என்றும், ‘B’ ஆன்டிஜென் இருந்தால், ‘B’ ரத்த வகை என்றும், ‘A’ மற்றும் ‘B’ ஆன்டிஜென்கள் இரண்டுமிருந்தால் ‘AB’ ரத்த வகை என்றும், ‘A’ மற்றும் ‘B’ ஆன்டிஜென்கள் இரண்டும் இல்லையென்றால் ‘O’ ரத்த வகை என்றும் நிர்ணயம் செய்யப்படுகின்றன. ரத்தச் சிவப்பணுக்களின் மேல் ‘Rh’ ஆன்டிஜென் இருந்தால், ‘Rh+ve’ அல்லது சுருக்கமாக ‘+ve’ ரத்த வகை என்றும், ‘Rh’ ஆன்டிஜென் இல்லையென்றால், ‘Rh-ve’ அல்லது சுருக்கமாக ‘-ve’ ரத்த வகை என்றும் அழைக்கப்படும்.

மருத்துவர் மு. ஜெயராஜ்

உதாரணமாக, ஒருவரின் ரத்த வகை ‘AB+ve’ என்றால், அவரது ரத்தச் சிவப்பணுக்களின் மேல், ‘A’, ‘B’ மற்றும் ‘Rh’ ஆகிய அனைத்து ஆன்டிஜென்களும் இருக்கும். உலகளவில் O+ ரத்த வகையினர் 37%, A+ ரத்த வகையினர் 27%, B+ ரத்த வகையினர் 23%, AB+ ரத்த வகையினர் 6%, O- ரத்த வகையினர் 3%, A- ரத்த வகையினர் 2%, B- ரத்த வகையினர் 1% மற்றும் AB- ரத்த வகையினர் 0.4% பேர் உள்ளனர். சுமார் 6% பேர் மட்டுமே நெகடிவ் ரத்த வகை கொண்டவராக உள்ளனர்.

A, B மற்றும் Rh ஆன்டிபாடிகள்:

நம் உடலில் ஆன்டிஜெனை, நமது நோய் எதிர்ப்பு அமைப்பு உணரும்போது, அந்த ஆன்டிஜெனுக்கு எதிராக ஆன்டிபாடிகளை (Antibody – பிறபொருளெதிரி) உருவாக்குகிறது. குழந்தை பிறக்கும்போது, பெரும்பாலும் அதன் உடலில் A, B மற்றும் Rh ஆன்டிபாடிகள் உருவாகியிருக்காது. எனினும் குடலிலுள்ள பாக்டீரியாக்கள் மற்றும் சில உணவுகளிலும், A மற்றும் B ஆன்டிஜென்களை போன்ற ஆன்டிஜென்கள் உள்ளன. அந்த ஆன்டிஜென்களை நோய் எதிர்ப்பு அமைப்பு உணரும்போது, குழந்தைகளின் உடலில் A மற்றும் B ஆன்டிபாடிகள் உருவாகிவிடுகின்றன. எனவே, ஒருவரின் ரத்த வகை ‘A’ எனில், அவரின் ரத்தச் சிவப்பணுக்களின் மீது, ‘A’ ஆன்டிஜெனும், ரத்தத்தில் ‘B’ ஆன்டிபாடிகளும் இருக்கும்.

எனவே தான், ஒருவருக்கு ரத்தமாற்றம் (blood transfusion) செய்யும்போது, அவரது ரத்த வகைக்கு ஏற்ற ரத்த வகைகளையே உபயோகப்படுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, ‘A+’ ரத்த வகை உள்ளவருக்கு, A+, A-, O+ மற்றும் O-ve ரத்த வகைகளையே ரத்த மாற்றத்திற்கு ஏற்படுத்த வேண்டும்; மாறாக, B+, B-ve, AB+, AB-ve போன்ற ரத்த வகைகளை உபயோகப்படுத்தினால், அவரது உடலில் ஏற்கெனவே உள்ள, B ஆன்டிபாடிகள், B+, B-ve, AB+, AB-ve ரத்தச் சிவப்பணுக்களின் மீதுள்ள B ஆன்டிஜென்களுக்கெதிராக செயல்பட்டு, ரத்தச் சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும்.

எனினும் குடலிலுள்ள பாக்டீரியாக்களிலோ, உணவுகளிலோ Rh ஆன்டிஜென்கள் இல்லாததால், Rh-ve குழந்தைகளுக்கு, Rh ஆன்டிபாடிகள் உருவாகாது. Rh-ve ரத்த வகை உள்ளவருக்கு, தவறுதலாக பாசிட்டிவ் ரத்த மாற்றம் (blood transfusion) செலுத்தினாலோ, அல்லது Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தாலோ, நோய் எதிர்ப்பு அமைப்பு Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது. அதனால்தான், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவருக்கு, அவரது ரத்த வகைக்கேற்ற நெகட்டிவ் ரத்த வகையே ரத்த மாற்றத்திற்கு உபயோகப்படுத்த அறிவுறுத்துகிறோம்.

கர்ப்பிணிகளில் Rh இணக்கமின்மை எவ்வாறு ஏற்படுகிறது?

