`ரஜினி, ஸ்ரீதேவியெல்லாம் வந்து சாப்பிட்டிருக்காங்க...; - பாரம்பர்யம் மாறாத காஞ்சி மைசூர் ஆரியபவன்!

0

அறிவியல் வளர்ச்சியால் நம் பணிகளை எளிமையாகவும் விரைந்து முடிக்கவும் எண்ணற்ற கருவிகள், உபகரணங்கள் வந்துவிட்டன. சமையல் துறையில் பணிச்சுமையைக் குறைப்பதில் மிக்ஸி, கிரைண்டர் போன்றவை பேருதவி புரிகின்றன. வேலைகளை எளிதாக்க நவீன கருவிகள் ஏராளாமாக இருந்தபோதும் சில இடங்களில் இன்னும் பாரம்பர்ய முறையையே தொடர்கிறார்கள். அம்மியில் அரைப்பது, கல் உரலில் மாவு அரைத்து, உணவு சமைத்து ருசிக்கச் செய்கின்றனர்.

காஞ்சிபுரத்தில் சங்கரமடம் அருகில் அமைந்துள்ளது, ஹோட்டல் மைசூர் ஆரியபவனில் இன்னமும் பாரம்பர்ய முறையில் உணவுகள் தயாரிக்கப்படுகின்றன. கோவில் நகரான காஞ்சிக்கு வரும் பக்தர்கள் பலரும், தரிசனம் முடித்த கையோடு மைசூர் ஆரியபவனுக்கு வரத் தவறுவதில்லை. காஞ்சி மக்களின் ஃபேவரைட் ஃபுட் ஸ்பாட்டாக விளங்கும் ஆர்யபவனுக்குள் நாமும் நுழைந்தோம்.

மைசூர் ஆரிய பவன் ஹோட்டல் | காஞ்சிபுரம்

பக்தி மணக்கும் காஞ்சி நகரில், பிரமாண்டம் ஏதுமில்லாத ஹோட்டலில், பதார்த்தங்களின் மணமும் கமகமக்கிறது. வாடிக்கையாளர்கள் கூட்டம் நிரம்பி வழிவதே ஹோட்டலின் தனிச்சிறப்பை நமக்கு உணர்த்துகிறது. இந்த ஹோட்டலுக்கு அப்படியென்ன மவுசு? ஊழியர்களிடம் பேசினோம்...

மைசூர் ஆரியபவன் ஹோட்டல், 45 ஆண்டுகளுக்கு முன்பாக தொடங்கப்பட்டு இன்றுவரை பழைய முறைப்படியே கல் கிரைண்டரில் மாவு அரைப்பது, மசாலாக்களை சொந்தமாகத் தயாரிப்பது என வாடிக்கையாளர்கள் விரும்பும் சுவையில் உணவுகளை வழங்குகிறது. இத்தனை வருடங்களாக தக்கவைத்து வரும் சுவையும், வாடிக்கையாளர்கள் அளிக்கும் பாராட்டுமே காரணம் என்கின்றனர் ஊழியர்கள்.

``கல் கிரைண்டர்ல மாவு அரைக்க கொஞ்சம் சிரமமாதான் இருக்கும். உளுந்து தனியா போடணும், அரிசி தனியா போடணும். ஒவ்வொண்ணும் தனித்தனியா அரைச்சு முடிக்க, 4-5 மணி நேரம் ஆகும். இன்னைக்கு இருக்குற சின்ன ஹோட்டல்ல கூட மாவு அரைக்குற மெஷினுக்கு மாறிட்டாங்க. அதுல வேலை மிச்சம்.. நேரம் மிச்சம்.. ஆனா நம்ம கையால அரைக்குற டேஸ்ட் அதுல வராது.

கையால அரைக்கும் போதுதான் இட்லி மிருதுவா இருக்கும். காஞ்சிபுரத்துல எங்க கடை இட்லி ரொம்ப பிரபலம். வாடிக்கையாளர்கள் கொடுக்குற உற்சாகத்தால தான் இன்னும் நாங்க மெஷினுக்கு மாறாம இருக்கோம். திடீர்னு இட்லியோ, போண்டாவோ காலியானாகூட கல்லுல மாவு அரைச்சு தான் செய்வோம். இந்த வேலைதான் எங்களுக்கு திருப்தியா இருக்கு.." என்கின்றனர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மாவு அரைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஹோட்டல் ஊழியர்கள் முத்துராஜா மற்றும் பரமசிவம்.

நண்பர்கள் குழு

தொடர்ந்து 43 ஆண்டுகளாக நண்பர்கள் குழு ஒன்று தினமும் காஞ்சிபுரம் ஆரியபவனுக்கு உணவருந்த வருகிறது. ஆர்டர் செய்துவிட்டு அவர்கள் காத்திருந்த சமயத்தில், அவர்களிடம் பேச்சு கொடுத்தோம்...

சுதாகர்: ``ருசிக்காகவே இங்க வர்றோம். அதுக்கு அப்புறம் பார்த்தீங்கன்னா உபசரிப்புதான் முக்கிய காரணம். சின்னதா குறை இருந்து அதை நாம சொன்னாலும் உடனே சரி செஞ்சிருவாங்க. காலையில சூடா சாப்பிடுற இட்லி + பொங்கல் + சாம்பார் காம்பினேஷனை அடிச்சுக்கவே முடியாது. சாயங்காலம் இங்க கிடைக்கிற போண்டா -சாம்பருக்கு போட்டியா எனக்குத் தெரிஞ்சு எந்தக் கடையுமே காஞ்சியில இல்ல".

