திருமணம் தாண்டிய உறவுகள் பெரும்பாலான நேரங்களில் விபரீதத்தையே ஏற்படுத்துகிறது. உத்தரப்பிரதேசத்தில் அது போன்ற ஒரு உறவில் இருந்த கணவன், மனைவியிடம் வசமாக சிக்கிக்கொண்டார். ஆக்ராவில் உள்ள சிகந்திரா என்ற பகுதியை சேர்ந்த சஞ்சய் திவாரி என்ற வாலிபருக்கு திருமணமாகிவிட்ட நிலையில், அவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்தார். அவரை அடிக்கடி வெளியிடங்களுக்கு அழைத்து செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.
இந்நிலையில், சிகந்தரா நெடுஞ்சாலையில் இருக்கும் ஹோட்டல் ஒன்றுக்கு வழக்கம் போல் தனது காதலியை சஞ்சய் அழைத்து சென்றார். அவர் ஹோட்டலுக்குள் காதலியுடன் செல்வதை பார்த்த ஒருவர் இது குறித்து அவரின் மனைவிக்கு தகவல் கொடுத்துவிட்டார். உடனே சஞ்சய் மனைவி இரவு 8.30 மணிக்கு ஹோட்டலுக்கு வந்தார். அவர் ஹோட்டலில் தனது கணவன் தங்கியிருந்த அறைக்கு சென்று கணவனையும், அவர் அழைத்து வந்த காதலியையும் சரமாரியாக அடித்து உதைத்தார். அப்போது, சஞ்சயுடன் வந்த இளம் பெண் ஹோட்டலில் இருந்து தப்பி ஓடினார்.

ஹோட்டலில் ஒரே கூச்சல் குழப்பம் ஏற்பட்டதால் ஹோட்டல் ஊழியர்கள் இது குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் உடனே சம்பந்தப்பட்ட ஹோட்டலுக்கு விரைந்து வந்தனர். ஹோட்டலில் சஞ்சயை அவரின் மனைவி துவம்சம் செய்து கொண்டிருந்தார். பின்னர் போலீஸார் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
சஞ்சய்-க்கு எதிராக அவரின் மனைவி புகார் எதுவும் கொடுக்கவில்லை. இதனால் இவ்விவகாரத்தில் போலீஸார் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் சென்றுவிட்டனர். இச்சம்பவத்தால் ஹோட்டலில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் படிக்க திருமணம் மீறிய உறவு; காதலியுடன் ஹோட்டல் அறைக்குச் சென்ற கணவன் - புரட்டி எடுத்த மனைவி!