ரத்த மாற்றத்திற்கு முன், அனைத்துப் பரிசோதனைகளுக்கும் உட்பட்டு, பொருத்தமுடைய ரத்தம் கண்டறியப்பட்டு உபயோகப்படுத்தப்படுவதால், நெகட்டிவ் ரத்த வகையுள்ளவர்களுக்கு, தவறான ரத்த மாற்றத்தினால் Rh ஆன்டிபாடிகள் ஏற்படும் நிகழ்வுகள் தற்போது மிகவும் அரிது. எனினும், Rh-ve ரத்த வகையுள்ள கர்ப்பிணியின் குருதியோட்டத்தில், Rh+ve உள்ள சிசுவின் ரத்தம் கலந்தால், நோய் எதிர்ப்பு அமைப்பானது, Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகளை உருவாக்குகிறது.

பிரசவம், கருக்கலைப்பு, விபத்து போன்ற நிகழ்வுகளின்போது, சிசு-தாய் ரத்தப்போக்கு (Feto-matenal hemorrhage) ஏற்பட்டு, சிசுவின் ரத்தம், தாயின் குருதியோட்டத்தில் கலந்துவிடும். சிசு-தாய் ரத்தப்போக்கு பிரசவத்தின்போது மட்டுமல்லாமல், இறுதி மூன்று மாத கர்ப்ப காலத்திலும் ஏற்பட நேரிடலாம். தாயின் நோய் எதிர்ப்பு அமைப்பு, சிசுவின் Rh ஆன்டிஜெனை உணர்ந்து, Rh ஆன்டிபாடிகள் உருவாவதற்கு 5-15 வாரங்கள் தேவைப்படும். எனவே, பெரும்பாலும் முதல் குழந்தை எவ்வித பாதிப்புகளும் இல்லாமல் பிறக்கும். ஆனால், முதல் குழந்தையின் ரத்த வகை பாசிடிவ்வாக இருந்தால், அதனால் தாயின் உடலில் ஏற்பட்ட Rh ஆன்டிபாடிகளால், அதற்கடுத்த கர்ப்ப காலத்தில், சிசுவிற்கு தீவிர பாதிப்புகள் ஏற்படும்.

Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள்:

பெரும்பான்மையான Rh ஆன்டிபாடிகள் IgG ஆன்டிபாடி வகையைச் சேர்ந்தவை. IgG ஆன்டிபாடிகள், நஞ்சுக்கொடியைத் தாண்டிச் செல்லக் கூடியவை என்பதால், அவை சிசுவின் குருதியோட்டத்தில் எளிதில் சேர முடியும். எனவே, தாயின் குருதியில் உள்ள Rh ஆன்டிபாடிகள் நஞ்சுக்கொடியைத் தாண்டி, சிசுவின் குருதியோட்டத்தை அடையும்போது, சிசுவின் ரத்தச் சிவப்பணுக்களின் மேலுள்ள Rh ஆன்டிஜெனுக்கு எதிராகச் செயல்பட்டு, சிசுவின் ரத்த சிவப்பணுக்களைச் சிதைவுறச் செய்யும் (hemolysis).

ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல், மிதமாக இருந்தால், ரத்த சோகை மற்றும் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதால் வெளிப்படும் பிலிருபினால் மஞ்சள் காமாலை பாதிப்புகளும் ஏற்படும்.

ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுதல் மிகத்தீவிரமாக இருந்தால், தீவிர ரத்த சோகை, தீவிர மஞ்சள் காமலையால் மூளை பாதிப்பு, கல்லீரல் மற்றும் மண்ணீரல் வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும். தீவிர ரத்த சோகையினால், இதயத் திறனிழப்பு ஏற்பட்டு, வயிறு, நுரையீரல், மற்றும் இதயத்தைச் சுற்றி நீர் கோத்துக் கொள்ளும். இதனை, ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸ் (Hydrops Fetalis) என்றழைப்போம்.

ஹைடிராப்ஸ் ஃபீடாலிஸில் இறப்பு சதவிகிதம் 30-50% என்பது குறிப்பிடத்தக்கது. இந்த பாதிப்புகள் அனைத்தும், சிசுவின் ரத்தச் சிவப்பணுக்கள் சிதைவுறுவதனாலேயே ஏற்படுவதால், பச்சிளங்குழந்தைகளின் குருதி சிவப்பணு சிதைவு நோய் (Hemolytic Disease of the Newborn) எனவும் அழைக்கப்படுகிறது. Rh இணக்கமின்மையால் சிசுவிற்கு ஏற்படும் பாதிப்புகள், அடுத்தடுத்த கர்ப்பத்தில், மிகத் தீவிரமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த அத்தியாயத்தில், கர்ப்ப காலத்தில் Rh இணக்கமின்மை ஏற்படாமல் தடுப்பதற்கான மருத்துவ வழிமுறைகள், Rh இணக்கமின்மையைக் கண்டறியும் பரிசோதனைகள், Rh இணக்கமின்மையால் ஏற்படும் மஞ்சள் காமாலைக்கு செய்யப்படும் குருதி மாற்றம் போன்றவை குறித்து, விரிவாகக் காண்போம்!

பராமரிப்போம்...


மேலும் படிக்க தீவிர மஞ்சள் காமாலையை ஏற்படுத்தும் Rh இணக்கமின்மை | பச்சிளம் குழந்தை பராமரிப்பு -3
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top