`பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து' - வலியுறுத்தும் நிதிஷ்குமார்... கைவிரிக்கும் நிர்மலா சீதாராமன்!

0

சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பீகார் மாநிலம் பின்தங்கி இருப்பதால், பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று முதல்வர் நிதிஷ் குமார் மத்திய அரசை வலியுறுத்திவருகிறார். ஆனால், அவரின் கோரிக்கையை மத்திய பா.ஜ.க அரசு கண்டுகொள்ளவில்லை.

நிதிஷ்குமார்

இந்த நிலையில், ‘2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க அல்லாத கட்சிகளைக் கொண்ட கூட்டணி மத்தியில் ஆட்சியமைத்தால், பின்தங்கிய அனைத்து மாநிலங்களுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும்’ என்று நிதிஷ்குமார் பேசியிருக்கிறார்.

புவியியல் ரீதியாகவும் சமூக, பொருளாதார ரீதியாகவும் முன்னேறுவதற்கான வாய்ப்பு குறைவாக இருக்கும் மாநிலங்களின் மேம்பாட்டுக்காக, சிறப்பு அந்தஸ்து வழங்கும் முறை 1969-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதன் மூலமாக, மத்திய அரசிடமிருந்து கூடுதல் வரிவருவாய், வளர்ச்சித் திட்டங்களை மாநிலங்கள் பெறலாம். இதன் கீழ் அஸ்ஸாம், நாகாலாந்து, இமாச்சலப்பிரதேசம், மணிப்பூர், மேகாலயா, சிக்கிம், உத்தராகண்ட், தெலங்கானா உள்பட சில மாநிலங்கள் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கின்றன.

நிர்மலா சீதாராமன்

அதைப்போல, பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்று நிதிஷ்குமார் கோரி வருகிறார். அவரின் கோரிக்கையை மறைமுகமாக நிராகரிக்கும் வகையில், ‘எந்த மாநிலத்துக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க நிதிக்குழு பரிந்துரைக்கவில்லை’ என்று கூறியிருக்கிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். இந்த நிலையில்தான், 2024-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் பா.ஜ.க அல்லாத கூட்டணிக் கட்சிகளின் ஆட்சி அமைந்தால், பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என்று நிதிஷ்குமார் கூறியிருக்கிறார்.

நிர்மலா சீதாராமன் கருத்துக்கு பீகார் மாநில நிதியமைச்சர் விஜய்குமார் சௌத்ரி எதிர்வினையாற்றியிருக்கிறார். ‘பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்குவது குறித்து நிதி ஆயோக்கில் விவாதிக்கப்பட்டுவருகிறது. இந்த நேரத்தில், மத்திய நிதியமைச்சர் இவ்வாறு பேசியிருப்பதன் மூலம் இதற்கு முட்டுக்கட்டைப் போடுவதாக அமைந்துவிட்டது. பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு நிதி அளிக்கப்படாவிட்டால், மாநிலங்களுக்கு இடையேயும் பிராந்தியங்களுக்கு இடையேயும் ஏற்றத்தாழ்வுகள் உருவாக்கும்” என்று கூறியிருக்கிறார் விஜய்குமார் சௌத்ரி.

நிதிஷ் குமார்

பீகார் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்பவர்கள், ‘பீகார் மாநிலத்தின் வளர்ச்சி, தேசிய சராசரியைவிட அதிகமாகவே இருக்கிறது. ஆனாலும், நாட்டிலேயே ஏழ்மையான நிலையில் பீகார் இருக்கிறது. எனவே, இந்த மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட வேண்டும்’ என்று வலியுறுத்துகிறார்கள்.

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2013-ம் ஆண்டு பா.ஜ.க-வுடனான கூட்டணிலிருந்து விலகி, லாலு பிரசாத் யாதவ் தலைமையிலான ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் கூட்டணியில் இணைந்தது நிதிஷ்குமாரின் கட்சி.

நிர்மலா சீதாராமன்

பிறகு, 2017-ம் ஆண்டு அந்தக் கூட்டணியிலிருந்து விலகி, பா.ஜ.க-வுடன் மீண்டும் கூட்டணி அமைத்தது நிதிஷ்குமாரின் கட்சி. கடந்த ஆண்டு பா.ஜ.க கூட்டணியை விட்டு விலகி ராஷ்டிரீய ஜனதா தளத்துடன் மீண்டும் கைகோத்த நிதிஷ்குமார், ‘பா.ஜ.க-வுடன் கூட்டணி வைப்பதைவிட உயிரை மாய்த்துக்கொள்வேன்’ என்று சமீபத்தில் கூறினார். எனவே, கடுமையான எதிர்நிலையில் இருக்கும் இருக்கும் நிதிஷ்குமார் ஆட்சி நடைபெறும் பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மத்திய அரசு தயாராக இல்லை என்பதை வேறு வார்த்தைகளில் நிர்மலா சீதாராமன் உறுதியாகத் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.


மேலும் படிக்க `பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து' - வலியுறுத்தும் நிதிஷ்குமார்... கைவிரிக்கும் நிர்மலா சீதாராமன்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top