பரிகாரக் கோயில்: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் கொங்கு நாட்டு வைத்தீஸ்வரன் கோயில் அற்புதங்கள்!

0
தீராத நோய்களை எல்லாம் தீர்த்து வைப்பவர் ஈசன். அதனால் அவரே `வைத்தீஸ்வரர்' என்றும் `மருந்தீசர்' என்றும் பல தலங்களில் எழுந்தருளிக் கோயில்கொண்டுள்ளார். அப்படி ஒரு தலம் திருப்புள்ளிக்குவேளூர். காவிரியின் வடகரையில் அமைந்துள்ள திருத்தலங்களில் ஒன்று திருப்புள்ளிருக்குவேளூர்.

இத்தலத்து இறைவனை 'பேராயிரம் பரவி வானோர் ஏத்தும்பெம்மானை' என அப்பர் பெருமான் போற்றியுள்ளார். இத்தகைய பழைமையும் பெருமையும் வாய்ந்த தலத்திற்கு இணையாக, கோவையில் ஒரு அற்புதமான தலம் அமைந்துள்ளது.

கோவை மாவட்டம் சூலூரில் அமைந்துள்ளது அருள்மிகு வைத்தியநாதர் திருக்கோயில் ஒன்று. சுமார் 1,300 பழைமை வாய்ந்த இந்தத் தலத்தில் ஈசன் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

ஸ்ரீவைத்தியநாதர்

சூலூரின் பழைமையான பெயர், 'சூரலூர்' என்பதாகும். சூரல் என்பது நாணல் வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். இத்தாவரம் நொய்யல் நதியின் தென்கரையில் மிகுதியாகக் காணப்பட்டதால் இப்பகுதிக்குச் சூரலூர் என்ற பெயர் ஏற்பட்டதாகக் கூறுகின்றனர்.

இப்பெயர் கி.பி.18 ம் நூற்றாண்டு வாக்கில் சூரனூர் என்றாகி , நாளடைவில் சூலூர் என மருவியது. கரிகாலச் சோழன் தனக்கு ஏற்பட்ட தோஷம் நீங்குதற் பொருட்டு, கொங்கு நாட்டில் பல சிவாலயங்களை எழுப்பித் திருப்பணி செய்தான். அவற்றுள் இக்கோயிலும் ஒன்று என்கிறது சோழனின் பூர்வ பட்டயம்.

கரிகாலச் சோழன் இப்பகுதியில் சுயம்பு மூர்த்தம் ஒன்றைக் கண்டு, அதற்குக் கல்ஹாரக் கோயில் ஒன்றை எழுப்பினான். பின்னர், காலச் சூழலில் பல்வேறு திருப்பணிகள் நடைபெற்று இத்தலம் சிறப்புறக் காட்சியளிக்கிறது.

இக்கோயிலில் சிவபூஜைகள் தங்கு தடையின்றி நடைபெற, கிபி.1168-1195 ஆண்டுகளில் ஆட்சி புரிந்த மூன்றாம் வீரசோழவர்மன் கொடை அளித்த செய்தியைச் சூலூரை அடுத்த செலக்கரச்சல் பகுதியில் உள்ள மாரியம்மன் கோயில் கல்வெட்டில் காண முடிகிறது.

இரு புறமும் நீர் சூழ்ந்த பகுதியில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் இத்திருத்தலம் அமைந்துள்ளது. இக்கோயிலில் தெற்கு நோக்கி ஒரு வாயிலும், கிழக்கு நோக்கி ஒரு வாயிலும் உள்ளது. கொடி மரத்தையும் கோபுரத்தையும் தரிசனம் செய்துவிட்டு, இத்தலத்தின் கிழக்கு வாசல் வழியாக உள்ளே சென்றால் மஹா மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை ஆகியவை அழகுறக் காட்சியளிக்கின்றன. மஹா மண்டபத்தினுள் நுழையும்போது, கன்னிமூல கணபதியும் அரச மர விநாயகரும் அருட்காட்சி வழங்குகின்றனர். தர்மசாஸ்தா, தட்சிணாமூர்த்தி, வன்னி விநாயகர், லிங்கோத்பவர், சரஸ்வதி, மகாலட்சுமி, துர்கை ஆகியோர் சந்நிதி கொண்டு அருள்கிறார்கள்.

தையல்நாயகி

அர்த்தமண்டபத்தினுள், மூலவர் சுயம்பு மூர்த்தமாக எழுந்தருளியுள்ளார். லிங்கத் திருமேனியானது சதுர வடிவ ஆவுடையாரில் இருத்தப்பட்டுள்ளது. நாகாபரணம் சாற்றி மலர் அலங்காரத்துடன் காட்சியளிக்கும் ஈசனைக் காண இரு கண்கள் போதாது எனப் பக்தர்கள் நெகிழ்கின்றனர்.

