ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் தென்னரசு போட்டியிடுகிறார். இதற்கான வேட்பாளர் அறிமுக கூட்டம் ஈரோட்டில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக-வுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான ஜி.கே.வாசன், பூவை ஜெகன்மூர்த்தி, டாக்டர் கிருஷ்ணசாமி, ஜான்பாண்டியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருக்குப் பதிலாக முன்னாள் எம்.பி.யும், தேசியச் செயலாளருமான சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டார்.

கூட்டத்துக்குப் பின், `பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை இந்தக் கூட்டத்தில் ஏன் கலந்துகொள்ளவில்லை?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த, சி.பி.ராதாகிருஷ்ணன், ``இலங்கை யாழ்ப்பாணத்தில் மத்திய அரசின் நிதி உதவியுடன் அமைக்கப்பட்டுள்ள கலாசார மைய திறப்பு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் முருகனுடன் அண்ணாமலை சென்றுள்ளார். அந்த நிகழ்ச்சி ஏற்கெனவே முடிவு செய்யப்பட்டதால்தான் அவரால் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. மற்றபடி வேறு காரணங்கள் ஏதும் இல்லை" என்றார்.
மேலும் படிக்க அதிமுக கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் அண்ணாமலை மட்டும் மிஸ்ஸிங், ஏன்?- சி.பி.ராதாகிருஷ்ணன் விளக்கம்