பிரகாஷ்: ``இட்லி, தோசையைத் தாண்டி அதுக்கு கொடுக்குற சட்னி வகைகளும் இங்கே பிரமாதமா இருக்கும். காபி அவ்ளோ ருசியா இருக்கும். காபில போய் என்ன ருசின்னு கேக்குறீங்களா? அதுதான் இந்த ஹோட்டலோட ஸ்பெஷலே"

DR.சுந்தர வதனம்: `` ஒரு ஹோட்டலுக்கு 40 வருஷத்துக்கும் மேல வர்றோம்னா. அந்த ஹோட்டலுடைய சுவை, தரம் எந்தளவுக்கு இருக்கும்னு பாருங்க. கையால மாவு அரைக்கிறாங்க. சொந்தமாக இவங்களே மசாலா தயாரிக்கிறதுனால தான் எங்களுக்கு இங்க சாப்பிடும்போது ஹோட்டலுங்கிறதை மறந்து, வீடு மாதிரி உணர வைக்குது".

பேசிக்கொண்டிருக்கும் போது இடையில் ஆரிய பவனின் ஈவினிங் ஸ்பெஷல் போண்டா குருமா வந்தது. வாங்கி சாப்பிட்டவாறே பேச ஆரம்பித்தார், அதே பகுதியிலுள்ள பூர்ணிமா ஹோட்டலின் உரிமையாளார் சுகுமார். ``கடைசில கவுண்டமணி காமெடி மாதிரி ஆகிருச்சுல.. நானும் பக்கத்துல ஹோட்டல் வச்சிருக்கேன். இருந்தாலும் ஈவினிங் மறக்காம இங்க வந்துருவேன். என்னோட ஃபேவரைட் இதோ இந்த போண்டா குருமா தான். நானும் நிறைய ஊர்ல சாப்பிட்டுருக்கேன். இப்பவரைக்கும் இது கொடுக்குற டேஸ்ட் எங்கேயும் கிடைக்கல. அதுதான் இங்க நாங்க தொடர்ந்து வர்றதுக்கான காரணம்" என்றார்.

ஆரியபவன் ஹோட்டல் உரிமையாளர்கள் பரமானந்தன் & வெங்கட் ராமனிடம் பேசினோம்...

``45 வருஷம் ஆயிடுச்சு. ஆரம்பிக்கும்போது இந்தளவுக்கு இந்த ஹோட்டல் வரவேற்பைப் பெறும்னு நாங்க எதிர்பார்க்கல. இங்க சுத்தி இருக்கறவங்க எல்லாரும் நடுத்தர மக்கள்தான். இவங்களுக்கு திருப்தியான சுவையில், நியாயமான விலையில் கொடுக்கணும்ங்கிறதுதான் முதல் நோக்கமா இருந்துச்சு. அப்புறம் மக்களோட பேராதரவோட கொஞ்சம் கொஞ்சமா வளர ஆரம்பிச்சு, இங்க வந்து நிக்குது. காஞ்சிபுரத்துல யார் கேட்டாலும் ஆர்யபவன்னா டேஸ்ட்டுன்னு சொல்லுவாங்க. அது என்னைக்கும் மாறாக்கூடாதுன்னு இன்னிக்கு வரை கையால மாவு அரைச்சு, தரமான உணவுகளைத் தயார் செய்யறோம்.

காலை, மதியம், மாலை, இரவுன்னு எல்லா வேளையும் உணவு தயாராகும்போது முதல்ல நாங்க டேஸ்ட் பண்ணிருவோம் அதுக்கு அப்புறம் ஏதாவது மாற்ற வேண்டி இருந்தா சொல்லி மாத்திருவோம்.

காமாட்சி அம்மன், சங்கர மடத்துக்கு வந்துட்டுப் போறவங்க இங்கேயும் மறக்கமா வந்திருவாங்க... முன்னாடி இந்தப் பகுதியில ஷூட்டிங் நடக்கும் போது ரஜினிகாந்த், தேங்காய் சீனிவாசன், சுலோச்சனா, ஸ்ரீகாந்த், ஸ்ரீதேவின்னு பலரும் இங்கே வந்து சாப்பிட்டு இருக்காங்க, இங்கிருந்தும் அவங்களுக்கு சாப்பாடும் போகும். வர்ற கஸ்டமர்ஸ் எல்லாம் ஹோட்டலை டெவலப் செய்யச் சொல்வாங்க. ஆனா எங்களுக்குத் தயக்கமா இருக்கு. எங்களைப் பொறுத்தவரை பழைமையான இந்த லுக் தான் எங்களோட அடையாளமா பார்க்குறோம். இப்ப இருக்குற தலைமுறையினர், அந்தக் காலத்து ஹோட்டல் எப்படி இருந்ததுனு தெரிஞ்சக்கணும், அந்த ஃபீலிங்கை கொடுக்க நினைக்குறோம் அவ்ளோ தான்" என்றனர்.

பாரம்பர்யத்தையும், தரத்தையும் மக்கள் எப்போதும் ஆதரிக்க விரும்புகிறார்கள் என்பதற்கு ஆர்ய பவன் ஹோட்டல் ஓர் உதாரணம். தரத்துக்கு ஏற்ற விலை, நிறைவான சுவை எங்கு கிடைத்தாலும் அங்கு மக்கள் கூட்டம் நிரம்பும் என்பது சந்தேகமில்லை.


மேலும் படிக்க `ரஜினி, ஸ்ரீதேவியெல்லாம் வந்து சாப்பிட்டிருக்காங்க...; - பாரம்பர்யம் மாறாத காஞ்சி மைசூர் ஆரியபவன்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top