மூலவர் சந்நிதிக்கு இடப்புறம் தையல்நாயகி கருணை மழைப்பொழியும் வகையில் அபயஹஸ்தமாய் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார்.

ஈசனுக்கு வலப்புறம் முருகப் பெருமான் நின்ற கோலத்தில் தேவியருடன் நற்காட்சி நல்குகிறார் .சைவ- வைணவ ஒற்றுமைக்கு அடையாளமாக இத்தலத்தில் தன்வந்திரி பெருமாளுக்கு இங்கு சந்நிதி உள்ளது.

சுவாமியும் அம்பாளும் நிகழ்த்திய அற்புதங்கள் சிலவற்றை நம்மிடம் பகிர்ந்து கொண்டனர் உள்ளூர் பக்தர்கள்.

ஒரு முறை இப்பகுதியில் வசிக்கும் கணபதியம்மாள் என்பவரின் கனவில் தோன்றிய ஈசன், "எனக்குத் தேவையான பொருள் ஒன்று உங்களிடத்தில் உள்ளது. அதை என்னிடம் கொண்டு வந்து கொடுங்கள்" என ஆணையிட்டாராம்.

கணபதியம்மாள், 'என்ன பொருள் அது' எனத் தேடி அலைந்தார். தோட்டத்திற்குச் சென்று பார்த்தபோது, நந்தியின் கொம்புபோல இரு கொம்புகளுடன் முற்றிய தேங்காய்கள் இரண்டு இருந்தன. உடனே அவற்றைக் கொண்டுவந்து சுவாமிக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார் கணபதியம்மாள். அவற்றுள் ஒரு தேங்காயினை இன்றளவும் சந்நிதிக்கு வலப்புறத்தில் உள்ள கண்ணாடி பெட்டியில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர் ஊர் மக்கள்.

கோவை சூலூர் ஸ்ரீவைத்தியநாதர் கோயில்

ஒருமுறை திருப்பூரில் உள்ள வங்கி அலுவலர் ஒருவர் உடல் முழுதும் சிறுசிறு கட்டிகள் தோன்றி அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சை பலனளிக்கவில்லை. இக்கோயிலின் மகத்துவம் பற்றிக் கேள்வியுற்று, இத்தலத்திற்கு வந்தார்.

சுவாமிக்கும் அம்பாளுக்கும் அபிஷேகம் செய்த நல்லெண்ணெய் பிரசாதமாக அவருக்கு வழங்கப்பட்டது. அதை முறையாகப் பயன்படுத்தியதன் பலனாக, 6 மாத காலத்தில் பரிபூரண நலம் பெற்றிருக்கிறார் அந்த பக்தர்.

இவ்வாறு தீராத பிணிகள் கூட, இத்தலத்திற்கு வந்து பூஜை செய்தால் தீரும் என்று நம்புகிறார்கள். பக்தர்கள்.

இத்தலம் திருமணப் பரிகாரத் தலமாகக்வும் திகழ்கிறது. திருமண தடை உள்ள்வர்கள் இங்குள்ள நந்திகேஸ்வரருக்கு நல்லெண்ணெய் காப்பிட்டு மாலை சாற்றி வழிபாடு செய்து பிறகு பிரசாதமாகத் தரப்படும் மாலையை அணிந்துகொண்டு வைத்தியநாதசுவாமி பூஜையில் கலந்து கொண்டால் திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கை.

இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளில் மூலவருக்கு அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெறுகிறது. ஒன்பான் இரவு, சூர்தடிந்த பெருவிழா, சிவராத்திரி, கார்த்திகை தீபம் போன்ற விசேஷ நாள்களில் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தற்போது இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கான திருப்பணிகள் நடைபெற்று வருகிறது.
சிவனிரவு

மகாசிவராத்திரி சிறப்பு சங்கல்பம்

வரும் பிப்ரவரி 18-ம் நாள் சனிக்கிழமை அன்று மகாசிவராத்திரி நாள். இந்தத் திருநாளில் ஈசனைப் போற்றி பூஜித்து செய்யப்படும் வழிபாடுகள் அதீத மகத்துவம் கொண்டவை. மகாசிவராத்திரி நாளின் சக்தி விகடன் சார்பில் 4 கால பூஜைகள் மகத்துவம் வாய்ந்த 4 சிவத்தலங்களில் நடைபெற இருக்கின்றன. 

முதல் காலம்: தென் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் ஆலயம்

2-ம் காலம்: திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் ஆலயம்

3-ம் காலம்: திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் ஆலயம்

4-ம் காலம்: திருவாவடுதுறை கோமுக்தீஸ்வரர் ஆலயம்.

எண்ணியவை யாவையும் அருளும் இந்த சிறப்புச் சங்கல்ப வழிபாட்டில் நீங்களும் சங்கல்ப முன்பதிவு செய்து உங்கள் பிரார்த்தனையை சமர்ப்பிக்கலாம்.

முன்பதிவு மற்றும் சங்கல்பம் விவரங்களுக்கு: 97909 90404

முன்பதிவு செய்ய இங்கே க்ளிக் செய்யவும்.


மேலும் படிக்க பரிகாரக் கோயில்: தீராத நோய்களைத் தீர்த்து வைக்கும் கொங்கு நாட்டு வைத்தீஸ்வரன் கோயில் அற்புதங்கள்!
பொறுப்புத் துறப்பு: இந்த இணையதளத்தில் உள்ள அனைத்து தகவல்களும் பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வெளியிடப்படுகின்றன. இந்தத் தகவலின் முழுமை, நம்பகத்தன்மை மற்றும் துல்லியம் குறித்து எங்கள் இணையதளம் எந்த உத்தரவாதத்தையும் அளிக்காது. இந்த இணையதளத்தில் ( www.justinfointamil.co.in) நீங்கள் காணும் தகவல்களின் மீது நீங்கள் எடுக்கும் எந்த நடவடிக்கையும் கண்டிப்பாக உங்கள் சொந்த ஆபத்தில் இருக்கும். எங்கள் வலைத்தளத்தின் பயன்பாடு தொடர்பாக ஏற்படும் இழப்புகள் மற்றும்/அல்லது சேதங்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

கிரிப்டோகரன்சி என்பது கட்டுப்பாடற்ற டிஜிட்டல் நாணயம், சட்டப்பூர்வ டெண்டர் அல்ல மற்றும் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தகவல்கள் நிதி ஆலோசனை, வர்த்தக ஆலோசனை அல்லது JustInfoInTamil.co.in ஆல் வழங்கப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட எந்த வகையான ஆலோசனைகள் அல்லது பரிந்துரைகளை உள்ளடக்கியதாக இல்லை. எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரை, முன்னறிவிப்பு அல்லது கட்டுரையில் உள்ள வேறு ஏதேனும் தகவலின் அடிப்படையில் எந்தவொரு முதலீட்டிலிருந்தும் ஏற்படும் இழப்புகளுக்கு www.justinfointamil.co.in பொறுப்பேற்காது.

அந்நியச் செலாவணியில் ("Forex") விளிம்புகளில் வர்த்தகம் செய்வது அதிக ஆபத்தை ஏற்படுத்துகிறது மற்றும் அனைத்து முதலீட்டாளர்களுக்கும் ஏற்றது அல்ல. கடந்தகால செயல்திறன் எதிர்கால முடிவுகளின் அறிகுறி அல்ல. இந்த விஷயத்தில், அதிக அளவு அந்நியச் செலாவணி உங்களுக்கு எதிராகவும், உங்களுக்காகவும் செயல்படலாம். நீங்கள் அந்நியச் செலாவணியில் முதலீடு செய்ய முடிவு செய்வதற்கு முன், உங்கள் முதலீட்டு நோக்கங்கள், அனுபவம், நிதி வாய்ப்புகள் மற்றும் அபாயங்களை எடுப்பதற்கான விருப்பம் ஆகியவற்றை கவனமாக மதிப்பீடு செய்ய வேண்டும். உங்கள் ஆரம்ப முதலீட்டை ஓரளவு அல்லது முழுமையாக இழக்க நேரிடும். எனவே, மோசமான சூழ்நிலையில் நீங்கள் முழுமையாக இழக்க முடியாத எந்த நிதியையும் நீங்கள் முதலீடு செய்யக்கூடாது. அந்நியச் செலாவணி வர்த்தகத்துடன் தொடர்புடைய அனைத்து அபாயங்களையும் நீங்கள் அறிந்திருக்க வேண்டும் மற்றும் சந்தேகம் ஏற்பட்டால் நிதி ஆலோசகரைத் தொடர்புகொள்ளவும்.

எங்கள் இணையதளத்தில் உள்ள சில செய்திகள் JustInfoInTamil ஆல் உருவாக்கப்படவில்லை அல்லது திருத்தப்படவில்லை. அந்த இணையதளத்தின் நேரடி இணைப்பையும் செய்தியின் கீழே கொடுத்துள்ளோம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.
கருத்துரையிடுக (0)

buttons=(Accept !) days=(4)

We use cookies to improve your experience on our site and to show you relevant advertising. To find out more, read our Privacy Policy.
Accept !
To Top